Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "election"

election

0 188
முடக்கப்பட்ட இரட்டை இலை ; ரத்தான இடைத் தேர்தல் ; கடும் கோபத்தில் சசிகலா

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் அவசர செயல்பாடுகள் காரணமாக, அவர் மீது சிறையில் இருக்கும் சசிகலா அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு செல்ல நேரிட்ட போது, தனது உறவினர் டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்தார். அதன் பின் அதிமுகவின் தலைமையாக செயல்பட்டார் தினகரன்.

என்னதான் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தாலும், அவரை பின்னால் இருந்து தினகரனே இயக்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நான்தான் நிற்பேன் என அங்கு போட்டியிட்டார் தினகரன். ஓ.பி.எஸ் அணி கொடுத்த குடைச்சலில் இரட்டை இலை சின்னமும், அதிமுக என்ற கட்சி பெயரையும் பயன்படுத்த முடியாமல் போனது. எனவே, தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார் தினகரன். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தினகரண் அணி பணப்பட்டுவாடா செய்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால், விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டவர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இடைத் தேர்தலும் ரத்தானது.

மேலும், வருமான வரித்துறையினரின் லிஸ்டில் முதல்வர் உட்பட தமிழக முக்கிய அமைச்சர்கள் பெயர் இருக்கிறது. அடுத்த சோதனை எங்கு நடக்கும் என யாருக்கும் தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என தமிழிசை உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையெல்லாம் கேள்விப்பட்டு சசிகலா மிகவும் நொந்து போய் விட்டாராம். சசிகலாவோடு சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் தற்போது பெங்களூரில் தங்கியிருந்து அடிக்கடி சிறைக்கு சென்று அவர்கள் இருவரையும் சந்தித்து பேசி வருகிறார். அவரிடம் புலம்பிய சசிகலா “ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட்டிருக்கக் கூடாது. தேர்தல் கமிஷன் கண்காணிக்கும் என்பது தெரியாமல், இப்படி எல்லோருக்கும் தெரியும் வகையில் பணப்பட்டுவாடா செய்து கட்சியின் மீது மக்களுக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்து விட்டான். ஏற்கனவே, ஓ.பி.எஸ் அணியால் இரட்டை இலை சின்னமும் பறிபோனது. தற்போது தேர்தலும் ரத்தாகி விட்டது. மத்திய அரசிடம் பகைத்துக் கொள்வதால், வருமான வரி சோதனைகளும் அதிகரித்து வருகிறது.

இதற்காகவா நானும் அக்காவும் (ஜெயலலிதா) இவ்வளவு கஷ்டப்பட்டோம். நான் சிறையிலிருந்து விடுதலை ஆகி வெளியே வரும் போது கட்சி இருக்குமா என்றே தெரியவில்லை. அவனை என்னை வந்து பார்க்க சொல்” என விவேக்கிடம் புலம்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தினகரனிடம் தெரிவித்த போது, சசிகலாவை சென்று சந்திப்பது பற்றி உறுதியாக எதுவும் அவர் பதில் கூறவில்லையாம்.

 

Post expires at 8:47am on Saturday May 13th, 2017

0 72
என் வெற்றி உறுதியானதால் திட்டமிட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து : டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். தேர்தலை ரத்து செய்தது தவறு என்றும் கூறியுள்ள அவர், தமது வெற்றி உறுதியானதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில் வருமான வரித்துறையினர் தேவையின்றி சோதனை நடத்தியது என கூறியுள்ளார்.

