Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "jayalalithaa"

jayalalithaa

0 70
ஜெயலலிதாவை திட்டிய பேராசிரியை...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 7

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4  பகுதி 5 பகுதி 6

‘நீங்கள் தேடுவது, உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது” என்பார் ரூமி. ஆனால், அம்மு விஷயத்தில் அவர் தேடாதது எல்லாம்  வாழ்க்கை முழுவதும் அவரை அதி தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தது.  இதற்கு என்ன காரணம்…  ஏன் வேண்டாமென்றாலும், அவரை வாய்ப்புத் துரத்தியது…? சந்தியாவின் பதில் இப்படியானதாக இருக்கிறது. “அம்முவுக்கும் படிப்பில்தான் மிகுந்த விருப்பம். அப்படி இருந்தும் அம்மு நடிப்புத் துறைக்கு வந்துவிட்டாள் என்றால், அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்?” என்றார் சந்தியா ஒரு நேர்காணலில்.  அவர் வேண்டுமானால், விதி மீதி பழிபோட்டுக் கொள்ளட்டும். ஆனால், விதி மட்டும் அம்முவின் வாழ்வை வடிவமைக்கவில்லை, சந்தியாவும் சேர்ந்துதான் வடிவமைத்திருக்கிறார்.  தன் உள்ளுணர்வு சொல்லும்  பாதையில்  அம்மு செல்லவில்லை… அவர் சென்றது சந்தியா காட்டிய வழியில் தான்.

எதிர்ப்புத்  தெரிவித்த தாத்தா… அடம்பிடித்த அம்மு!

’சின்னட கொம்பே’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சில காட்சிகளைப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதர். நாடகத் துறையில் கோலோச்சிய ஒய்.ஜி.பார்த்தசாரதியை,  ஜனாதிபதியின் மகன் சங்கர் கிரியை, பிரம்மாண்ட இயக்குநர் பந்தலுவைக் கவர்ந்த  அம்முவின் நடிப்பு  ஸ்ரீதரையும் கவர்ந்திருக்கிறது. ஹூம்… கவராமல் போனால்தானே ஆச்சர்யம். ஆன்மாவிலிருந்து கலையை வெளிப்படுத்துபவரை யாருக்குத்தான் பிடிக்காமல்போகும்…? சந்தியாவை அணுகுகிறார்.  “நான் எடுக்கப்போகும், ’வெண்ணிற ஆடை’ படத்தில் அம்முவை கதாநாயகியாக நடிக்கவைக்க விரும்புகிறேன்… உங்களுக்குச் சம்மதமா?” அந்தச் சமயத்தில் உச்சத்தில் இருந்த ஓர் இயக்குநர் கேட்கிறார். மறுக்க விருப்பமில்லைதான்… இருந்தாலும் ஒரு  சிறு குழப்பம்.  தனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோரிடமும் கேட்கிறார். இறுதியாகத் தன் அப்பாவிடமும்.

“அம்முவை நடிக்கவைக்க வாய்ப்புத் தொடர்ந்து வருகிறது… நான் என்ன செய்யட்டும்…?” என்று கம்மியக் குரலில் கேட்கிறார் சந்தியா. அவருக்குத் தெரியும்தானே, தான் நடிப்பதே அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பது!

சந்தியாவை நடிக்க கேட்டபோது தயாரிப்பாளர் கெம்ப்ராஜுவுக்கு ரெங்கசாமி, என்ன பதிலைச் சொன்னாரோ… அதையேதான் இன்னும் உரிமையாக… இன்னும் கோபமாகச் சொல்கிறார். “அம்மு நன்றாகப் படிக்கிறாள். நீயும் உன் தங்கையும் (வித்யாவதி) சினிமாவில் நடிப்பது போதாதா? அம்முவையும் ஏன் சினிமாத் துறைக்கு இழுக்கிறாய்?” என்கிறார் காட்டமாக.

ஆனால், சந்தியா முன் முடிவுடன்தான் இந்தக் கேள்வியையே கேட்டார். ஆம், அவர் முன்பே முடிவு செய்துவிட்டார், அம்முவைத் தொடர்ந்து நடிக்கவைப்பது என்று.

