Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "official party"

official party

0 122
அதிகாரப்பூர்வமான கட்சி எது- தேர்தல் ஆணையம் எப்படி தீர்மானிக்கும்?

‘சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு’ என வடிவேல் ஒரு படத்தில் கேட்பார். அதுபோல பிரச்சினையில்லாத அரசியல் கட்சிகள் சாத்தியமில்லை. பல சமயங்களில் இத்தகைய உட்கட்சி பிரச்சினைகள், கட்சியையே இரண்டாக உடைத்துவிடும். தமிழகத்தில் அத்தகைய காட்சிகளை நிறையவே நாம் கண்டிருக்கிறோம். இப்படி ஒரு கட்சி இரண்டாகப் பிளவுறும்போது, அந்த இரண்டு பிரிவுகளில் எந்த பிரிவுக்கு கட்சியின் பெயர், சின்னம் போன்றவை கிடைக்கும்? அதை தேர்தல் ஆணையம் எப்படி முடிவுசெய்யும்? தேர்தல் ஆணையம் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்சியின் சின்னம், பெயர் தொடர்பான பிரச்சினைகளில் முடிவடுக்கிறது?

1968-ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (நிறுத்திவைத்தல் மற்றும் வழங்கல்) ஒழுங்குபடுத்தல் விதிமுறையானது, தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கவும் சின்னங்களை ஒதுக்கவும் அதிகாரமளிக்கிறது.

அந்த விதிமுறையின் 15-வது பத்தியில், ஆணையமானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் எதிரெதிர் குழுக்கள் அல்லது பிரிவுகள் கட்சிப் பெயர் அல்லது சின்னத்தை உரிமைகோரும்போது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரமளிக்கிறது.

இந்த 15 வது பத்தி, கட்சியில் பிளவு அல்லது இணைப்பு குறித்து தீர்மானிப்பதற்கான ஒரே அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உண்டென்கிறது. உச்சநீதிமன்றமும் 1971-ல் நடந்த இத்தகையதொரு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை உறுதிசெய்தது.

கட்சியின் ஒரு பிரிவு அல்லது குழுவை அதிகாரப்பூர்வமானதாக முடிவுசெய்யும்முன், அந்த அரசியல் கட்சியின் அமைப்புரீதியான உறுப்பினர்கள் மற்றும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட் ட சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களின் பெரும்பான்மை ஆதரவு யாருக்கென தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்திக்கொள்ளும்.

கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட அலுவல் உறுப்பினர்கள் பட்டியலை ஆய்வுசெய்யும். அந்த அமைப்பிலுள்ள உச்ச குழுவுக்கு அலுவல் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் எத்தனை பேர் ஆதரவு, எதிர்க் குழுவுக்கு எத்தனை பேர் ஆதரவு என ஆராயும். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களில் எத்தனை பேர் ஒரு குழுவை ஆதரிக்கிறார்கள் என்று பார்க்கும். இந்த உறுப்பினர்கள் அளித்த உறுதிச் சான்றிதழையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும்.

இரண்டு குழுக்களில் எந்த குழுவுக்கு அலுவல் உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவைக் குழுக்களின் ஆதரவு பெரும்பான்மையாக இருக்கிறதோ, அதையே அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக முடிவுசெய்யும். கட்சிப்பெயரும் சின்னமும் அதற்கே கிடைக்கும். மற்ற பிரிவை தனிக் கட்சியாகப் பதிவுசெய்யும்.

கட்சியிலிருந்து பிரிந்துவந்த இரண்டு குழுக்களில் எதுவொன்றையும் பெரும்பான்மை ஆதரவுடையதாக தேர்ந்தெடுக்கமுடியாத குழப்பமான சூழல் நிலவும்பட்சத்தில், தேர்தல் ஆணையும் கட்சிப் பெயரையும் சின்னத்தையும் முடக்கிவிட்டு, இரண்டு குழுக்களையும் தனிக் கட்சியாகப் பதிவுசெய்துகொள்ளும். பழைய கட்சிப் பெயருடன் முன்னாலோ பின்னாலோ ஏதோ ஒரு அடைமொழிசேர்த்து புதுக் கட்சிப் பெயரை உருவாக்கிக்கொள்ளலாம். ஒருவேளை கட்சியில் பிளவேற்பட்ட சமயத்தில் தேர்தல் இருந்து உடனடியாக முடிவெடுக்கமுடியாத சூழலில், இரு பிரிவையும் தனித்தனி பெயரில், வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட சிபாரிசுசெய்யும்.

Post expires at 1:53am on Tuesday February 7th, 2017

RANDOM POSTS

0 68
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி...