Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "men"

men

தண்ணீர் குறைவாக குடிப்பதும் தவறு, அளவுக்கு அதிகமாக குடிப்பதும் தவறு. மேலும், அவரவர் உடல் எடை, வயது, உடல்நலம், வேலைபாடு குறித்து நீரின் அளவு வேறுபாடும். அளவுக்கு குறைவாய் தண்ணீர் பருகவதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. நீர்வறட்சி உடல் பாகங்களில் செயற்திறன் குறைபாடு ஏற்பட காரணமாகிறது. முக்கியமாக சிறுநீரகத்தின் செயல்பாட்டை இது குறைக்கிறது.

கற்றாழை ஜீஸ் பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்பார்கள். உண்மை தான் செரிமானம், உடல் எடை குறைக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க இது ஊக்குவிக்கிறது. ஆனால், அளவுக்கு மீறினால் தசை பிடிப்புகள், கால்சியம் குறைபாடு போன்றவை உண்டாகும் அபாயமும் இருக்கிறது.

பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் நமது எலும்புகளின் வலிமையை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் இது அதிகமாக பால் உணவுகள் எடுத்துக் கொள்வது, உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைய காரணமாகி விடுகிறது. மேலும், இது இரத்தசோகை ஏற்படவும் காரணியாக அமைகிறது.

நட்ஸ் அளவாக சாப்பிடுவது உடற்திறனை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்க உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக நட்ஸ் உட்கொள்வது உடல் எடை அதிகரிக்க காரணியாக அமைகிறது. ஏனெனில், இவற்றால் கலோரிகள் அதிகம்.

நார்சத்து மிகுதியாக உள்ள ஓட்ஸ் செரிமானத்தை ஊக்குவித்து, உடல் எடை குறைக்கவும் சீராக பயனளிக்கிறது. மேலும் இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஓட்ஸ் உண்பதால், குமட்டல், வாயுப் பிரச்சனைகள் உண்டாக காரணியாகிவிடுகிறது.

– ஆண்கள் இந்த உணவுகளை தவிர்த்து விடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

35 வயதான ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்
35 வயதான ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்
ஆண்கள் 35 வயதை அடைந்த பின்னர் ஒரு சில விசயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் 35 வயதிற்கு மேல் ஆண்களின் உடலினுள் ஒரு சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதில் முதன்மையானது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய ஆரம்பித்து, அதனால் குறைவான பாலுணர்வு உந்துதல், முன்பை விட உடலின் ஆற்றல் குறைவாக இருப்பது போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

என்ன தான் கலோரி நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருந்தாலும், 35 வயதிற்கு பின் தொப்பை வரக்கூடும். இதுப்போன்று பல விசயங்களை 35 வயதை அடைந்த ஆண்கள் பின்பற்றுவதோடு, ஒரு சிலவற்றை தவிர்க்கவும் வேண்டும்.

கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால், பல்வேறு தீவிர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உண்டாக கூடும். இப்போது 35 வயதை அடைந்த ஆண்கள் பின்பற்ற வேண்டியவைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

35 வயதிற்கு மேல் புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால், அது ஆண்மையையே அழித்துவிடும். ஏற்கனவே 35 வயதிற்கு மேலே டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் என்பதால், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக்கொண்டிருந்தால், பின் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற முடியாமல் போய்விடும். எனவே நீண்ட நாட்கள் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

துள்ளும் இளமை காலத்தில், செரிமான மண்டலம் நன்கு செயல்படும். அப்போது எந்த வகையான உணவை உண்டாலும், உணவு செரித்து விடும். ஆனால் 35 வயதிற்கு மேல், செரிமான மண்டலத்தின் சக்தி குறைய ஆரம்பிப்பதால், அப்போது தெருவோரக்கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத்தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், வாய்வு பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

எப்போதாவது ஒரு முறை அளவாக மது அருந்துவதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆனால் 35 வயதிற்கு மேல் அடிக்கடி அதிகமாக குடித்தால், அதனால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

ஆரோக்கியத்தின் மீது அக்கறை இல்லாமல், 35 வயதிற்கு மேலும் ஜங்க் உணவுகளை கண்டபடி உட்கொண்டு வந்தால், உடல் பருமன், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளால் சந்தோஷமான வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தான். எனவே ஜங்க் உணவுகளை தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ரிலாக்ஸ் செய்கிறேன் என்று சில ஆண்கள் டிவி பார்ப்பார்கள். ஆனால் அப்படி டிவி பார்ப்பதால், கண்கள் பாதிக்கப்படுவதோடு, உளவியல் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதற்கு பதிலாக, குடும்பத்தினருடன் சிரித்து பேசவோ அல்லது வெளியே கோவிலுக்கு செல்ல வேண்டும். இதனால் மனம் அமைதியடைவதோடு, ரிலாக்ஸ் ஆகும்.

சரியான நேரத்தில் சாப்பிட்டு, தூங்கும் பழக்கத்தை 35 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத்தவிர்க்கலாம்.

