Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "sasikala"

sasikala

0 299
சென்னையில் போட்டோ ஷூட் நடத்திய சசிகலா -
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை வைத்து, அதிமுகவினர் ஒரு புகைப்பட படப்பிடிப்பு ஒன்றை சமீபத்தில் செய்துள்ளார்கள். அதில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
 
33 வருடங்களாக திரைமறைவு அரசியல் நடத்தி வந்த சசிகலா, ஜெ.வின் மறைவிற்கு பின், அரசியலில் அடி எடுத்து வைத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், எப்படியாவது அவரை முதலமைச்சர் பதவியில் அமர வைக்க வேண்டும் என அவரின் குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் இந்தியா டுடே பத்திரிக்கை சென்னை, கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் நடத்திய கான்க்ளேவ் விவாத கருத்தரங்க மாநாட்டை சசிகலா கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அதன்பின் இந்தியா டுடே நிருபர் கேட்ட சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். 
 
இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று, அதே ஹோட்டலில் சசிகலாவை வைத்து ஒரு புகைப்பட படப்பிடிப்பு நடந்தது என்பது.
 
அதில் சசிகலா பல்வேறு கோணத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளாராம். அந்த புகைப்படங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் தயாரிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் கட்-அவுட், பேனர்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 

Post expires at 1:57am on Saturday February 11th, 2017

0 2796
சசிகலா என் பொண்டாட்டிதான்.! எனக்காக சிலுவையும் சுமப்பார்..! நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி.!

என்னுடையஅரசியல் நடவடிக்கைகளில் சசிகலா எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ, அரசியலை விட்டு விலக சொல்லியோ ஒரு போதும் சொல்லவில்லை.

கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல்,  நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில், தன்னுடைய நகைகளை அடகு வைத்து குடும்பத்தை காப்பாற்றியவர் சசிகலா.

ஏசு சிலுவையை தூக்கி, தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல, என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கி சசிகலா.” என உருக்கமாக பேசுகிறார் நாஞ்சில் சம்பத்.

சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச் செயலாளராக ஏற்று கொள்வதில் எந்த தகுதியும் எனக்கு இல்லை.

எனச்சொல்லி கடந்த இருதினங்களாக அரசியலில் பரபரப்பை கிளப்பி வந்த நாஞ்சில் சம்பத், திடீரென இப்படி அந்தர் பல்டி அடிக்கிறாரே என யோசிக்க வேண்டாம்.

தனக்கான சிலுவையை சுமப்பவர் என நாஞ்சில் சம்பத்  உருகுவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அல்ல. அவரது அன்பு மனைவி சசிகலாவைப்பற்றி.

தன் மனைவி சசிகலாவை  பற்றி முதல் முறைாக பத்திரிக்கைக்கு நாஞ்சில் சம்பத் பத்திரிக்கை ஒன்றுக்கு  பேட்டி அளித்தார் அப்போதுதான் இவ்வாறு அவா் கூறினார்.

“1989 ஆகஸ்ட் 17-ம்தேதி எனக்கு அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் திருமணம் நடந்தது.

ஆகஸ்ட் 29-ம் தேதியே நான் காரமடை பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டேன்.

அதைத் தொடர்ந்து 2012 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நான் வீட்டில் இருப்பது போன்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை.

என்னுடைய பருவகாலங்கள் அனைத்தையும் நான் கட்டிலில் செலவழிக்கவில்லை. மேடையில் செலவழித்தேன்.

அன்பும், ஆதரவும் உள்ள கணவனாக நான் இருந்திருக்கிறேன். ஆனால் நம்முடைய சமூக அமைப்பில் ஒரு பெண் எதிர்பார்க்கின்ற எதையும் என் மனைவிக்கு நிறைவாக செய்ய முடியவில்லை என்ற குற்ற மனப்பான்மை எனக்கு உண்டு.

