Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "color"

color

0 1729
மைல் கல். அதுல இருக்கிற ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம் இருக்கு…
மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம் தெரியுமா?. எப்படின்னு பாக்கலாமா?  இதோ …சாலையில் உள்ள மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் பூசப்பட்டிருந்தால் அது நீங்கள் செல்வது தேசிய நெடுஞ்சாலை என்று அர்த்தம்.

மைல்கல்லில் பச்சை மற்றும் வெள்ளை கலர் பூசப்பட்டிருந்தால் அந்த சாலை மாநில நெடுஞ்சாலை என்று அர்த்தம்.
மைல்கல்லில் நீலம் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது மாவட்டச்  சாலை ஆகும்.
மைல்கல்லில் பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் ஊரக அல்லது கிராமப்புறச் சாலை ஆகும்.

Post expires at 1:56am on Thursday February 9th, 2017

0 190
பச்சை நிறமே. பச்சை நிறமே..: 'ஜெ.' வாக மாறினார் சசிகலா!

திமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலா, இன்று ஜெயலலிதாவாக மாறி காட்சியளித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல, அதே நிற சேலையில் பளிச்சென்று மேக்கப்போடு கலக்கலாக காட்சி தந்தார் வி.கே.சசிகலா.

அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான நகலை எடுத்துக்கொண்டு, போயஸ்தோட்டம் நோக்கி ஓட்டமாக ஓடி வந்த தமிழக முதல்வரும், பாராளுமன்ற துணைசபாநாயகருமான தம்பித்துரையும் அங்கு மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை கண்டனர். கண்டதும் கண்ணீர் சிந்தினர்.

ஆஹா, இது நமது ‘அம்மா’ போலவே இருக்கிறாரே ‘சின்னம்மா’ என ஆச்சரியம் அடைந்தனர்.

கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் உங்களை பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளார்கள். நீங்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என வேண்டினர்.

சசிகலா பொதுக்குழு தீர்மான நகலை வாங்கி ஜெ.படத்தின் முன் வைத்து வணங்கி, சிறிது நேரம் கழித்து தனது சம்மதத்தை தெரிவித்தார்.

இன்று சசிகலா பச்சை நிற சேலையில் பச்சை பசேல் என்று பளிச்சென்று காட்சி அளித்தது அதிமுக தொண்டர்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பச்சை கலர் செண்டிமெண்டான கலர். அவர் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது பச்சை நிற புறவையே அணிந்திருப்பார். அவரைப்போலவே தற்போது சசிகலாவும் பச்சை நிறத்துக்கு மாறியிருப்பது தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பச்சை நிறமே பச்சை நிறமே!

இலையின் இளமை பச்சை நிறமே!

உந்தன் நரம்பும் பச்சை நிறமே!

எனக்கு சம்மதம் தருமே!

என்ற அலைபாயுதே படத்தின் வரிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

  • சசிகலா தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
  • ‘சசிகலா, எம்.ஜி.ஆரின் ஆளுமல்ல, ஜெ.,யின் ஆளுமல்ல!: அன்றே சொன்னார் அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., வலம்புரி ஜான் !

Post expires at 10:50am on Monday January 30th, 2017

RANDOM POSTS

0 68
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி...