Timber by EMSIEN-3
EMSIEN-3
LTD
Tags Posts tagged with "hair"

hair

0 1571
உயிராய் நேசித்த ரசிகனுக்காக சமந்தா செய்த ஒரு காரியம்..! 2கோடி இழந்தார்..ஐயோ..!

‘நான் ஈ’ படம் வந்து பட்டையைக் கிளப்பியபோது சந்தாவின் புகழ் எங்கேயோ போனது. அந்தப் படத்தில் மிகவும் அழகாக இருப்பார் சமந்தா.

சொக்கிப் போனார்கள் இந்திய ரசிகர்கள்.பாகுபலி இயக்குனரின் படம் அது. அந்தப் படம் தான் சீனிவாச ராவுக்கு முதல் சமந்தா படம். அதற்கு முன்பு சமந்தா படம் அவர் பார்த்ததே இல்லை.

ஆந்திராவின் வோங்கல் பகுதியில் வசிப்பவர். மென்பொருள் பணியாளர்.நான் ஈ படத்திற்கு பின்   சமந்த படம் தேடி தேடித் பார்க்க ஆரம்பித்தார்.

கட்டினால் சமந்தா போலவே ஒரு பெண்ணைப்  பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.அவர்  வீட்டில் நொந்து விட்டனர்.

கல்யாண புரோக்கரிடம் சமந்தா முகத்தோற்றம் உள்ள பெண்ணை தேடச்சொல்லி அனுப்பினார்கள். புரோக்கர் நொந்து நூலாகி தேட ஆரம்பித்தார்.

சமந்தா பிறந்த நாளுக்கு சீனிவாச ராவ் கேக் வெட்டிக் கொண்டாடுவார். அதை ஏதாவது ஒரு ஹோட்டலில் பார்ட்டி     வைப்பார்.

இப்படி பைத்தியமாக இருப்பது மீடியா நண்பர்கள் மூலமாக பத்திரிகைகளில் செய்தியாக வந்து பரபரப்பானது.

ஒருநாள் வயிறு வலி.. என்று மருத்துவமனை சென்றார். உடல் பரிசோதனையின் முடிவில் இறைப்பை கேன்சர் என்று தெரிந்தது.

ஆடிப் போனார் சீனிவாசராவ். குடும்பமே நொறுங்கிப் போனது. வீட்டில் முடங்கிப் போனார். எப்போதும் சமந்தா  படங்கள் பார்த்தபடி பொழுதைப் போக்கினார்.

கல்யாணம் வேண்டாம் என்று கூறியவர், சாவதற்கு முன்பு சமந்தா திருமணத்தைப்  பார்க்க வேண்டும் என்று கூற ஆரம்பித்தார்.

இந்த விஷயம் சமந்தாவிற்கு சொல்லப் பட துடித்துப் போனார். உடனடியாக ஹைதராபாத் பி ஆர்.ஓ மூலமாக  வரச்சொல்லி அனுப்பினார்.

சீனிவாசராவுக்கு அவ்வளவு வலி துன்பத்திலும் தனது கனவுக் கன்னியைப் பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சி.

குடும்பத்தோடு கிளம்பினர். ஏர்ப்போர்ட்டுக்கு கார் வந்தது. ஆடிப் போனார்கள். பெரிய ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தங்க வைக்கப் பட்டனர்.

மாலையில் வந்தார் அந்த கனவு தேவதை.முடியெல்லாம் கொட்டி உருக்குலைந்து  போய் இருந்தார் சீனிவாசராவ்.

கண்கள் கலங்கிப் போனார் சமந்தா. கேக் வந்தது அவர் முன்பு கேக் வெட்டி சீனிவாச ராவிற்கு ஊட்டி விட்டார் சமந்தா.

கதறி அழுது விட்டார் சீனிவாசராவ். அடுத்த நாள் ஷூட்டிங் அழைத்துப் போனார்கள்.அங்கும் சீனிவாச ராவிற்கு ஏக மரியாதை.

மூன்றாம் நாள் அவர்களை வழி அனுப்பி வைத்தார் சமந்தா. அடுத்த ஆறு மாதங்களில் சீனிவாச ராவ் இறந்து போனார்.

தகவல் தெரிந்த சமந்தா கேரவன் வேனில்  போய் அமர்ந்து கொண்டார். இரண்டு மணி நேரங்கள் கழித்தே வெளியே வந்தார் என்கிறார்கள்.

அந்தப் படம் முடிந்தும் தனது ரசிகர் நினைவாக கேன்சர் நோயாளிகளுக்கு உதவ, தனது தலை முடியை கொடுத்து விட்டார்.

ஒரு படமே கையை விட்டுப் போனது என்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலையே பட வில்லை அந்த மனிதம் நிறைந்த தேவதை.!