Post expires at 3:07am on Wednesday May 10th, 2017

0 114
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து. அதிர்ச்சியில் சசிகலா அணி.120 கோடி ரூபாய் அம்போ.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து… அதிர்ச்சியில் சசிகலா அணி…120 கோடி ரூபாய் அம்போ…
சென்னை ஆர்.கே.நகரில் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சசிகலா தரப்பினர் தாங்கள் செலவு செய்த 120 கோடி ரூபாய் வீணாகிவிட்டதாக புலம்பித் தவித்து வருகின்றனர்.
ஆர்.கே.வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரன், ஒபிஎஸ் சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்
.இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் அதிரடிச் சோதனை நடத்தி பணப் பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக விக்ரம் பாத்ரா என்கிற புதிய அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
இவர் ஆர்.கே.நகர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து முறைகேடுகளைத் தடுக்க தீவிர ஆலோசனையும் நடத்தினார். பணப் பட்டுவாடா மற்றும் பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க 70 நுண் பார்வையாளர்களும் பணி அமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகர் சரத்குமார், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.
.இந்த நிலையில் ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆவணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட சில அமைச்சர்கள் பெயரும் இடம் பெற்றிருந்தன.
சசிகலா அணி வேட்பாளர், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக 89 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டதாக சோதனையில் தெரியவந்தது என வருமான வரித் துறையால், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரியான விக்ரம் பத்ரா கடந்த சனிக்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த பணப்பட்டுவாடா மற்றும் தொகுதியில் நிலவும் அசாதாரண சூழல் பற்றி அவர் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்ததாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே தமிழக தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியிடமும் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. இதனை ஏற்று ராஜேஷ் லக்கானி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். விக்ரம் பத்ரா, ராஜேஷ் லக்கானி இருவரும் தேர்தல் ஆணையத்தில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைத்து விட்டு வேறு ஒருநாளில் தேர்தலை நடத்தலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதில் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் வருமான வரி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முன் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. முறைகேடுகளை தவிர்க்க எடுக்கப்படும் முயற்சிகள் நூதன முறையில் மீறப்பட்டுள்ளன.
அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 21இல் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக இதுவரை மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 7-ந்தேதி வரை ரூ.18,80,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன், வெள்ளித் தட்டு, புடவைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் பலர் பிடிப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post expires at 2:50am on Wednesday May 10th, 2017

0 93
ஆர்கே நகரில் டிடிவி தினகரன் அணியினர் விடிய விடிய பணப்பட்டுவாடா

50 லட்சம் பறிமுதல்; 34 பேர் கைது

சென்னை : ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விடிய விடிய பணம் பட்டுவாடா செய்தனர். தடுக்க சென்ற திமுகவினரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தனர். பணம் விநியோகம் செய்ததாக ஒரே இரவில் 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், பலர் தப்பி ஓடிவிட்டனர். தடுக்க வந்த திமுகவினர் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூலம் திட்டமிட்டு தேர்தலை நிறுத்த டிடிவி தினகரன் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) சார்பில் மதுசூதனன், அதிமுக (அம்மா) சார்பில் டிடிவி.தினகரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன், பாஜ சார்பில் கங்கை அமரன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 62 பேர் போட்டியிடுகின்றனர். அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2வது மற்றும் 3வது இடம் யாருக்கு என்பதில், மதுசூதனன், டிடிவி தினகரன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கணிசமான ஓட்டுக்கள் மதுசூதனனை விட அதிகமாக வாங்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் களம் இறக்கியுள்ளனர். டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக தொகுதியில் உள்ள காலியாக உள்ள வீடுகள் மற்றும் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து வெளியூர் ஆட்களை தங்க வைத்து ‘டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி ஆர்.கே.நகர் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் பணியில் முழுவீச்சில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். இதை அறிந்த திமுகவினர், அவற்றை தடுக்க முற்பட்டனர். அப்போது, தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த மதுரையை சேர்ந்த பிரபு (30) என்பவரை திமுகவினர் பிடிக்க முற்பட்டனர். அப்போது, 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன், திமுகவினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதில், நேதாஜி நகரை சேர்ந்த ஷேக் (26), வினோபா நகரை சேர்ந்த பார்த்தசாரதி (28) ஆகியோருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த அவர்கள் அலறி துடித்தனர்.

மேலும், அப்பகுதியில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் ஒரு பெண் மருந்து வாங்கி கொண்டிருந்தார். அவரது கணவர், அருகில் பைக்கில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த தினகரன் கோஷ்டினர், அந்த பெண்ணின் கணவர் மீது சரமாரியாக தாக்கினர். அவரது பைக்கை அடித்து சுக்கு நூறாக நொறுக்கினர். உடனே 3 பேரையும் திமுகவினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் திமுகவினர் புகார் செய்தனர். இதற்கிடையில் புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் வீடு வீடாக தினகரன் கோஷ்டியினர் பணம் விநியோகித்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர். பிடிபட்டவர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வம் (26) என தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவில் வீடு வீடாக பணம் விநியோகித்து கொண்டிருந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (37) என்பவரை பொதுமக்கள் பிடித்து ரூ.36 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