ஆனால் அவள் அதை பொருட்படுத்தியதே இல்லை. சேலம் மத்திய சிறைச்சாலைத் தவிர, தமிழகத்தில் இருக்கிற 7 மத்திய சிறைச்சாலைகளிலும் வாசம் செய்தவன் நான்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டவன். மேடையிலேயே வத்தலக்குண்டில், குளித்தளையில் தாக்கப்பட்டவன். நான் காயம் பட்டு வீட்டுக்குச் செல்லும் போது கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறாளே தவிர, இனிமேல் மேடைக்கு போகக்கூடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை. என்னை நன்கு புரிந்துகொண்டவள் சசிகலா.

என்னுடைய குழந்தைகள் என்னுடைய மகள் மதிவதினி, என் மகன் சரத்பாஸ்கர் அவர்கள் வளருவதை நான் நேரடியாக பார்த்து அனுபவிக்கவில்லை.

என்னுடைய வயதான தாய் தந்தையின் இறுதிக்காலத்தில், அவர்களை அவள் பரிவோடு பார்த்துக் கொண்டது என்னை நெகிழ வைத்தது.

என்னுடைய குடும்பத்தில் ஓரளவு வருவாய் ஈட்டுபவன் நான்தான். அதை என்னுடைய சகோதரர்களுக்கும், ரத்த சொந்தங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறபோது அவள் ஒருநாளும் தடுத்ததில்லை.

என்னுடைய குணமும், இயல்பும் அறிந்து, என்னுடைய குடும்பத் தேரை அவள்தான் இன்னும் இழுத்துச் செல்கிறாள். ஒருநாள் கூட எனக்கு அதுவேண்டும் இதுவேண்டும் என்று கேட்டதில்லை.

கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல்  நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில் தன்னுடைய நகைகளை அடகு வைத்து எங்கள் குடும்பத்தினுடைய தேவைகளை அவள் நிறைவேற்றுவதற்கு முன்வந்தாள்.

எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை அவளிடத்திலே போய் ஒப்படைத்துவிடுவேன். இதுவரை நான் மருந்து கடைக்கோ, மளிகைக்கடைக்கோ, துணிக்கடைக்கோ சென்றதில்லை.

பருப்பு வாங்குவதிலிருந்து பயணச்சீட்டு வாங்குவது வரை எல்லாமே அவள்தான். எல்லா வேலைகளையும் ஏசு சிலுவையை தூக்கி தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல செய்கிறாள். என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கியாக அவள் இருக்கிறாள்.

அரசியல் நடவடிக்கைகளில் எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ எதுவும் சொன்னதில்லை.

அவள் சுட்டுத்தருகிற வரட்டியும், மட்டன் குழம்பும் அவள் வைத்துக் கொடுக்கும் மீன்குழம்பும் அலாதியான சுவையுடையது.

என்னுடைய குடும்பத்தில் அவள் வந்தபிறகு என்னுடைய சுமையையெல்லாம் தூக்கி வைத்துவிட்டேன். எனக்கு பொதுவாழ்வே சுமையாகிப்போனது.

கனமாகவும் இருக்கிறது. இதை இறக்கி வைக்க முடியாமல் திண்டாடுகிறேன். ஆனால் என் குடும்பச் சுமையை அவளே தாங்கிக் கொண்டாள்.

இதன் மூலம் கொடுத்துவைத்தவர்களின் பட்டியலில் நான் இருக்கிறேன். அவர்களுக்காக செலவழிக்கிற வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. என்னுடைய மகளுக்கு மெடிக்கல் சீட்டு கிடைக்காத போது, அவள் சொல்லிதான் ஹோமியோபதி மருத்துவராக்கினோம்.

அவள் தலைக்குள் ஒரு கட்டி வந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

அவளுக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் என்று சொன்னார்கள். அறுவைசிகிச்சசை நடைபெறும் அன்று வைகோ அவர்கள் திருச்சி வழக்கறிஞர் மாநாட்டை நடத்தினார். நாளைக்கு உனக்கு அறுவைசிகிச்சை. வழக்கறிஞர் மாநாடு இருக்கிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றேன்.