Post expires at 11:09am on Wednesday February 1st, 2017

0 506
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? இதற்காக எத்தனையோ எண்ணெய்கள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். கெமிக்கல் கலந்த செயற்கை மருந்துகளின் மூலம் தலைமுடியை வளர்க்க நினைத்தால் முடியுமா? இயற்கை வழியை நாடுங்கள், இதனால் நிச்சயம் தலைமுடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

இதுவரை நாம் பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, முடி நன்கு வளரும் என்று பார்த்தோம். இப்போது இஞ்சியை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி வளரும் என்று பார்ப்போம்.

ஸ்டெப் #1 முதலில் இஞ்சியை சிறிது எடுத்து தோலுரித்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி சாறு எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் அவகேடோ பழ எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, இஞ்சி சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3 பின்பு அத்துடன் 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனால் தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம் பாதிக்கப்பட்ட முடியின் முனைகளை சரிசெய்யும், ஸ்கால்ப்பை சுத்தம் செய்யும் மற்றும் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும்.

ஸ்டெப் #5 அடுத்து தலைமுடியில் உள்ள தேவையற்ற சிக்கை சீப்பு கொண்டு எடுத்துவிட வேண்டும்.

ஸ்டெப் #6 பின் தயாரித்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #7 45 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு, தலைமுடியை அலச வேண்டும்.

ஸ்டெப் #8 இறுதியில் துணியால் தலையில் உள்ள அதிகப்படியான நீரை எடுக்க வேண்டும். முக்கியமாக அப்படி செய்யும் போது துணியால் தலைமுடியைத் தேய்க்கக் கூடாது. அது தலைமுடியில் வெடிப்பை உண்டாக்கும்.

Post expires at 10:06am on Tuesday January 31st, 2017

0 136
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்
தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது. தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது.

 
* உங்கள் தலையில் ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர் தொற்றுக்கள் வளர்ச்சி மற்றும் பொடுகு இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சையை சேர்த்து பயன்படுத்தவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஈஸ்டை கொன்று பொடுகைப் போக்கி தலைமுடியை பளபளப்பாக்கும்.
 
* ஒரு பஞ்சு உருண்டையை எண்ணெயில் முக்கி உங்கள் ஸ்கால்பில் நன்கு தாராளமாக தடவவும். ஸ்கால்ப் நன்கு எண்ணெயில் நனைந்தவுடன் எண்ணெயை உள்ளங்கையில் எடுத்து உங்கள் கூந்தலின் நுனி வரை தடவவும்.
 
* தலையை சுழற்சியாக உங்களின் விரல் நுனிகளின் மென்மையான முனைகளைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து எண்ணெய் ஸ்கால்பின் உள்செல்லுமாறு தேய்க்கவும். உங்கள் கூந்தலை இறுக்கமில்லாமல் கட்டி ஒரு ஷவர் கேப் (தொப்பி) கொண்டு மூடவும். இந்த மாஸ்கை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
 
* பின்னர் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும். தலையில் உள்ள அதிக ஈரத்தை மென்மையாக தண்ணீரை உறிஞ்ச கூடிய டவலை கொண்டு துடைத்து, முடியை கட்டவும். பின்னர் தானாக முடி காயுமாறு விடவும். நல்ல பலன்களுக்கு இந்த தேங்காய் எண்ணெய் மாஸ்கை வாரம் ஒரு முறை செய்வது பலனை தரும்.

 

Post expires at 1:26pm on Sunday January 29th, 2017

நறுமனம் வீசம் கூந்தலுக்கு இதை செய்யுங்கள்

மாசுக்கள் நிறைந்த இன்றைய மோசமான சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் சேர்க்கின்றன. இதனால் தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய நிலையில் இருப்போம். ஆனால் தினமும் தலைக்கு குளித்தால், தலைமுடி உதிரும் என்பதால், பலரும் தலைக்கு குளிக்க முடியாமல் தவிப்பார்கள். அதே சமயம் தலையில் இருந்து துர்நாற்றம் வீசும். இப்படி தலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க தீர்வே இல்லையா என்று பலரும் தேடுவார்கள். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு தலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பெர்ஃப்யூம் உங்களிடம் இருக்கும் பெர்ஃப்யூமை தலை சீவுவதற்கு முன் தலையில் சிறிது அடித்துக் கொண்டு, பின் சீப்பு கொண்டு தலைமுடியை சீவினால், தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் தடுக்கப்படும்.

பூ உங்களுக்கு நல்ல மணம் நிறைந்த பூக்களின் வாசனை வேண்டுமானால், தலைக்கு பூ வைத்துக் கொள்ளுங்கள். இதனால் தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.

கண்டிஷனர் இரவில் படுக்கும் முன் லீவ்-ஆன் கண்டிஷனரைத் தடவுங்கள். இதனால் மறுநாள் எழும் போது, தலைமுடி மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

நறுமணமிக்க எண்ணெய்கள் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நீரை நிரப்பி, அத்துடன் சிறிது நறுமணமிக்க லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெயைக் கலந்து, வெளியே செல்லும் முன் தலையில் ஸ்ப்ரே செய்து கொண்டு, பின் தலையை சீவிக் கொள்ளுங்கள்.