சந்தியா முடிவு செய்தால் மட்டும் போதுமா…? அம்முவின் முடிவுதானே முக்கியம்…! ரெங்கசாமியின் வார்த்தைகளை வேண்டுமானால் புறந்தள்ளலாம். ஆனால், அம்மு முடியாது என்று சொல்லிவிட்டால்… என்ன செய்வது? குழப்பத்துடனே அம்முவிடம் தேன் தடவிய வார்த்தைகளில் கேட்கிறார் சந்தியா, “அம்மு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வருகிறது… எனக்கு நன்கு புரிகிறது உனக்குப் படிப்பின் மீதுதான் விருப்பம் என்று… ஆனால், தொடர்ந்து வரும் வாய்ப்பை நாம் அவமதிப்பது துரதிர்ஷ்டத்தை நாமே அழைப்பதுபோல்… என்ன சொல்கிறாய்?”

அம்மு, அந்தச் சமயத்தில் அழுது அடம்பிடித்துத்தான் விட்டார். ஆம், எப்போதும் அம்மாவை எதிர்த்துப் பேசாத அம்மு, முதன்முறையாக கோபமாக எதிர்த்துப் பேசுகிறார்.  ’‘முடியாது… என்னால் முடியவே முடியாது…’’ என்று வீட்டில் ஒரு சூறாவளியையே உண்டாக்கிவிட்டார். அப்போது அவர் அந்த அளவுக்குப் பிடிவாதமாக இருந்ததற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஆம், அந்தச் சமயத்தில்தான் மெட்ரிக் பள்ளி ரிசல்ட்டும் வந்து இருந்தது. பரீட்சையில் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்த அம்முவுக்கு மேற்படிப்புக்குச் சிறப்பு ஸ்காலர்ஷிப்பும் கிடைத்து இருந்தது. அம்மு இந்த வாய்ப்பைவிடத் தயாராக இல்லை. சந்தியாவும் விட்டுத் தர தயாராக இல்லை.

அம்மு ஒரு முடிவுக்கு வருகிறார். ‘ஏன் இரண்டு குதிரைகளிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்யக் கூடாது… செய்துதான் பார்ப்போமே…?’.

மேற்படிப்பைத் தொடர்ந்துகொண்டே, சினிமாவில் நடிக்க முடிவு செய்கிறார். அதற்கு, சந்தியாவும் சம்மதிக்கிறார்.

 

இப்படியாகத்தான் மேற்படிப்பைக் கைகழுவினார்!

அந்தச் சமயத்தில் ஒரு வழக்கம் இருந்திருக்கிறது. சர்ச் பார்க் பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவிகளும்  ஸ்டெல்லா மேரீஸ்கல்லூரியிலேயே சேர்வார்களாம். ஜெயலலிதாவும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலேயே சேர விரும்பியிருக்கிறார். விரும்பினால் மட்டும் போதுமா…? என்னதான் பெரிய அந்தஸ்த்தில் இருந்தாலும், கல்லூரியில் சேர்வதென்றால் அடிப்படையான சில விஷயங்களைச் செய்ய வேண்டும் அல்லவா…? விண்ணப்பம் வாங்க வேண்டும், விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும், குறிபிட்ட நாளில் விண்ணப்பத்தை கல்லூரித் தேர்வுக் குழுவிடம் அளிக்க வேண்டும்… இந்தக் காலத்து மந்திரிகளின் பினாமிகள் நடத்தும் கல்லூரிகளில் வேண்டுமானால், இதுவெல்லாம் தேவையில்லாமல், பணமே மட்டுமே பிரதானமானதாக இருக்கலாம். ஆனால், அப்போது அப்படி இல்லை.  கடுமையான கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன. அம்முவோ தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து இருக்கிறார். அவரால்  கல்லூரிக்குச் சென்று விண்ணப்பத்தை வாங்கி, பிடித்த பாடத்தை அதில் தேர்வு செய்வது என்பது  இயலாத காரணமாக இருந்திருக்கிறது.  அந்தச் சமயத்தில் அவருக்கு உதவியர், அவரின் பள்ளித் தோழி ஸ்ரீமதி.

அம்மு அவரிடம், “எனக்காக விண்ணப்பம் வாங்கி, நீ என்ன பாடத்தைத் தேர்வு செய்கிறாயோ அதே பாடத்தை எனக்கும் தேர்வு செய்து விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து கல்லூரியில் கொடுத்துவிட முடியுமா…?” என்று கேட்க, ஸ்ரீமதியும் சம்மதித்திருக்கிறார்.

கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆமாம், முதல் மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு எந்தக் கல்லூரிதான் இடம் தர மறுக்கும்…?

கல்லூரி திறக்கிறது. ஒரு நாள் சுசிலா மேரி என்ற பேராசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பிலிருந்து நேராகக் கல்லூரிக்கு வந்த அம்முவின் கைகளில் எந்தப் புத்தகமும் இல்லை. அந்தப் பேராசிரியைக்கு அம்மு குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. கண்டிப்பான பேராசிரியையான அவர், அம்முவின் கைகளில் எந்தப் புத்தகமும் இல்லாததைப் பார்த்துக் கடும் கோபம் அடைந்து,  சில கேள்விகளைக் கேட்டு இருக்கிறார். அம்மு அமைதியாக நிற்க, அந்தப் பேராசிரியை கோபமாக, “பொம்மை மாதிரி ஆடை உடுத்துவதற்கா கல்லூரிக்கு வருகிறாய்…?” என்று எரிந்து விழுந்து இருக்கிறார்.  அம்முவுக்கு சங்கடமாகிவிட்டது. அமைதியாக வகுப்பில் அமருகிறார். நல்லவேளையாக, சிறிது நேரத்தில் மதிய உணவு இடைவேளை வருகிறது. அப்போது வீட்டுக்குச் சென்றவர், பின் எப்போதும் கல்லூரி திரும்பவேயில்லை…!

ஸ்ரீமதி அம்முவை சந்தித்து, “ என்ன ஆனது… ஏன் கல்லூரிக்கு அதன்பின் வரவில்லை” என்று கேட்டதற்கு, “என்னால் அதுபோன்ற ஓர் இறுக்கமான இடத்தைச் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று அம்மு கூற. ’’சரி… வேறு ஏதாவது கல்லூரியில் சேர்’’ என்று ஆலோசனை வழங்கிய ஸ்ரீமதியிடம்,  “இல்லை… எந்த வேலையையும் என்னால் அரை மனதுடன் செய்ய முடியாது.  இனி நடிப்புத்தான் என்று முடிவு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

அவர் ஜெயலலிதாவாகப் புகழ்பெற்ற பின், அவர் அளித்த ஒரு பேட்டியிலும் இதை நினைவுகூர்ந்து, “சிறு விஷயத்துக்கும் முழுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன்… அது என் வீட்டு நாய்க்குட்டியைக் குளிப்பாட்டுவதாக இருந்தாலும்கூட… அங்கு பாதி, இங்கு பாதி என்று என்னால் பயணிக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாகத்தான் மேற்படிப்பு குறித்த அவரது கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.  ரூமியிடம் தொடங்கினேன்… அவரிடமே இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன்… “உங்கள் ஆன்மா சொல்வதன்படி நீங்கள் எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் வாழ்வின் மொத்த விஷயமும் இருக்கிறது” என்பார் ரூமி.

ஆனால், கெடுவாய்ப்பாக… அம்மு சந்தியாவின் ஆன்மா  சொல்வதன்படி செயல்பட்டுக்கொண்டிருந்தார்.  மு நியாஸ் அகமது

(தொடரும்)

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4  பகுதி 5 பகுதி 6

 

Post expires at 11:27am on Thursday November 24th, 2016

0 103
ஜெயலலிதா குணம் அடைய வேண்டி தமிழ் திரையுலகம் சார்பில் விசேஷ யாகம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடந்து வருகிறது. தமிழ் திரைப்படத்துறையினரும் 2 நாட்கள் விசேஷ பூஜை மற்றும் பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.

இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று காலை தொடங்கியது. திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சி.கல்யாண் ஏற்பாட்டில் நடந்த இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியை 30 சிவன் கோவில்களில் இருந்து வந்திருந்த 30 சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். 2 லட்சத்து 25 ஆயிரம் வேத மந்திரங்களை ஓதி விசேஷ பூஜையை அவர்கள் செய்தனர்.

இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, நிர்வாகிகள் டி.சிவா, கதிரேசன், டி.ஜி.தியாகராஜன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கங்காராஜ், மற்றும் காட்ரகட்ட பிரசாத், ஆனந்தா எல்.சுரேஷ், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், ஆகியோர் கலந்துகொண்டார்கள். நடிகர்கள் மனோபாலா, ரமேஷ் கண்ணா, பெப்சி சார்பில் செல்வராஜ், சந்திரன், கிரிசன், மற்றும் தயாரிப்பாளர்கள் சிவசக்திபாண்டியன், மைக்கேல் ராயப்பன், அருள்பதி, கோபாலதாஸ், சிவஸ்ரீ சீனிவாசன், ஆனந்தா எல்.சுரேஷ், ஜாகுவார் தங்கம் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

இன்று காலை முதல் மாலை வரை வேள்வி யாகங்கள் நடக்கின்றன. இதிலும் திரையுலகினர் கலந்துகொள்கிறார்கள்.

0 291
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்திருக்கும் நோய் இதுதானா?

இன்றோடு ஒரு மாதமாகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,

1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார். அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான்.

கடந்த செப் 22ல் அப்போலோவின் விஐபி-க்களுக்கான அறை எண் 2008ல் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அது தொடங்கி, அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, நாட்பட்ட சர்க்கரை வியாதி, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, சுவாசப் பிரச்னை, இதயம் சார்ந்த நோய் என்று பல்வேறு செய்திகளைத் தன் அறிக்கை வழியாகப் பகிர்ந்து வருகின்றது அப்போலோ.

அது தொடர்பான சிகிச்சைகளுக்காக லண்டன், சிங்கப்பூர் மற்றும் டெல்லியிலிருந்து நிபுணத்துவம் பெற்ற பல டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 10ல் ஜெயலலிதா, நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தங்கியிருக்க வேண்டும் என்ற செய்தியுடன் தனது அறிக்கைப் படலத்தைத் தற்காலிகமாக முடித்துக்கொண்டது அப்போலோ.

நீண்ட நாட்கள் என்பது எத்தனை நாள் என இறுதி செய்யப்படாத நிலையில் முதல்வரது அப்போலோ வாசம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

முதல்வருக்கு உடலில் இதுதான் சிக்கல் என்று இன்றளவும் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.

முதல்வருக்கு நுரையீரல் வீக்கமா?

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, உட்கார்ந்திருக்கிறார். மயக்க நிலையில் வைத்திருக்க மருந்துகள் எதுவும் தரப்படவில்லை, இது அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றம் என்கிற தகவல்களை மருத்துவமனை வட்டாரங்கள் பகிர்ந்துள்ளன.

மேலும் அவர் நுரையீரல் நீர் வீக்கத்திற்காகத்தான் மருத்துவமனையில் தங்கி நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழு, மருந்தின் அளவுகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளதால் தான் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

அதிகாரபூர்வமாக இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் மருத்துவர்கள் வட்டாரமே இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

 

பல்மனரி எடீமா (Pulmonary Oedema) எனப்படும் இந்நோய் நுரையீரலின் சுவாசப்பைகளில் அதிகமான நீர்க்கோர்ப்பு ஏற்படுவதால் உண்டாகிறது.

இதயத்திலிருந்து இரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் பழுது ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடு பாதிக்கும்.

அதன் காரணமாக சுவாசப்பைகளில் திரவங்களின் சேர்மாணம் ஏற்படும். அது சுவாசத்தைக் கட்டுப்படுத்தும். நுரையீரலை வீக்கப்படுத்தும்.

இரத்தக் குழாயினுடைய செயல்பாடுகளை சரிசெய்வது மட்டுமே இதற்கான சிகிச்சை முறை. திடீரென அதிகமாக வியர்ப்பது, மூச்சுப் பிரச்னை, சில நேரங்களில் இருமல் ஏற்படும்போது இரத்தம் கசிவது, சருமம் வெளுத்துப்போவது இவை தவிர கால்கள் வீங்கி கொள்வது, கல்லீரல் வீக்கம், மூச்சு விடும்போது ஒரு விதம் சத்தம் ஏற்படுவது, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும்.

இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவ நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள், இதய நோய் நிபுணர்கள், மூச்சு பிரச்னைக்கான சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை குழுவினர் உள்ளடங்கிய மருத்துவர்கள் குழு, முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும் முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா? எப்போது மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார் என்பது போன்ற தகவல்கள் எதுவும் அதில் இல்லை.

நீண்ட நாட்கள் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று சொல்லி இருந்தார்கள். அது இன்னும் நீண்டபடி..!

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்  Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 507
ஜெயலலிதாவுக்கு படுக்கை புண்?: கவலையில் மருத்துவர்கள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து படுக்கையில் இருப்பதால் அவருக்கு படுக்கை புண் வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

 

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்தில், நீண்ட நாட்களாக படுக்கையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புத்துணர்ச்சி ஊட்ட பிசியோ தெரபி சிகிச்சை அளித்தாலும், அவருக்கு ஏற்பட்டுள்ள படுக்கை புண் மருத்துவர்களை கவலையடைய செய்துள்ளது.

 

இந்த படுக்கை புண்ணை குணப்படுத்த மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். படுக்கைப் புண் ஏற்படாமல் இருக்க தண்ணீர் பெட், பவுடர் மசாஜ், உடம்பை கூலாக வைத்திருக்கும் ஊசிகள், அடிக்கடி மாற்றி படுக்க வைத்தல் போன்ற முறைகளை கையாள்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பதால் இப்போது ஏற்பட்டுள்ள இந்த படுக்கைப் புண்களை போக்க அதிநவீன ஸ்ப்ரே செய்யும் மருந்துகள் மூலம் மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

0 147
ஜெயலலிதாவை பார்க்க சென்ற ரஜினிகாந்த்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு தினமும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டுச் செல்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கருப்பு நிற காரில் வந்தார். அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷூம் உடன் இருந்தார்.

ஆனால், அவர் காரில் ஆஸ்பத்திரி உள்ளே சென்றதை யாரும் பார்க்கவில்லை. வெளியே வரும்போது தான் ரஜினிகாந்த் காரில் இருப்பதை வெளியே நின்றவர்கள் பார்த்தனர்.

காருக்குள்ளும் விளக்கு எதுவும் எரியாததால், ரஜினிகாந்தை தெளிவாக யாரும் பார்க்க முடியவில்லை. அவர் வந்த காரும் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது.

முன்னதாக, ஆஸ்பத்திரி உள்ளே சென்ற ரஜினிகாந்த், அங்கிருந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர்களிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 1461
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக தற்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

எனினும் தற்போது முதல்வர் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முதல்வர் ஜெயலலிதாவிற்க்கு மூளை சாவு ஏற்பட்டது அவர் கோமாநிலையில் இருப்பதும் உண்மையே வெளிநாட்டு மருத்துவர்களின் சிகிச்சையும் பலனளிக்காததை பொருட்டு இன்று அல்லது நாளை உயிரிழப்பு நிகழும் என் எதிர்பார்க்கப்படுகிறது..ஆகையால் அதிமுக MP & MLA கூட்டம் அவசரம் அவசரமாக கூட்டப்படுகிறது

அத்துடன் IAS, IPS அதிகாரிகளுடன் சிறிது நேரத்திற்க்கு முன்பு பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும் அதில் அடுத்துவரும் விஜயதசமி ஆயுதபூஜைகளில் பல தொழில் மற்றும் மக்களில் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடும் எனவும் அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தல் பாதிக்கப்பட்டு ஆட்சி கலையும் எனவும் விவாதிக்கபட்டுள்ளது.

சட்ட ஒழுங்கை சரியாக பாதுகாக்கப்பட்ட பிறகு முறையான அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளனர் இதில் 5 நாட்களுக்கு முன்பே டாக்டர்கள் கை விரித்துவிட்டது உண்மையே உயிர் இருந்தாலும் இனி அவரால் கண் முழிக்க முடியாது என்பதே கடவுள் விதித்த தீர்ப்பு. இது ஓர் அதிகாரப்பூர்வ செய்தி என வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 101

ஜெயலலிதா-முத்துராமன் நடித்து 1973-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம்’சூரியகாந்தி’. 150 நாட்களுக்கு மேல் ஓடிய இப்படம் தற்போது டிஜிட்டல் மற்றும் சினிமாஸ் கோப்பாக மாற்றப்பட்டு வருகிறது.

கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார் என்கிற தாழ்வு மனப்பான்மை பிடித்து ஆட்டும் ஈகோ தான் கதைக்களம். சோ, மனோரமா, மௌலி, காத்தாடி ராமமூர்த்தி, எம்.ஆர்.ஆர்.வாசு போன்றோர் நடித்திருக்கும் இப்படத்தில் “ஓ மேரோ தில்ரூபா”, “நானென்றால் அது நீயும் நானும்” என்ற இரண்டு பாடல்களை ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடியிருந்தார்.

“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?” என்ற காவியப்பாடல் இடம்பெற்ற படமும் இதுதான். படத்தின் கதை, வசனத்தை ஏ.எஸ்.பிரகாசம் எழுத, முக்தா வி.சீனிவாசன் படத்தை இயக்கி இருந்தார். பாடல்கள், படத்தின் கதை, சிறப்பான நடிப்பு, இசை என்று எல்லோராலும் பாராட்டு பெற்ற ‘சூரியகாந்தி’ படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில்  ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வெற்றி விழாவில் தந்தை பெரியார், ஜெயலலிதாவுக்கு பரிசு வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

43 வருடங்களை கடந்து 44-ம் வருடத்தில் அடியெடுத்து வைத்தாலும் ‘சூரியகாந்தி’யின் கதைக்களம் எந்த கால கட்டத்திற்கும் பொருத்தமானதாக இருப்பதால் இன்றைய தலைமுறையினரையும் இப்படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 152
ஜெயலலிதாவுக்கு ரூ.2.04 கோடி கடன்! இதுதாங்க உண்மை- வேட்பு மனுவில் தகவல்

ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா தமக்கு ரூ.120 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலைதாவின் வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, அவருக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும்.

இதில், வாகனங்கள், நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.41.63 கோடி. நிலம், கட்டிடம் போன்ற அசையா சொத்துக்களின் மதிப்பு, ரூ.76.95 கோடியாகும்.

மேலும், தனக்கு ரூ.2.04 கோடி கடன் இருப்பதாகவும் ஜெயலலிதா தமது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் தமது சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி என குறிப்பிட்டிருந்தார்.

இதில் அசையும் சொத்துக்கள் ரூ.45.04 கோடி எனவும் அசையா சொத்துக்கள் ரூ.72.09 கோடி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடி எனவும், இது 2006 ஆம் ஆண்டில் ரூ.24.7 கோடியாக இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேப்போன்று திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2014-15 ஆம் ஆண்டில் தனக்கு ரூ. 1.21 கோடி வருமானம் வந்ததாக தமது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் துணைவியர் மு.க.தயாளு அம்மாளுக்கு ரூ.9,21,430 வருமானம் வந்தததாகவும், இராசத்தி அம்மாளுக்கு ரூ.1,16,96,350 வருமானம் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி

0 152
ஜெயலலிதாவுக்கு படுக்கை புண்?: கவலையில் மருத்துவர்கள்!
பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக சட்டப் பேரவைக்கு மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 ஆம தேதி முதல் தொடங்குகிறது.
 
மனு தாக்கல் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
 
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அன்றைய தினமே தமிழகத்தில் மற்ற 233 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அதிமுக தலைமை குறிப்பிடம் நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.
 
மேலும், 25 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் சுப முகூர்த்த தினங்களாகும். எனவே, இந்த இரு நாட்களில், ஒரு தினத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆன்மீகத்திலும், ஜோதிடத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். தற்போது ஜெயலலிதா ராசிக்கு 2 ஆம் தேதி 4 ஆம் தேதி, 7 ஆம் தேதி ஆகியவை ராசியாக கருதப்படுவதால், அந்த 2, 4, 7 எண்கள் கூட்டுத் தொகை வரும் தேதிகளில் முக்கிய செயல்களை செய்கிறார். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி

RANDOM POSTS

0 508
மேஷம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 9...