‘அறுவைசிகிச்சையை டாக்டர்கள்தானே செய்கிறார்கள். மகளும் மகனும் உடன் இருக்கிறார்கள். நீங்கள் போய்வாருங்கள்.’ என்றாள். அதைக் கூட அவள் தாங்கிக் கொண்டார்.

அவள் துயரப்படுகிற போதெல்லாம் துணையாக நான் இல்லை என்ற கவலை எனக்கு உண்டு.

எங்க கிராமத்தில் எங்க குடும்பம்தான் செல்வாக்குள்ள குடும்பம். அப்பா இருக்கும் போது எல்லோரும் தேடி வருவார்கள். எல்லோரையும் உபசரித்து அனுப்புவதிலே, அவள் ஒருநாள் கூட முகம் சுழித்ததில்லை.” என்கிறார்.

இரண்டு சசிகலாவை பற்றியும் என்ன நினைக்கிறீர்கள் என அவரிடம் கேட்டோம். “இந்த சசிகலா அரசியலில் திணிக்கப்படுகிறவர்.

அந்த சசிகலா என்னுடைய குடும்பத்தை வழிநடத்துபவர். இந்த சசிகலாவை நான் பார்த்ததில்லை. பழகியதில்லை. ஒருநாள் கூட நான் அறிமுகமானதில்லை.

ஆனால் அந்த சசிகலா என்னை மணம்முடித்த நாள்முதலாக கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்கிற ஒரு குலமகளாக இருக்கிறாள்.”  எனச்சொல்லி பேட்டி விகடன் இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார் நாஞ்சில் சம்பத்..

நாஞ்சில் சம்பத்துக்கு ஏணியும் சசிகலாதான், அரசியலை விட்டு வர காரணமானவரும் சசிகலாதான்.

நன்றி விகடன்.

Post expires at 2:46am on Monday February 6th, 2017

0 387
பூரண மதுவிலக்கு! ஸ்கூட்டி பைக்! முதலமைச்சர் ஆனதும் முதல் அறிவிப்பு!

சசிகலாவை முதலமைச்சர் ஆக்குவதற்கான காய் நகர்த்தல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம் நடராஜன்.

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் சசிகலாவிற்கு இல்லையாம். தற்போது கட்சியின் உள் விவகாரங்களில் திவாரகரணை பின்னுக்கு தள்ளி வருகிறாராம் டி.டி.வி தினகரன்.

அவர் அந்த தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. சசிகலாவின் முதல் சாய்ஸ் ஆண்டிப்பட்டி தொகுதி தான் என நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாது சாய்ஸ் திருமங்கலம் தொகுதியாம். ஏற்கனவே மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ செல்லூர் ராஜு, திருமங்கலம் எம்.எல்.ஏ அமைச்சர் உதயகுமார், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கத் தமிழ் செல்வன் ஆகியோர் ராஜினாமா கடிதம் அளித்து விட்டார்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வென்று முதலமைச்சரான தொகுதி ஆண்டிப்பட்டி என்பதால் அங்கு போட்டியிட ஆர்வமாக இருக்கிறாராம் சசிகலா.

பெண்களுக்கு அவர் மீது வெறுப்பு இருப்பதாக கூறப்படுவதால், முதலமைச்சராக பதவி ஏற்றதும், மதுவிலக்கு மற்றும் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி பைக் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post expires at 2:33am on Monday February 6th, 2017

0 640
முதல்வராக பதவி ஏற்பதை தள்ளி போட்டார் சசி! அதிகாரத்தை கைமாற்ற அதிரடி திட்டம்!

தமிழக முதல்வா் ஜெயலலிதா இறந்த பின்பு அவரது பொது செயலாளா் பதவிக்கு சசிகலாதான் வரவேண்டும் என்று அனைத்து சீனியா்கள் கோரிக்கை வைத்தனா்.

இதனை தொடா்ந்து சசிகலா குடும்பத்தினா் அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினரை சந்தித்து ஆதவும் திரட்டினா்.