சீரம் நறுமணமிக்க தலைமுடிப் பராமரிப்புப் பொருளான சீரத்தைப் பயன்படுத்தலாம். இந்த சீரத்தை தலைமுடியில் தடவிக் கொண்டால், தலைமுடி நாற்றமடிப்பது தடுக்கப்படும்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 520
மரத்தில் கட்டிவைத்து பெண்ணின் தலைமுடியை அறுத்த கிராம மக்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பல்வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணை, அக்கிராம மக்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர்.

Ajmer நகரில் உள்ள அம்பேத்கர் கான்சி என்ற கிராமத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இப்பெண்மணி அக்கிராமத்தை சேர்ந்த பல்வேறு ஆண்களுடன் உறவில் ஈடுபட்டு வருவதை கவனித்து வந்த பக்கத்துவீட்டார், இதுகுறித்து பஞ்சாயத்தில் புகார் தெரிவித்தனர்.

இப்பெண்ணின் செயலால் அக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், இப்பெண்ணை அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அதன்பின்னர் இப்பெண்ணின் தலைமுடியை அறுத்து, அக்கிராம மக்கள் நையப்புடைத்துள்ளனர், அக்கிராம ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் சேர்ந்து இப்பெண்ணை அடித்து உதைத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அப்பெண்ணை மீட்டுள்ளனர், ஆனால் அக்கிராம மக்கள் இப்பெண்ணை மரத்தில் இருந்து அவிழ்த்துவிடக்கூடாது என பொலிசாருடன் சண்டையிட்டுள்ளனர்.

இதற்கிடையே இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது பொலிசார் FIR பதிவு செய்துள்ளனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

பலவீனமான முடியை வலிமையாக்க உதவும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

தற்போது முடி பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. அதில் தலை முடி உதிர்வதில் இருந்து, பேன், பொடுகு, முடி வெடிப்பு, முடி வறட்சி என்று சொல்ல ஆரம்பித்தால், பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பொதுவாக தலைமுடியில் இவ்வளவு பிரச்சனை ஏற்படுவதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, நமது மோசமான பழக்கவழக்கங்களும் தான் காரணம்.

ஆனால் இந்த பிரச்சனைகளைப் போக்கி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில அட்டகாசமான எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளை பின்பற்றி வந்தால், தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதை நீங்களே காண்பீர்கள்.

வெண்ணெயை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலசி வந்தால், தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி பளபளப்புடனும், பொலிவோடும் காணப்படும்.

கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நொதிகள், தலைமுடியின் பிரச்சனைகளைப் போக்கி, அமுடியி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு கற்றாழை ஜெல்லை தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தா, தலைமுடி நன்கு வளர்வதையும் காணலாம்.

வாழைப்பழம் பாதிக்கப்பட்ட முடியை சரிசெய்ய உதவும் பொருட்களில் ஒன்று. ஏனெனில் அதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அது பாதிக்ககப்பட்ட மயிர்கால்களை சரிசெய்து, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதற்கு வாழைப்பபழத்தை மசித்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 15 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும்.

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து ஷாம்பு போட்டு அலசி வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.

தேங்காய் எண்ணெயிலும் சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. ஆகவே இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி 2 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் பாதிக்கப்பட்ட முடிக்கு மிகவும் நல்லது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை தலையில் தடவி 20 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

அவகேடோ பழத்தை மசித்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து அலசினால், அதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், புரோட்டீன்கள், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் இதர கனிமச்சத்துக்களால், பாதிக்கப்பட்ட தலைமுடி சரியாகும்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 131

நரை முடியோ, இள நரையோ, பார்க்க அழகை தருவதில்லை. கெமிக்கல் கலந்த டை உபயோகிப்பதால் நிறைய கெடுதல்கள் வர வாய்ப்புண்டு. இயற்கையாக டை நீங்களே தயாரிக்க முடியும். வீட்டிலேயே முயன்று பாருங்கள். நிச்சயம் பலன் அளிக்கும். கெடுதல் தராது. பக்க விளைவுகளும் இல்லை.

திரிபலாதி சூரணம் :

ஆயுர் வேத கடைகளில் திரிபலாதி சூரணம் கிடைக்கும். அதனை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும்.

அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ, முடி கருப்பாகத் தெரியும். இது ஒரு புதிய முயற்சியே. முடிக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாது. கண்களுக்கும்,தோலுக்கும் நல்லது.

இள நரைக்கு :

வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.

மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை முன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி நன்றாக கருப்பாக வளரும்.

மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கருப்பாகும். ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்

RANDOM POSTS

0 3
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில்...