காசிமேடு காசிபுரம் பி பிளாக் பகுதியில் பணம் விநியோகித்து கொண்டிருந்த 6 பேரை பொதுமக்கள் பிடித்தனர். அவர்கள், சீர்காழியை சேர்ந்த ராஜா (40), மணிபாரதி (30), ஞானசேகர் (62), சந்திரமோகன் (40), முருகன் (38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தண்டையார்பேட்டை அஜீஸ் நகரில் பணம் விநியோகிப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதிகாரிகளை பார்த்ததும், பணம் விநியோகித்து கொண்டிருந்தவர்கள் ரூ.10 லட்சத்தை ரோட்டில் வீசிவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணம் கொடுத்து அராஜக செயலில் ஈடுபட்டதாக 25 பேரை ஆர்.கே. நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் 35 பேரை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை போலீசார் கைது செய்தனர். சுமார் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே, வட்ட செயலாளர் ரவிக்கு சொந்தமான மீன் அங்காடியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அலெக்சாண்டர் எம்எல்ஏ, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் ராேஜந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் முகாமிட்டிருந்தனர். இவர்கள், ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை தெரு வாரியாக ஆட்டோ, கார்களில் அழைத்து வந்து பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஆண்களும் பெண்களும் வரிசையாக வந்து பணம் பெற்று சென்றனர். ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணப்பட்டுவாடா நடந்த இடத்தின் அருகில்தான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இருப்பினும் எந்த இடையூறும் இன்றி பணப்பட்டுவாடா நடந்துள்ளது.
திருவொற்றியூர் தேரடியில் உள்ள முன்னாள் எம்எல்ஏ குப்பன் அலுவலகத்தில், காசிமேடு எஸ்.என்.செட்டி தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த அலுவலகத்தில் பெண்கள் சிலர் காத்திருந்தனர். இதுபற்றி மக்கள் விசாரித்தபோது பண பட்டுவாடா நடைபெறுவது தெரிந்தது.

தகவலறிந்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த 15க்கும் மேற்பட்ட பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் வசிப்பதாகவும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கூறியதன் பேரில் வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த அலுவலகத்தை சோதனை செய்தபோது, பலர் பின்பக்கமாக தப்பி சென்றுவிட்டனர். இதனால் அந்த அலுவலகத்துக்கு போலீசார் பூட்டு போட்டனர். சன்னதி தெருவில் உள்ள தனியார் சங்க அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் லுங்கியுடன் அமர்ந்து கொண்டு வாக்காளர்களை ஆட்டோவிலும் பைக்கிலும் வரவழைத்து நேற்று காலை 7 மணி வரை பணம் வழங்கியதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். நேதாஜி நகரில் அமைச்சர் செல்லூர் ராஜு, தங்கதமிழ்செல்வன் எம்எல்ஏ தலைமையில் நள்ளிரவில் வீடு, வீடாக பணம் விநியோகம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வஉசி நகரில் அமைச்சர் உதயகுமார், அவரது ஆதரவாளர்கள் வீடு, வீடாக சென்று தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பி பணம் கொடுத்துள்ளனர். ஒரே நாள் இரவில் ரூ.50 கோடிக்கு மேல் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக வேட்பாளர் மருதுகணேஷ், நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ”தேர்தல் அமைதியாக நடக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது பீதியாக உள்ளது. வெளியே செல்ல பயமாக உள்ளது. கொலை வெறி தாக்குதல் நடக்கிறது. வெளியூர்வாசிகள் தொகுதியில் வலம் வந்து எங்களை மிரட்டுகிறார்கள். அவர்களை வெளியே அனுப்பினாலே தேர்தல் அமைதியாக நடக்கும். அவர்கள் வெளியே சென்றால் நல்லது” என்றனர்.
இதற்கிடையில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர் சுதர்சனம், கீதா ஜீவன் எம்எல்ஏ, வகாப், பகுதி செயலாளர் தனியரசு, முன்னாள் கவுன்சிலர் ஏ.வி.ஆறுமுகம், புழல் நாராயணன் உள்பட ஏராளமான தொண்டர்கள் நேற்று காலை ஆர்.கே.நகர் காவல் நிலையம் சென்றனர்.

பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பிடிபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார், ”புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்” என்று போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் புகார் கொடுத்தனர். இதேபோல் ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட 47வது வட்ட அதிமுக பிரமுகர் ஒருவரது காரில் வைத்து பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அங்கு சென்று காரை சோதனை செய்தபோது, ரூ.40 ஆயிரம் இருந்தது. இதையடுத்து பணத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

பிடித்து கொடுத்தவர்களை அதிகாரிகள் விட்டுவிட்டனர்

வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் எம்எல்ஏ ஆதரவாளர், ஆர்கே நகர் பகுதி செயலாளர் சந்தானம், வட்ட செயலாளர் கோவிந்தராஜ், பகுதி பிரதிநிதி நாகராஜ் ஆகியோர் நேற்று காலை 38வது வார்டில் வீடு வீடாக சென்று பணம் விநியோகம் செய்தனர். வாக்காளர்களுக்கு தலா வாக்குக்கு ரூ.4000 கொடுத்தார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்களும், திமுகவினரும் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர், போலீசாருக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தேர்தல் அதிகாரி வந்து, அவர்களை, கைது செய்யாமல், பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குற்றவாளிகளை நீங்களும் பிடிக்க மாட்டீர்கள். நாங்கள் பிடித்து கொடுத்தாலும், கைது செய்யாமல் பேச்சு வார்த்தை நடத்துகிறீர்கள். எதற்காக நீங்கள் தயங்கவேண்டும் என அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், மக்களிடம் பிடிப்பட்ட 3 பேரிடம் இருந்து சுமார் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அனைத்து புத்தம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள். அவர்களை வாகனத்தில் ஏற்றி, கொண்டு சென்றனர். சில மீட்டர் தூரம் சென்றதும், அவர்களை இறக்கிவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், தற்பாது பறக்கும்படையில் இருப்பது மாநகராட்சி அதிகாரிகள்தான். இவர்கள் கீழ்தான் மத்திய பாதுகாப்பு போலீசார் வேலை செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், மேலிடத்தில் இருந்து போன் வந்ததும், அவர்களை விட்டுவிட்டனர். இதனால், வடமாநிலத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு போலீசாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றனர்.

1.5 லட்சம் பேருக்கு விநியோகம்

ஆர்.கே.நகரில் ஒவ்வொரு வார்டுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இரவில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில், தினகரன் அணியினர், வீடு, வீடாக சென்று பணம் விநியோகம் செய்தனர். நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 1.20 லட்சம் பேருக்கு விநியோகம் செய்தனர். பின்னர் காலை முதல் பிற்பகலுக்குள் மேலும் 30 ஆயிரம் பேருக்கு விநியோகம் செய்துள்ளனர். ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

Post expires at 3:00am on Saturday May 6th, 2017

0 80
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க மெகா சைஸ் பூத் சிலிப்

ஆர்.கே.நகர் தொகுதியில் கள்ள ஓட்டை தடுக்க மெகா சைஸ் பூத் சிலிப் வழங்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் அடங்கிய பூத் சிலிப் வாக்காளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த பூத் சிலிப்பில் உள்ள புகைப்படத்தின் மேல் பகுதியில் மற்றொரு புகைப்படத்தை வைத்து ஜெராக்ஸ் எடுத்து, வாக்குச்சாவடி அதிகாரியிடம் காட்டி கள்ள ஓட்டுப்போட கடந்த தேர்தல்களில் முயற்சி செய்தார்கள். இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, ஆர்.கே.நகரில் வழக்கமாக வழங்கப்படுவது போன்ற பூத் சிலிப் வழங்காமல், மெகா சைஸ் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் நேற்று முன்தினம் முதல் தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.

இந்த பூத் சிலிப்பில் உள்ள படம் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை விட பெரிய அளவில் இருக்கும். அதனால், கள்ள ஓட்டு போட நினைப்பவர்கள் தங்களிடம் உள்ள பாஸ்போர்ட் அல்லது ஸ்டாம்ப் சைஸ் புகைப்படத்தை இந்த பூத் சிலிப்பில் வைத்து ஜெராக்ஸ் எடுக்க முடியாது. மேலும், பூத் சிலிப் பின்புறம் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் பெயர் மற்றும் அவரது செல்போன் எண்கள் இடம்பெற்றிருக்கும். ஏதாவது பிரச்னை என்றால், வாக்காளர்கள் உடனடியாக வாக்குச்சாவடி நிலைய அலுவலர் செல்போன் எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

Post expires at 4:30am on Friday May 5th, 2017

0 127
ஆர்கே நகரில் பெரிய கலவரம் வர வாய்ப்பு: தேர்தலை தடுக்க சதி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் சதி செய்து வருவதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் யார் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் களமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. சசிகலா அணியில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும் களத்தில் உள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்த தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு பிரச்சார யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க பெரிய சதியே நடக்கிறது என ஓபிஎஸ் அணியின் முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கூறியுள்ளார்.

தனியார் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கே.சி.பழனிச்சாமி, ஆர்கே நகர் இடைத்தேர்தலை தடுக்க பெரிய சதியே நடக்கிறது. கலவரத்தின் மூலம் தேர்தலை தள்ளிவைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. மேலும், என்ன நடந்தாலும் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் முடிவுக்குப் பின்னர் தமிழகம் ஒரு கூவத்தூரை சந்திக்கும் என அவர் தெரிவித்தார்.

Post expires at 4:37pm on Thursday May 4th, 2017

RANDOM POSTS

0 205
சாஸ்திரங்களின் படி, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் நம்மைப் பற்றிய சில ரகசியங்களைக் கூறும். அதில் பிடித்த நிறங்கள் முதல், பழக்கவழக்கங்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வெளிக்காட்டும். குளிக்கும் போது, ஆரம்பத்தில் ஒவ்வொருவரும்...