பொதுக்குழுவில் சின்னம்மாதான், இனி அம்மா என்கிற முடிவு எடுத்து அவரை பொதுச் செயலாளராக தோ்வு செய்தனா்.

சில தினங்களில் அவா் அமைதியான முறையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில்  பொதுச் செயலாளராக பதவியும் ஏற்றார்.

மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்தும் வருகிறார். ஜல்லிகட்டு பிரச்சனையில் திமுக செயல்தலைவா் ஸ்டாலின்  விடுத்த அறிக்கைக்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் அவா் முதல்வராக பதவி ஏற்கும் எண்ணம் தற்சமயம் இல்லை என்று கூறப்படுகிறது.

முதல்வர் பதவி மீது சசிகலாவுக்கு ஒரு கண் இருக்கிறது. இதற்காக, பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து இறங்குமாறு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயக்குமார், தம்பிதுரை மூலம் நெருக்கடி கொடுத்தார்.

ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கிற ஆள் நான் இல்லை என்பது போல, பன்னீர்செல்வம், தன்னிச்சையாக முதல்வர் பதவியில் தொடர்கிறார்; வேகமாக செயல்படுகிறார்.

சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு,விரைவில் வெளியாகப் போகும் தகவல் வந்து, சசிகலாவை டென்ஷன் ஆக்கி உள்ளது.

குதூகலமாக இருந்த போயஸ் தோட்டம், சில நாட்களாக அமைதியாகி உள்ளது.  தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால், கனவுகள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்று, சசிகலா தரப்பினர் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனால், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து பதவி இறங்கச் சொல்வது உள்ளிட்ட பலவேறு பணிகளையும், தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தீர்ப்பால் முதல்வர் கனவு கலைந்தால், டி.டி.வி.தினகரனிடம் அனைத்து அதிகாரங்களையும் தரலாம் என சசிகலா எண்ணியுள்ளார்.

இப்போதே போயஸ் கார்டனில் அனைத்து அதிகாரங்களுடன் தினகரன் வலம் வருகிறார். கட்சியை வழி நடத்தும் பொறுப்பையும் தினகரனிடமே தரலாம் எனவும் சசிகலா எண்ணுகிறார். இவ்வாறு கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post expires at 4:28pm on Sunday February 5th, 2017

0 275
ஜெயலலிதா பொதுக்குழு... சசிகலா பொதுக்குழு! என்ன இருந்தது... என்ன இல்லை...?

ண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம், ‘தீபாவளி’ திருவிழாபோலக் கொண்டாடப்படும். போயஸ் தோட்டத்தில் இருந்து கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கட்சியினர் வழிநெடுக நின்று வரவேற்பார்கள். முக்கால் மணி நேரத்தில் கடக்க வேண்டிய இந்த 18 கிலோ மீட்டர் தூரத்தை… ஜெயலலிதாவின் கார், கடந்துசெல்ல ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே அவர் செல்வார்.

போயஸ் கார்டன் கேட் திறந்து ஜெயலலிதாவின் கார் வெளியே வரும்போது… அஞ்சுலெட்சுமி என்ற அ.தி.மு.க பெண் தொண்டர் ஒருவரின் குரல் விண்ணைத் தொடும் அளவுக்கு, ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று குரல் கொடுப்பார்.

ஆரத்தி எடுத்து… பூசணிக்காய் உடைத்துத்தான் வழியனுப்புவார். போயஸ் கார்டனில் இருந்து இரட்டை விரலை காட்டிப் புன்னகைத்தவாறு செல்லும் ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சிப் பொங்கி இருக்கும். வழிநெடுக நின்று வரவேற்கும் தொண்டர்கள் முகத்திலும் அத்தகையதொரு சந்தோஷம் விளையாடும். ஃப்ளெக்ஸ் பேனர்கள், கொடி தோரணங்கள், வாழை மரங்கள் என வழிநெடுகிலும் கழகத் தொண்டர்கள் கட்டிவைத்துக் கலக்குவார்கள். இந்த உற்சாகப் பயணம், மண்டபத்தை நெருங்கும்போது அங்கு வேறு விதமான வரவேற்பு ஜெயலலிதாவுக்கு காத்து இருக்கும்.

ஸ்ரீவாரி மண்டபம் அருகே… ஒரு கிலோ மீட்ட தூரத்தில் இருந்தே பேண்டு வாத்தியங்கள், சென்னை மேளம் முழங்க வரவேற்பார்கள். குதிரை மீது அமர்ந்த வீரர்களின் வரவேற்பு, பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் எல்லாம் அல்லோலப்படும். ஸ்பெஷல் மேடை அமைத்து ஜெயலலிதா – எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிபரப்ப டான்ஸ் தூள் கிளப்புவார்கள். சில இடங்களில் ஸ்பீக்கர் செட் கட்டி பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். மண்டபத்தின் நுழைவாயில் அருகே மகளிர் அணியினர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஜெயலலிதாவுக்கு கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார்கள். கூட்டம் நடக்கும் மண்டப வாசல் அருகே நின்று மூத்த நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவை பவ்யமாக வரவேற்பார்கள்.

அதன் பிறகு, பொதுக்குழு கூடும். ஜெயலலிதாவுக்கு, தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று அடிக்கும் விசில் சத்தங்களும் கைதட்டல்களும் காதை பிளக்கும். நடுநாயகமாக ஜெயலலிதாவுக்கு இருக்கை போடப்பட்டு இருக்கும். அதற்கு இரு பக்கமும் இரண்டு அடி தூரம் விட்டுத்தான் மற்றவர்கள் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். தனது சேரில் ஜெயலலிதா உட்கார்ந்தவுடன்… மகளிர் அணியினர் ஜெயலலிதாவுக்கு ஆளுயர மாலை அணிவிப்பார்கள். அதன் பிறகு பொதுக்குழு நடவடிக்கைகள் தொடங்கும். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான நூர்ஜகான், தனது வெண்கலக் குரலால் சிறுசிறு முன்னுரையுடன் நிகழ்ச்சிகளை நகர்த்திக் கொண்டிருப்பார். வரவேற்பு, தீர்மானங்கள், முக்கிய நிர்வாகிகள் சிலரின் பேச்சுகள், இறுதியாக ஜெயலலிதாவின் பேச்சோடு கூட்டம் முடியும். கடந்த ஆண்டு நிகழ்வுகளையும் அடுத்த ஆண்டுக்கான திட்டங்களையும் மேற்கோள் காட்டி ஜெயலலிதா பேசுவார். அது, ஜெயலலிதாவின் அரசியல் நகர்வுகளைத் தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்கும். ஜெயலலிதா தனது பேச்சை முடிக்கும்போது, ”ஊருக்கு பத்திரமாகப் போய்ச்சேர வேண்டும்” என்று அறிவுரை சொல்லித்தான் தனது பேச்சை முடிப்பார். ”சைவம், அசைவம் என்று இரண்டு பிரிவுகளிலும் உணவு தயாராக உள்ளது. அனைவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்” என்றும் கேட்டுக் கொள்வார்.

பொதுக்குழுவில் பரிமாறப்படும் சைவை உணவுகளை ஒவ்வொன்றாகக் கேட்டுச் சாப்பிட்டுவிட்டுத்தான் ஜெயலலிதா வீட்டுக்குப் புறப்படுவார். காரில் ஜெயலலிதா உட்கார்ந்த பிறகு, அங்கு விருப்பப்படும் தொண்டர்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் பூங்கொத்துகளைப் பெற்றுக் கொள்வார். இப்படித்தான் கலகலப்பாக முழு உற்சாகத்துடன் பொதுக்குழு நடந்து முடியும். ஆனால், கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் அழுது வடிந்தது. போயஸ் தோட்டத்தில் இருந்து வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கொடி தோரணங்கள் இல்லாமல்… சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பொதுக்குழு நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜெயலலிதாவைக் பார்ப்பதற்காக காத்து நின்ற தொண்டர்கள் யாரையும் இந்தப் பொதுக்குழுவில் சாலை ஓரங்களில் பார்க்க முடியவில்லை.

‘பொதுக் குழுவுக்கு வாருங்கள்’ என்று கட்சியினருக்கு அனுப்பப்படும் அழைப்பிதழ்கள்கூட இந்த முறை தபால் இலாகா மூலம் அனுப்பாமல் பொதுக்குழு உறுப்பினர்களைச் சென்னைக்கு வரவழைத்து அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் கொடுத்தார்கள். அழைப்பிதழ்களைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. மார்கழிப் பனியையும் கண்டுகொள்ளாமல் காலை 7 மணிக்குள் மண்டபத்துக்குள் ஆஜராகிவிட்டார்கள் கழக நிர்வாகிகள். அமைச்சர்கள் அனைவரும் 8 மணிக்கு ஏசி பஸ்களில் அழைத்து வரப்பட்டார்கள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 9 மணிக்கு கடைசி ஆளாக பொதுக்குழுவுக்கு வந்தார். போயஸ் கார்டனில் இருந்து டவேரா காரில்… ஜெயலலிதாவின் பிரதயேக சேர், அவரின் அதிகாரப்பூர்வ போட்டோ ஆகியவை எடுத்து வரப்பட்டு பொதுக்குழு மேடையின் நடுநாயகமாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

ஜெயலலிதா முன்னிலையில் பொதுக்குழு நடக்கும்போது இரண்டு வரிசைகள் அளவுக்குத்தான் சேர்கள் போடப்பட்டு நிர்வாகிகள் அமரவைக்கப்படுவார்கள். ஆனால், இந்தத் தடவை ஐந்து வரிசைகளில் 45 நிர்வாகிகள் மேடையில் உட்கார வைக்கப்பட்டனர். ஜெயலலிதா மரணத்தையடுத்து அமைச்சராக பதவி ஏற்றபோது கண்ணீர் சிந்தாத ஓ.பன்னீர்செல்வம் கண்ணீரோடுதான் பொதுக்குழுவில் தனது பேச்சைத் தொடங்கினார். அதே பாணியில்தான் தீர்மானங்களை வாசித்த ஒவ்வொரு நிர்வாகியும் கண்ணீர் வடித்தனர். 14 தீர்மானங்களையும் வாசித்து முடித்தபோது பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் அமைதியே குடிகொண்டிருந்தது. பொதுக் குழு தீர்மானங்களை நிறைவேற்றச் சம்பிரதாயங்கள் முடிந்தவுடன்… ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் அந்தத் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு போயஸ் தோட்டத்துக்குப் பறந்தனர். சசிகலாவைச் சந்தித்து, பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தகவலையும், தீர்மானங்களையும் கொடுத்தபோது… சசிகலாவும் ஜெயலலிதாவாகவே மாறி இருந்தார். அவரது உடையில், திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. டி.டி.வி.தினகரன், இளவரசி மகன் விவேக் என்று மன்னார்குடி சொந்தங்கள் புடைசூழ ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி பொதுச்செயலாளர் நியமனப் பதவியை 11.30 மணிக்கு நல்ல நேரத்தில் ஏற்றுக் கொண்டார்.

சசிகலாவைச் சந்திக்க சென்ற ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் பொதுக்குழு கூட்டத்துக்கு வரவே இல்லை. அங்கிருந்தபடியே கூட்டத்தை முடிக்கச் சொன்னார். ”சசிகலா, பொதுக் குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்” என்று திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்க, பொதுக் குழு முடிந்தது. மதிய சாப்பாடு தயார் நிலையில் இருந்தாலும்… அந்த உணவு அரங்கம் காலியாகவே கிடந்தது.

Post expires at 10:59am on Monday January 30th, 2017

0 396
சசிகலா, எம்.ஜி.ஆரின் ஆளுமல்ல, ஜெ.,யின் ஆளுமல்ல!: அன்றே சொன்னார் அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., வலம்புரி ஜான் !

திமுக பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் வி.கே. சசிகலா.

