Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "daily"

daily

0 143
தினம் ஒரு கைப்பிடி 'வால்நட்' போதும் - இளைஞர்களின் மனநிலை மேம்படும்: புதிய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்

தினமும் ஒரு கைப்பிடி வால்நட் (அக்ரூட்) சாப்பிட்டால், இளை ஞர்களின் மனது மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களுடைய மனநிலை மேம்படும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யாளர் பீட்டர் பிரிபிஸ், வால்நட் பற்றி ஆய்வு செய்துள்ளார். இது குறித்து பீட்டர் கூறியதாவது:

வால்நட்டில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதுபற்றி இதற்கு முன்னர் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடலில் தேவையில்லாத கொழுப் புகளை கரைக்கவும், இருதய நோய், நீரிழிவு நோயை தடுக்கவும் வால்நட் மிகவும் பயன்படுகிறது என்று அந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டன.

இப்போது நாங்கள் மேற் கொண்ட ஆய்வு வேறு வகை யானது. வால்நட்டால் மனித அறிவாற்றல், மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தோம். அதற்காக 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட 64 மாணவ, மாணவிகளை தேர்வு செய்தோம்.

அதன்படி தினமும் ஒரு கைப்பிடி அளவுள்ள வால்நட்டை 8 வாரங்களுக்கு அவர்களை சாப்பிட செய்து ஆய்வு செய்தோம். அதன்பிறகு அவர்களுடைய மனநிலை மேம்படுவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக வால்நட் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கக் கூடிய அளவுக்கு மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய மனநிலையும் (மூட்) மகிழ்ச்சியாக மாறி உள்ளது. உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆய்வில் பங்கெடுத்த வர்களை தினமும் 3 துண்டு என 16 வாரங்களுக்கு (சிலைஸ்) வாழைப்பழ பிரட் சாப்பிட சொன்னோம். இதில் 8 வாரங் கள் வாழைப்பழ பிரட்டுடன் வால் நட்டும், 8 வாரங்கள் வால்நட் இல்லாமல் வாழைப்பழ பிரட்டும் சாப்பிட்டனர். இதுபோல் சில மாற்றங்களை செய்து ஒவ்வொரு 8 வார முடிவிலும் மாணவர்களின் மனநிலையை அளவிட்டோம்.

பின்னர் அவர்கள் ஒவ் வொருவரிடமும் சில கேள்விகள் கேட்டு ஆய்வு செய்தோம். பதற்றம், மன அழுத்தம், கோபம், சோர்வு, சுறுசுறுப்பு, குழப்பம் ஆகிய மனநிலைகள் குறித்து ஆய்வு செய் தோம். கேள்விகளுக்கு அளிக் கப்பட்ட பதிலின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் வால்நட் சாப்பிட்ட இளைஞர்களின் மன நிலை, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது. அதேவேளையில் இளம் பெண்களின் மனநிலையில் எந்த முன்னேற்றத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. அது ஏன் என் றும் எங்களுக்கு தெரிய வில்லை.

இவ்வாறு பீட்டர் கூறியுள்ளார்.

வால்நட்டில் ஆல்பா லினோ லெனிக் ஆசிட், விட்டமின் இ, மெலடோனின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் என தெரியவந்துள்ளது.

Post expires at 6:03am on Friday January 27th, 2017

0 143

வாய் துர்நாற்றம் என்பது உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. இப்பிரச்சனையால் ஏராளமான மக்கள் பல இடங்களில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வாய் துர்நாற்றம் கடுமையாக இருக்கும் போது, அதனை சரிசெய்யும் முயற்சியில் ஒருவர் ஈடுபடாவிட்டால் பின் நிலைமை மோசமாகக் கூடும். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட மௌத் வாஷ்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் மௌத் வாஷைப் பயன்படுத்தினால் விரைவில் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

இப்போது வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் அதனைப் போக்க உதவும் நேச்சுரல் மௌத் வாஷ் குறித்து காண்போம்.

வாய் துர்நாற்றத்தின் பின்னணியில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் மோசமான வாய் சுகாதாரம், குறிப்பிட்ட உடல்நல கோளாறுகளான ஹைப்போ தைராய்டு, நீரிழிவு, ஈறு நோய்கள், ஈஸ் ட் தொற்றுகள், செரிமான கோளாறுகள், சைனஸ் பிரச்சனைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் மௌத் வாஷில் சேர்க்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த மௌத் வாஷ் வாய் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, வாயின் முழு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்தேன் – 2 டீஸ்பூன்

இந்த மௌத் வாஷில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டிருப்பதால், இது பற்களில் படிந்துள்ள கறைகளைப் போகுவதோடு, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

வாய் வறட்சியினாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். ஆனால் இந்த மௌத் வாஷில் சேர்க்கப்படும் தேன் வாயில் எச்சில் உற்பத்தியை அதிகரித்து, வாயை போதிய அளவு ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.

இந்த மௌத் வாஷில் சேர்க்கப்படும் பட்டை வாயில் ஏற்படும் கடுமையான துர்நாற்றத்தைத் தடுக்கும்.

* மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக ஒரு பௌலில் கலந்து கொள்ள வேண்டும்.

* வேண்டுமானால் அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

* பின் பிரஷ் செய்யும் முன் இந்த நேச்சுரல் மௌத் வாஷைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், வாய் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

RANDOM POSTS

0 68
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி...