Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "விஜயகாந்த்."

விஜயகாந்த்.

0 226
முண்டாசு கட்டிய விஜயகாந்த் - அடையாளம் தெரியாமல் நடமாடிய தொண்டர்கள்

ஈரோட்டில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், முண்டாசு கட்டியிருந்ததால் தொண்டர்கள் அடையாளம் தெரியாமல் நடமாடிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், அவர் கவுந்தம்பாடிக்கு செல்லும் வழியில் சென்னிமலை அடுத்த வரதக்காடு என்ற இடத்தில் தோப்புவீடு ஒன்றினை பார்த்ததும் அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு கிளம்பலாம் என்று கருதி விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது, விஜயகாந்த் வேட்டியுடன், தலையில் முண்டாசு கட்டி இருந்ததால், பலருக்கும் விஜயகாந்தை அடையாளம் தெரியாமல் இருந்துள்ளனர். அப்போது தோட்ட உரிமையாளர் ஏகப்பட்ட கார்களுடன் ஆட்கள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், விசாரிப்பதற்காக அருகில் சென்று பார்த்துள்ளார்.

அப்போதுதான் அங்கு வந்திருந்தது விஜயகாந்த் என்று தெரிந்துள்ளது. இதனை கனவிலும் எதிர்பார்க்காத அவர் இன்ப அதிர்ச்சியடைந்து உள்ளார். பின்னர், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு விஜயகாந்த் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Post expires at 2:15am on Friday February 10th, 2017

0 344
மழையில் மக்களை சந்திக்க மறுக்கும் முதல்வர் மக்களின் முதல்வரா? விஜயகாந்த்.
மழையில் மக்களை சந்திக்க மறுக்கும் முதல்வர் மக்களின் முதல்வரா? விஜயகாந்த்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யவேண்டி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை:
’’தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழையால் கனமழை கொட்டி வருகிறது. தாழ்வான இடங்களிலும், குடிசைப்பகுதிகளிலும் மழைநீர் உட்புகுந்து கடும் சேதத்தை விளைவித்து வருகிறது. இந்நிலையில் நான், நேற்று (14.11.2015) கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினேன். ஆனால் தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரண உதவிகள் எதையும் வழங்கவில்லையென்றும், ஆங்காங்கே பெயரளவிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பெருமளவு பாதிப்பை தடுத்திருக்க முடியுமென்றும், பாதிக்கப்பட்ட இடங்களில் உரிய முறையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படாததும், குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், ஓடைகள் போன்ற நீர் நிலைகள் சரிவர தூர்வாரபடாமல் இருந்ததுமே மிகப்பெரிய சேதத்திற்கு காரணமென, பாதிக்கப்பட்ட மக்கள் அதிமுக அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர். 
தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் பேட்டியளித்தனர். இதுதான் தேவையான நடவடிக்கையா? முன்னேற்பாடா? சரியான முறையில் நடவடிக்கை எடுத்து, முன்னேற்பாடுகள் செய்திருந்தால், பல மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையும், பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தீவுபோல் காட்சியளிக்கும் நிலையும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்காது. கன மழையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும் சந்தித்துவரும் இந்த சமயத்தில்கூட, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க மறுக்கிறார். இவர்தான் மக்கள் முதல்வரா? மக்களுக்கான நிவாரண உதவிகளும் சரிவர போய்ச் சேரவில்லை. எனவே வசதி படைத்தவர்களும், தொழிலதிபர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், தங்களால் ஆன உதவிகளை செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட தேவையான நிவாரண உதவிகளை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 
மேலும் சாலைகள் பலத்த சேதமுற்று குண்டும், குழியுமாக மாறியுள்ளன. மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. தொடர்ந்து கனமழையும் கொட்டி வருவதால், பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பைக் கருதி தாங்களும், தங்கள் குழந்தைகளும் வீட்டிலிருந்து, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

RANDOM POSTS

0 68
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி...