Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "மோடி"

மோடி

0 107
பொங்கலுக்கு விடுமுறை இல்லை: தமிழர்களை வஞ்சிக்கும் மோடி
கட்டாய அரசு விடுமுறை தினத்தில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர். 

இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் தலைவர் துரைப்பாண்டியன் கூறியதாவது:-
இதை மாற்றக்கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். புஜா விடுமுறை கணக்கை சரி செய்வதற்காக இப்படி செய்துள்ளார்கள். பொங்கல் பண்டிகை தினத்தை கட்டாயம் விடுமுறை தினமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் யாரும் அலுவலகத்துக்கு செல்ல மாட்டோம். இதைதான் எங்களால் செய்ய முடியும், என்று கூறினார்.

Post expires at 2:11am on Friday February 10th, 2017

0 187
புதிய 1,000 ரூபாய் நாளை அறிவிப்பா?
ஆங்கில புத்தாண்டு முதல், புதிய, 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்படலாம்’ என, தகவல் பரவி வருகிறது. எதிர்பார்ப்பு: நாட்டில் புழக்கத்தில் இருந்த, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு, புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
இதுபற்றிய அறிவிப்பை, பிரதமர் மோடி, நவ., 8ல், ‘டிவி’ வாயிலாக அறிவித்தார். இந்நிலையில், நாளை இரவு, அவர், ‘டிவி’யில் பேசப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, புதிய, 1,000 ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது

Post expires at 2:28am on Monday January 30th, 2017

0 112
ரிலையன்ஸின் விளம்பரத் தூதர் பிரதமர் மோடி! - ஊழியர்கள் சங்கம் வேதனை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கிறார் பிரதமர் மோடி என்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.அபிமன்யூ கூறியுள்ளார்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாடு டிசம்பர் 31ம் தேதி துவங்கி ஜனவரி 3ம் தேதி வரை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.அபிமன்யூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த 7 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த இந்நிறுவனத்தை வளரவிடாமல் முடக்கியது அரசுதான் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தது உண்மை.

2007ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை நெட் ஒர்க்குக்கு தேவையான கருவிகளை வாங்க விடாமல் அரசு தடுத்தது. 4.5 கோடி புதிய செல்போன் இணைப்புகள் வழங்குவதை அமைச்சராக இருந்த ஆ.ராசா தன்னிச்சையாக ரத்து செய்தார்.

அதேபோல் 2010ஆம் ஆண்டு 9 கோடி இணைப்புகளுக்குத் தேவையான புதிய கருவிகள் வாங்குவதை உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

8,300 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரிகள் – ஊழியர்கள் இணைந்து செயல்பட்டதன் காரணமாக 2015-16ஆம் ஆண்டு 3,000 கோடி ரூபாயாக குறைந்தது.

இந்நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக தனியார் நிறுவனங்களை பாஜக அரசு மேம்படுத்துகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கிறார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது” என்று கூறியுள்ளார்.

 