இந்த நிலையில், அதிமுக அ.தி.மு.க., முன்னாள், எம்.பி.யான மறைந்த வலம்புரி ஜான் எழுதிய, ‘வணக்கம்’ என்ற புத்தகத்தின் பல வரிகள் நினைவுக்கு வருகின்றன.

அந்த புத்தகத்தில், சசிகலாவும், நடராஜனும் எப்படியெல்லாம் ஜெ.,யை கைப்பாவையாக வைத்து இருந்தனர், அவரது உறவினர்களை திட்டமிட்டு, எப்படி பிரித்தனர் என, அப்போதே எழுதியுள்ளார் வலம்புரிஜான்.

அந்த புத்தகத்தில் இருந்து, சில வரிகள்: “ஜெயலலிதா, சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார்.

படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத் தான் இருக்கிறார்.

ஜெ.,யின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெ.,யோடு சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர். தங்களுக்கு சகாயம் செய்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருச்சி சவுந்தர்ராஜன் போன்றவர்கள் கூட, தாங்கள் இல்லாமல், ஜெ.,யை பார்க்க கூடாது என்ற நிலைக்கு மாற்றினர்.

எல்லா பாதகங்களையும் செய்து, தங்களை அதிகார இயந்திரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள சசிகலாவும், நடராஜனும் இதை செய்தனர்.ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., விசுவாசிகளை, சசிகலாவால் பழிவாங்கினார்; சசிகலாவோ, ஜெ., விசுவாசிகளையே பழிவாங்கினார்.

நடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை, ஜெ.,யின் பார்வையில் படாமல் துரத்தினர். ஜெ.,யை துாக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, ’36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளார்’ என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான்.

இதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த, பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டுத் திட்டமே காரணம்.

தங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும், நடராஜனும் உருக்குலைத்து விட்டனர்.

இந்த சசிகலா, எம்.ஜி.ஆர்., ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல; சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும்; அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார்”

– இப்படி, சசிகலா பற்றி, 20 ஆண்டுகளுக்கு முன்பே வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.

Post expires at 10:54am on Monday January 30th, 2017

0 23
"சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால் அம்மாவும் அதிமுகவும் இருந்திருக்கவே முடியாது": பொதுக்குழுவில் வளர்மதி பகீர்

நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத்தொடங்கி உள்ளன.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது.

அதிமுகவுக்கு புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, நேற்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஷ்வரா திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

இதில் அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்வது குறித்து, முன்மொழிந்தபோது, சிலர் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுக்குழு நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறி விட்டதாக கூறப்பட்டது.

பொதுக்குழுவில் கலந்துகொண்ட பெரும்பாலோனோர் சசிகலாவுக்கு ஜால்ராவே போட்டு வந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சரான பா.வளர்மதி பொதுக்குழுவில் பேசியதாவது, அவரது பேச்சு பொதுக்குழுவினரையே அதிர செய்துவிட்டதாம். பொதுக்குழு மற்றும் செயற்குழுவினர்களும் வாயடைந்து போய்விட்டனர்.

வளர்மதி:

1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார். அதிமுகவும் இருந்திருக்காது என்று பகீர் தகவலை கொடுத்து அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பொன்னையன்:

அதிமுக கொள்கை பரப்பு செயலாளரான பொன்னையன், அதற்கு ஒருபடி மேலே சென்று, சின்னம்மா மட்டுமல்ல, சின்னம்மா குடும்பமே அதிமுக எனும் கட்சிக்கு ஓடாய் உழைத்தது என ஒரே போடாய் போட்டார்.

எம்ஜிஆர் காலகட்டத்தில் அதிமுக வினரால் கொடிக்கூட ஏற்ற முடியாத நிலை இருந்தது. சின்னம்மா சகோதரர் திவாகரன், அரிவாளுடன் சென்று பல கிராமங்களில் அதிமுக கொடியேற்றி னார் என பரபரத்தார்.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவை பார்க்கவிடாததற்கு ஒரே காரணம், அம்மாவுக்கு இன்பெக்ஷன் ஆகிவிடும் என்பது மட்டுமல்ல, அந்த இன்பெக்ஷ்ன் உங்களுக்கு வந்துவிடும் என்பதால்தான் இந்த முடிவை எடுக்கப்பட்டதாக பொன்னையன் கூறியது அதிமுக உண்மை தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை தோற்றுவித்ததாம்.

வெறும் தலையாட்டி பொம்மைகளாகவும், செம்மறியாடுகளாகவும் பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த கூட்டம், ஜெ. இருக்கும்வரை ஒரு வார்த்தைகூட பேச அருகதையற்ற, அடிமைகள், இன்று அவர் இல்லை என்றதும் வாய்க்கு வந்தபடி உளறுகிறார்கள்.. என்று பல உண்மை விசுவாசிகள் முனுமுனுத்தனர்.

பொதுக்குழுவில் அதிமுக தலைவர்கள் பேசிய பேச்சை, விலாவரியாக வெளியிட்டுள்ளது பிரபல தமிழ் வாரம் இருமுறை வெளியாகும் இதழ்.

Post expires at 10:46am on Monday January 30th, 2017

0 946
வருகிறது சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு..! மன்னார்குடி கும்பலுக்கு செக்..!! பன்னீர் பரவசம்..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்தினர் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி குன்ஹா சம்பந்தப்பட்ட நால்வருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெங்களூருவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு மற்றொரு நீதிபதியால் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்கள்.

இதன் பிறகு உச்சநீதிமன்றத்தில் மறு விசாரணைக்காக எதிர்க்கட்சிகளால் மறுபடியும் தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி தலைமை பொறுப்பை ஏற்க சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் முயற்சி செய்து வருவதும் தெரிகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் தங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தில் தான் சசிகலா கட்சி பொறுப்பை ஏற்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பன்னீர்செல்வம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதிமுகவின் தலைமை பதவி தானாகவே வர இருக்கிறது. இதனால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post expires at 2:42pm on Friday January 27th, 2017

0 2313
சோறு இல்லை…தூக்கம் இல்லை.. உறவினர் மரணம்..தெரியாது…! முதல்வரை எழுப்பிக் காட்டிய தனி ஒருவள்..!!

 

கோடி கோடியா சொத்து இருக்கு..ஊழல் பண்ணாங்க..மன்னார்குடி கும்பல் அட்டகாசம்..முதல்வரை கொலை செய்ய சதி செய்கிறார்…இப்படி எத்தனை எத்தனை பழி  பாவங்கள்..!

இடையில் அரசியலில் குழப்பம் பண்ணவும்.குழி  தோண்டவும்  எத்தனை எதிரிகள்..! சசிகலா என்கிற தனி மனுஷி எதைபற்றியும் கவலை கொள்ளவே இல்லை..!

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்பதுபோல முதல்வரை குணப்படுத்தி அவரை வீட்டிற்கு அழைத்து போவதிலேயே குறியாக இருந்தார்.

அப்போலோ மருத்துவர்கள் கூறுவது போல, சசிகலா சாப்பிடுவதே இல்லை…! தூங்குவது இல்லை..சதா முதல்வர் பற்றிய கவலை தான்..இன்னும் சொல்லப் போனால் முதல்வர் இல்லம் திரும்பும் போது சசிகலா மேடம் நோய்வாய்பட்டுவிடுவாரோ என்று அஞ்சுகிறோம்.. என்கிறார்.

மேலும் சசிகலாவிற்கு ஒருமுறை ட்ரிப்ஸ் ஏற்றுங்கள் என்றோம் அதைக்கூட மறுத்துவிட்டார்  என்கிறார்கள் மருத்துவமனை டாக்டர்கள்..!

உண்மைதான்…தனி ஒரு மனுஷியாக சசிகலாநடராஜன்  சாதித்துக் காட்டினார் தான்..!

அது தான் நட்பு..அது தான் உறவு..!!

RANDOM POSTS

0 14
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில்...