வயது அதிகரிக்க அதிகரிக்க, உடலில் ஆற்றல் குறைவாகத் தான் இருக்கும். அதிலும் 35 வயதை எட்டிவிட்டால், சிறப்பாக செயலாற்ற சரியான நேரத்தில் தவறாமல் உணவை உட்கொள்ள வேண்டும்.

35 வயதை ஒருவர் எட்டிவிட்டால், ஆரோக்கியத்தின் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும். அது ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும். எவராயினும், 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

ஒருவேளை புறக்கணித்தால், அதனால் தீவிரமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் வயதாக வயதாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும். எனவே கவனம் அவசியம்.

0 363
ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!

ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!

சைட்டில் ஆரம்பித்து, கிறுக்குத்தனமான காதல் வெளிபாடு, காதல் தோல்வி வலி என அனைத்தும் ஆண்களிடம் தான் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், பெண்கள் வெளிப்படுத்தும் சைகைகளை புரிந்துக் கொள்ளவே ஆண்களுக்கு நாட்கள் பல ஆகிறது என்பது தான் உண்மை. காதலினால் வலியும் சுகமும் இரண்டையுமே அதிகம் அனுபவிப்பது அவர்கள். பெண்களின் கற்பனை வாழ்க்கை சொர்கத்தை காட்டிலும் சிறந்தது.

அதே போல, வலியை ஆண்கள் வீட்டிலும் ரோட்டிலும் காட்டி வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால், பெண்கள் எங்கும் வெளிபடுத்த முடியாத சமூகத்தில் நாம் வைத்திருக்கிறோம். எனவே, அவர்கள் சின்ன சின்ன விஷயகளை கூட மிகவும் பார்த்து, பார்த்து நுணுக்கமாக தான் செய்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு பிடித்த ஆண்களுக்கு அவர்கள் விரும்பி செய்யும் செயல்கள் சிறிதாக தெரிந்தாலும், அதன் பின்னே இருக்கும் காதல் மிகவும் பெரியது…

காலை வணக்கம்

பெண்கள் எப்போதுமே தான் விரும்பும் ஆணுக்கு தான் எழுந்ததும் முதல் செய்தியை அனுப்புவாள். வெறும் காலை வணக்கமாக ஆண்கள் கருதினாலும், அதன் பின்னணியில் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியத்தின் வெளிபாடு தான் இது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

கண்களை விரித்து பார்ப்பது

பிரேமம் திரைப்படத்தில் சாயப் பல்லவி கண்களை விரித்து பார்ப்பது போல தான். சில சமயங்களில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த ஆண்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையிலும் அப்படி ஒரு பெண் இருந்தால், தயங்காமல் திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.

சின்ன சின்ன பரிசுகள்

பெரும்பாலும் ஐம்பது – நூறு ரூபாய் மதிப்பிலான பரிசுகளாக தான் இருக்கும். பர்ஸ், மோதிரம், காப்பு என எதையாவது பரிசளித்துக் கொண்டே இருப்பார்கள் பெண்கள். இதெல்லாம் அவர்கள் மனதில் உங்கள் மீதான விருப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதன் அறிகுறி.

உற்சாகப்படுத்துதல்

சில சமயங்களில் எங்கு சென்றாலும் தங்களுடன் பெண்கள் வர நினைப்பதை ஆண்கள் விரும்பமாட்டார்கள். ஆனால், பெண்கள் அவர்களை உற்சாகப்படுத்தவும், சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளவும் தான் உடன் இருக்க விரும்புவார்கள்.

அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வது

மற்றவர்களை விட தங்களுக்கு உரியவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மனதில் ஆழ பதிந்திருக்கும். வேறு யாரேனும் இதில் போட்டிக்கு வந்தால் பத்திரகாளி ஆகிவிடுவார்கள்.

அசாத்திய அழகு

பெண்களின் உண்மையான அழகு அவர்கள் தூங்கி எழும் அந்த தருணம் தான். களைந்த கூந்தல், முட்டை போன்று விருந்திருக்கும் கண்கள். ஆனால், இந்த அழகுடன் உங்கள் முன் தோன்ற அவர் தயங்குவதில்லை என்றாலே, அவர் உங்கள் மீது விருப்பமாக உள்ளார் என்று தான் அர்த்தம்.

உணர்ச்சிவசப்படுவது

தங்களுக்கு மிகவும் பித்த ஆண் மீது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவர்கள் பெண்கள். அதற்கான உரிமையை நீங்கள் தராமலேயே அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

காதலிக்கிறேன்

உங்கள் காதலிக்கு உங்கள் மீது அளவில்லாத காதல் இருக்கிறது என்பதை, அவர்கள் ஐ. லவ் யூ சொல்லும் எண்ணிக்கையை வைத்தே கண்டறிந்துவிடலாம்.

Click here to get free add list ur shop.com for your business success

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

RANDOM POSTS

0 146
இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் யோகா பயிற்சி முகாம்களை நடத்தி பிரபலமானவர் பாபா ராம்தேவ். பிரதமர் மோடிக்கே நெருக்கமானவர் என்று கூறப்படும் பாபா ராம்தேவ் இன்று விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே மரணம்...