Post expires at 2:20am on Monday January 30th, 2017

0 895
மோடியின் அதிரடி ; அமைதி காக்கும் ஓ.பி.எஸ் : பரபரப்பு பின்னணி
தமிழகத்தின் பல முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை வருமான வரித்துறையினர் குறி வைத்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஓ.பி.எஸ் மற்றும் அவரின் உறவினர்கள் உட்பட அதிமுக ஐவரணியில் உள்ள சில அமைச்சர்களின் வீட்டில் கார்டன் தரப்பு நடத்திய சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்கள் கிடைத்ததாக அப்போதே தகவல் வெளியானது. அதன் பின் ஓ.பி.எஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஐவரணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.
ஆனால், அவர்களிடமிருந்து என்ன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என ஜெ.வின் தரப்பு வெளியில் எதுவும் கூறவில்லை.  இதற்கு பின்னால், சசிகலாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இருந்தார் என்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றாகவே தெரியும்.
தற்போது ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருக்கிறார். ஆனால், அவருக்குரிய மரியாதையை மன்னார்குடி வட்டாரமோ, அதிமுக அமைச்சர்களோ, கலெக்டர்கள் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகளோ கொடுக்கவில்லை என்பது அவர் உணர்ந்துள்ளார்.
எனவே தான் வர்தா புயலின் போது, அதிகாரிகளுடன் நன்றாக திட்டமிட்டு களத்தில் இறங்கி வேலை பார்த்தார் ஓ.பி.எஸ். புயல் விவகாரத்தில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டது என ஊடகங்களிடம் நற்பெயரும் வாங்கினார் ஓ.பி.எஸ்.  அவர் அப்படி செயல்பட்டது கார்டன் தரப்பு ரசிக்கவில்லையாம். மன்னார்குடி தரப்பினர் அவரிடம் கோபமாக நடந்து கொண்டதாக கூட செய்திகள் வெளியானது.
எனவே, வர்தா புயல் தாக்கத்தின் விளைவாக, தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிதி நிவாரணம் வேண்டி, டெல்லி சென்ற ஓ.பி.எஸ் உடன் இருந்தவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு மோடியிடம் எல்லாவற்றையும் விளக்கமாக பேசியுள்ளாராம். ‘நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.. மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று கூறி அவரை அனுப்பி வைத்த மோடி, அடுத்த நாளே ராம் மோகன் ராவ் வீட்டிற்கு வருமான வரித்துறையினரை அனுப்பி வைத்தார் எனக் கூறப்படுகிறது.
தன்னை பழிவாங்கியவர்களை தற்போது ஓ.பி.எஸ் பழி வாங்க தொடங்கி விட்டார் எனவும், அதன் விளைவே, ராம் மோகன் ராவ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான இளங்கோவனின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திக் கொண்டிருக்கும் சோதனைகளுக்கு காரணம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதனால்தான், தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏன்?…அதிகாரிகள் தலைமைச் செயலகம் நுழைந்து சோதனை நடத்திய போது கூட, நடக்கட்டும் என  அவர் அமைதியாகவே இருந்தார் எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து திரும்பிய ஓ.பி.எஸ் இதுவரை சசிகலாவை சந்தித்து பேசவில்லை. வருகிற 29ம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவில் தனக்கு எதிராக சிலர் குரல் கொடுப்பார்கள் எனத் தெரிந்தும், எந்த கவலையும் இல்லாமல், முதல் அமைச்சர் வேலையை அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஓ.பி.எஸ்.
பொறுத்திருந்து பார்ப்போம்….

Post expires at 4:34am on Tuesday January 24th, 2017

0 208
மோடி என்னும் மாயக்காரனின் மாய வித்தை

என் பாலிய வயதில் நான் Pied Piper of Hamelin என்ற கதையைக் கேட்டு இருக்கிறேன். அதில் எலிகள் அதிக அதிகமாக பெருகி விட்ட கேமிலின் என்ற ஜெர்மனிய நகர மேயர் வருத்தம் அடைகிறார். தனது அமைச்சர்களின் பரிந்துரைப்படி இசை குழல் வித்தகனை தன் ராஜ சபைக்கு அழைக்கிறார்.
இசை குழல் வித்தகன்  சாதாரண ஆள் இல்லை. அவனது இசைக்கு மயக் காதவர்களே  கிடையாது. சபையில் மேயர், நகரின் அனைத்து எலிகளையும் ஒழித்தால் 1000 கில்டர் தங்க நாணயங்கள் தருவதாக உறுதி சொல்கிறார். தனது இசையால் நகரின் அனைத்து எலிகளையும் மயங்க வைத்து ஆற்றில் மூழ்கடித்து வெற்றி காண்கிறார் வித்தகன். மக்கள், எலிகள் இனி இல்லை என்று சந்தோசப் படுகிறார்கள். ஆனால் மேயர் முன்பு வாக்கு அளித்ததுப் போல 1000 கில்டர் தங்க நாணயங்கள் அல்லாமல் 50 கில்டர் தங்க நாணயங்கள் தர முற்படுகிறார். இசை குழல் வித்தகன் கோபப்படவில்லை, மீண்டும் இசைக்க ஆரம்பிக்கிறான். இந்த முறை அவன்  கவர்ந்தது எலிகளை அல்ல, குழந்தைகளை. மேயரும், மக்களும் பதறிப் போய் அவனுக்கு வாக்களித்தப்படி 1000 கில்டர் தங்க நாணயங்களை தருகின்றன.

பேச்சு வித்தகன்

கேமிலின் இசை வித்தகனைப் போல ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் மேன்மை பொருந்திய பேச்சு வித்தகன் ஒருவர் இருக்கிறார். தேர்தலின் போது அவர் பேசப் பேச மக்கள் அதிகம் அதிகமாக கவரப்பட்டன. மாயக் கண்ணன் புல்லாங்குழலை ஓசை கேட்ட கோபியர் போல. ஒரு நாள் தேசத்தின் சிம்மாசனம் அவர் வசம் ஆனது. காலங்கள் சென்றது. ஓர் ஆண்டுகள் கழிந்து  மகுடி சத்தம் நின்றவுடன் சீரும் பாம்புகளைப் போல மக்கள் கேள்விகளை கேட்க அரம்பித்தன.  இந்த முறை வித்தகன் பேசவில்லை. இசைக்க ஆரம்பித்தரர். வித்தகன் கருப்பு பணம் எனும் ராகத்தை பாட ஆரம்பித்தார்.

என்ன ஆச்சரியம்! மக்கள் எல்லாம் குட்டி குட்டி எலிகளாக மாறி, வங்கிகள்/ATMகள்  நோக்கி வரிசையாக செல்ல ஆரம்பித்தன. வரிசையில் நிற்கும் எலிகள் எல்லாம் குட்டி குட்டி எலிகள். வித்தகன் வாசிக்க போகிறான் என்பதை அறிந்த கருத்து கொளுத்த எலிகள் எல்லாம் தங்களின் காதுகளில் பஞ்சை வைத்து அடைத்து கொண்டன. அந்த கருத்து கொளுத்த எலிகளில் மாட்டியது என்னவோ சில ரெட்டி எலிகளும், இரானி எலிகளும் தான். சில எலிகள் வித்தகனை நோக்கி கேள்விகள் கேட்டதும், அதன் மீது தேச துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டது.

இன்றாவது பண்டம் கிடைக்குமா? என்று ஏக்கத்தில் எலிகள். அசரவில்லை வித்தகன். ஏன் எனில்? வரிசையில் நிற்பது குட்டி குட்டி எலிகள் தானே: வாக்களித்த மக்கள் இல்லையே என்ற நினைப்பு. நாள் ஒரு வண்ணமும், பொழுது ஒரு மேனியுமாக ஏழு சுவரங்களில் கட்டம் கட்டி பாட ஆரம்பித்தார் வித்தகன். சில எலிகள் பேங்க்/ATM வாசலில் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது போல நாதி அற்று பரலோகம் போயின. அப்போதும் வித்தகன் அச்சம்  கொள்ளவில்லை. ஏன் எனில்? வரிசையில் நிற்பது குட்டி குட்டி எலிகள் தானே: வாக்களித்த மக்கள் இல்லையே என்ற நினைப்பு.

அவர் 5000 ராகம் பாட ஆரம்பித்து இருக்கிறார் இதன்படி குறு எலிகள் இரு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு  பண்டங்கள் பெறப்படும். இது முந்தய டிசம்பர் 31  ராகத்திற்கு முற்றிலும் மாறானது.

புதிய தேசத்தில் நரிதனை பரி ஆக்கிய மாணிக்கவாசகர் போல குட்டி குட்டி எலிகளை எல்லாம் மக்களாக மாற்றப்படுவார்கள். அதற்கு புகாரி ராகம் தயாராக வைத்து இருக்கிறார் வித்தகன். அவன் அசைக்கிறான், இல்லை அவன் இசைகிறான். எலிகள் எல்லாம் தன் பண்டத்திற்காக  தெருவில் நிற்கின்றன. வித்தகன் மாயக்காரன் மட்டும் அல்ல, தந்திரக்காரனும் கூட.

Post expires at 4:26am on Tuesday January 24th, 2017

0 296

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். தமிழில் முத்திரை, கம்பீரம் படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திடீரென்று அரசியலில் குதித்தார். ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார்.

இதில் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. டெபாசிட்டையும் இழந்தார். இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்துடன் கவர்ச்சி உடை அணிந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் சுதந்திர தின விழாவை கொண்டாடினார்கள். இந்த விழாவில் பங்கேற்க ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அவரும் கவர்ச்சி உடை அணிந்து விழாவுக்கு வந்து இருந்தார்.

அந்த ஆடையில் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் இருந்தன. முன்புறம் பின்புறம் என்று ஆடை முழுவதும் மோடி படங்களாக காணப்பட்டன. இதை பார்த்ததும் கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

அத்துடன் மோடி ஆடையை உடுத்திக்கொண்டு இருக்கும் தனது படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு இருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராக்கி சாவந்த் செயலை பலர் கண்டித்து உள்ளனர். பிரதமரை அவமதித்த அவர் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

மோடி உருவப்படத்துடன் ஆடை அணிந்தது ஏன்? என்பது குறித்து ராக்கி சாவந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவரது உருவப்படத்துடன் ஆடை அணிந்து ஒபாமா நகரில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டேன். மோடியை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அவரும் இந்தியர்கள் மீது அக்கறை கொண்டு இருக்கிறார். எனவே மோடி உருவப்படத்துடன் நான் ஆடை அணிந்து சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது தவறு அல்ல”.

இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.

RANDOM POSTS

0 68
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி...