Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "modi"

modi

0 107
பொங்கலுக்கு விடுமுறை இல்லை: தமிழர்களை வஞ்சிக்கும் மோடி
கட்டாய அரசு விடுமுறை தினத்தில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர். 

இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் தலைவர் துரைப்பாண்டியன் கூறியதாவது:-
இதை மாற்றக்கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். புஜா விடுமுறை கணக்கை சரி செய்வதற்காக இப்படி செய்துள்ளார்கள். பொங்கல் பண்டிகை தினத்தை கட்டாயம் விடுமுறை தினமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் யாரும் அலுவலகத்துக்கு செல்ல மாட்டோம். இதைதான் எங்களால் செய்ய முடியும், என்று கூறினார்.

Post expires at 2:11am on Friday February 10th, 2017

0 16620
சின்னம்மா’ என்றெல்லாம் அழைக்க முடியாது..! முதல்வர் ‘பொளேர்’ அடி..! பீதியில் கார்டன்..!?

சசிகலா இதை ஓரளவு எதிர் பார்த்தார். ஜெ. இல்லை என்றால் பன்னீர் நம் பேச்சைக் கேட்க மாட்டார் என்று.

அதனால் தான் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தினார். ஆனால், டெல்லிக்கு தெரியும் எடப்பாடி தங்கள் பேச்சைக் கேட்கமாட்டார் என்று.

அவர்கள் பன்னீரை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர். டெல்லி நினைத்தபடியே பன்னீர் பிரதமரின் செல்லப் பிள்ளை ஆனார்.

நடிகர் சரத்குமார்,கருணாஸ்,சீமான்,வைகோ என வெளியில் இருந்தெல்லாம் சசிகலாவை சின்னம்மா..சின்னம்மா என்று வாய் நிறைய   அழைக்க பன்னீர் மட்டும் வாய் திறக்கவே இல்லை.

இது சசிகலா தரப்பில் கடும் கோபத்தை உண்டு பண்ண, தூது போனார்கள் சசியின் அடிப்பொடிகள். என்னது நான் சின்னம்மான்னு சொல்லனுமா..? என்று சீறிய முதல்வர்,

எனக்கு என்னை பெத்த அம்மாவை விட ஜெ.,அம்மா தான் அம்மா. சாகுற வரைக்கும்  அம்மா மட்டும் தான்.  போய் உன் வேலையைப் பாரு என்று சொல்லி  அனுப்பினாராம்.

டெல்லி போகும் முன்பே இந்த போடு போட்டவர், வந்து ஆடிய ஒரு ஆட்டத்தில் கோட்டையே கதி  கலங்கிப் போய் இருக்கிறது.

இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் பொதுக் குழு  கூட இருக்கிறது. சசி டீம்   பீதியில் உறைந்து போய் இருக்கிறது..!

அசத்துங்க  முதல்வர் பன்னீர் சார்..மக்களும் இளைஞர்களும் உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறோம்..வாழ்த்துக்கள்.

Post expires at 11:46am on Sunday January 22nd, 2017

0 296

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். தமிழில் முத்திரை, கம்பீரம் படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திடீரென்று அரசியலில் குதித்தார். ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார்.

இதில் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. டெபாசிட்டையும் இழந்தார். இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்துடன் கவர்ச்சி உடை அணிந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் சுதந்திர தின விழாவை கொண்டாடினார்கள். இந்த விழாவில் பங்கேற்க ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அவரும் கவர்ச்சி உடை அணிந்து விழாவுக்கு வந்து இருந்தார்.

அந்த ஆடையில் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் இருந்தன. முன்புறம் பின்புறம் என்று ஆடை முழுவதும் மோடி படங்களாக காணப்பட்டன. இதை பார்த்ததும் கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

அத்துடன் மோடி ஆடையை உடுத்திக்கொண்டு இருக்கும் தனது படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு இருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராக்கி சாவந்த் செயலை பலர் கண்டித்து உள்ளனர். பிரதமரை அவமதித்த அவர் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

மோடி உருவப்படத்துடன் ஆடை அணிந்தது ஏன்? என்பது குறித்து ராக்கி சாவந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவரது உருவப்படத்துடன் ஆடை அணிந்து ஒபாமா நகரில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டேன். மோடியை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அவரும் இந்தியர்கள் மீது அக்கறை கொண்டு இருக்கிறார். எனவே மோடி உருவப்படத்துடன் நான் ஆடை அணிந்து சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது தவறு அல்ல”.

இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.

0 128
இரண்டாவது முறையாக பிரதமர் மோடியின் பட்டம் குறித்த தகவல்களை தர டெல்லி பல்கலைக்கழகம் மறுப்பு

இரண்டாவது முறையாக பிரதமர் மோடியின் பட்டம் குறித்த தகவல்களை தர டெல்லி பல்கலைக்கழகம் மறுப்பு

சமீபத்தில் பிரதமர் மோடியின் பி.ஏ. பட்டப்படிப்புச் சான்றிதழ் விவரங்களை அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்திடம் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டம் கேட்டிருந்தார். ஆனால் பல்கலைக்கழகம் அதை தர மறுத்துவிட்டது. இதனை அடுத்து மோடி பட்டம் குறித்து கடும் சர்ச்சை ஏற்பட்டது.

பிறகு மந்திரி அருண் ஜெட்லி மற்றும் அமித் ஷா ஆகியோர் மோடி பட்டம் பெற்றதற்கான ஆதாரங்களை செய்தியாளர்கள் கூட்டத்தில் காண்பித்தார்கள். அதேபோல் டெல்லி பல்கலைக்கழகமும் பிரதமர் மோடியின் பி.ஏ. பட்டப் படிப்புச் சான்றிதழ் உண்மையானதுதான் என்றும், மோடி, கடந்த 1978-ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். அவர் 1979-ஆம் ஆண்டு பட்டம் வழங்கப்பட்டது என்று விளக்கம் அளித்தது.

மோடியின் பி.ஏ. மதிப்பெண் சான்றிதழில், அவரது பெயர் “நரேந்திர குமார் தாமோதர்தாஸ் மோடி’ என்றும், எம்.ஏ. சான்றிதழில் “நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்றும் உள்ளது. அந்த சான்றிதழ் போலியானவை என்றும், அவற்றில் வேறுபாடுகள் உள்ளன என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடியின் பி.ஏ., பட்டம் குறித்து டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் முகமத் இர்ஷாத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டார். இதற்கு பதிலளிக்க டெல்லி பல்கலை மறுத்து விட்டது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் குறித்து மாணவர்களுக்கு மட்டுமே தகவல் தர முடியும் என பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ”தகவல் அறியும் சட்டத்தின் கீழ் டெல்லி பல்கலைக்கழகம் மோடியின் பட்டம் குறித்த தகவல்களை வெளியிட அவரிடம் அனுமதி கேட்க வேண்டுமே தவிர, விண்ணப்பத்தை மறுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

RANDOM POSTS

0 68
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி...