Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "பைரவா"

பைரவா

0 94
பைரவா வீடியோ லீக்- அதிர்ச்சியில் படக்குழு

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் கடைசி பாடல் காட்சி ஒன்று ஸ்வீஸில் எடுக்கப்பட்டு வருகின்றது, படக்குழுவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது.

பாடல் காட்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது யாரோ ரசிகர் ஒருவர் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுவிட்டார்.

இதை தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவ, படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாம்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்  Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

ஆரம்பத்திலேயே பட்டைய கிளப்பும் ‘பைரவா’ விஜய்

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக விஜய் நடிக்கும் படங்களில் அவரது அறிமுக பாடல் பெரியளவில் வரவேற்பு பெறும். அந்த வகையில் படக்குழுவினரும் விஜய்யின் அறிமுக பாடலை மிகவும் பிரம்மாண்டமாகவும், அதேநேரத்தில் அனைவரையும் கவரும் வகையிலும் படமாக்குவர்.

அதேபோல், விஜய் தற்போது நடித்து வரும் ‘பைரவா’ படத்திலும் விஜய்யின் அறிமுக பாடலையும் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார்களாம். சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்துள்ள இப்பாடலில் முதல் வரி தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ‘பட்டைய கிளப்பு, பட்டைய கிளப்பு பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு’ என்று இந்த பாடல் தொடங்குகிறது.

அறிமுக பாடலில் பட்டைய கிளப்ப வரும் விஜய்க்கு, மொத்தம் இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன. இதில் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசைக்கு பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதிஷ், அபர்னா வினோத், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்  Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

RANDOM POSTS

0 654
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1...