Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "பணம்"

பணம்

0 70
தேர்தலுக்காக பணம் கொடுத்த பட்டியல் வெளியீடு 'பகீர்!': விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை தொடர் விசாரணை

சென்னை, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, தினகரன் கோஷ்டியினர் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான முக்கிய ஆவணத்தை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள னர். இதன் மூலம், தேர்தலுக்காக எவ்வளவு பணம், யாரால் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரிடம், வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், ஆட்சி அதிகாரத்தில் தொடர முடியும் என்ற கட்டாயத்தில், தினகரன் அணியினர் உள்ளனர்.

அதனால், வாக்காளர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்தன. பணம் தரப்பட்டதற்கான ஆதாரங்களும், தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டன. ரூ.89 கோடி அதனால், தேர்தலை நியாயமாக நடத்துவதற் காக, சிறப்பு தேர்தல் அதிகாரியை, தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்தது. அவரது மேற்பார்வையில், பட்டுவாடாவை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கையில், தேர்தல் ஆணையம் இறங்கியது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர், உதவியாளர்கள், உறவினர்கள் வீடுகளில், நேற்று முன்தினம் வருமான வரி சோதனை நடந்தது. அதில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பட்டு வாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக, வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், ‘இது, அரசியல் பழிவாங்கும் செயல்; தினகரன் வெற்றியை சீர்குலைக்கும் முயற்சி’ என்று, வருமான வரி சோதனை குறித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட, தினகரன் அணியினர் குற்றம் சாட்டினர். ‘தன் வீட்டில் எதுவும் சிக்கவில்லை’ என, அமைச்சர் திட்டவட்டமாக மறுத்தார். தலா 4,000 ரூபாய் இந்த சூழலில், சோதனையில்கைப்பற்றிய ஆவணத்தில் ஒன்றை, நேற்று வருமான வரித்துறை வெளியிட்டது. அதில், தினகரன் தரப்பினர், 85 சதவீத வாக்காளர்களுக்கு, அதாவது, இரண்டு லட்சத்து, 24 ஆயிரத்து, 145 பேருக்கு, தலா, 4,000 ரூபாய் வீதம், 89 கோடியே, 65 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் வினியோகம் செய்துள்ள தகவல் இடம் பெற்றுள்ளது.

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்தி லிங்கம் எம்.பி., ஆகியோரிடம், குறைந்தபட்சம், 11.68 கோடி ரூபாய் முதல் அதிகபட்சம், 14.91 கோடி ரூபாய் வரை, பகிர்ந்து அளிக்கப்பட்ட பட்டியலும் உள்ளது. இது, ஓட்டுக்கு பட்டு வாடா புகாரை நிரூபிப்பது போல் உள்ளதால், அது பற்றிய அறிக்கையை, டில்லிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், வருமான வரித் துறையினர் அனுப்பியுள்ளனர். அமைச்சருக்கு சம்மன் வருமான வரித்துறையின் சம்மனை ஏற்று, விஜயபாஸ்கரின் தந்தை, திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதுபோல், அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட் டோருக்கும், வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அவர்கள், நாளை அல்லது நாளை மறுநாள் ஆஜராவர் என, தெரிகிறது. ‘டிவி’க்களுக்கு கசிந்தது எப்படி? விஜயபாஸ்கர் உள்ளிட்ட தினகரன் அணியினர், வருமான வரித்துறையினர் மீது குற்றம் சாட்டினர். அதனால், கடுப்பான, வருமான வரி அதிகாரிகள் சிலர், அமைச்சர் கூறும் தகவல்கள் பொய் என்பதை நிரூபிக்க முடிவு செய்தனர்.

அது, உடனடியாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக, முக்கிய ஆவண பிரதியை, ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக, ‘டிவி’ சேனல்களுக்கு அனுப்பியுள்ளனர். அதை, வருமான வரி உயரதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். ஆவணத்தை பறித்தவர் மீது புகார் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த போது, முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர். அது மட்டுமின்றி, அமைச்சர் வீட்டில் இருந்த ஒரு ஆவணத்தை, தளவாய்சுந்தரம் எடுத்துக் கொண்டு வெளியே வந்து, ஒருவரிடம் கொடுத்த காட்சி, ‘டிவி’யில் ஒளிபரப்பானது.

அந்த ஆவணத்தை தான், தற்போது வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், அந்த ஆவணத்தை பறித்துக் கொண்டு ஓடியவர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.இது பற்றி வருமான வரித்துறையினர் கூறும்போது, ‘அந்த ஆவணத்தை, நாங்கள் ஏற்கனவே புகைப்படம் எடுத்திருந்ததை அறியாமல், அதை திருடிச் செல்ல முயன்ற னர். இது தொடர்பாக, டில்லிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்’ என்றனர். –

Post expires at 5:26pm on Wednesday May 17th, 2017

0 272

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், அந்த வேதனையிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு இடைவிடாது பணிகளை செய்து முடித்துக் கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், அவருடைய நேர்மை அவருக்கு கைகொடுத்ததா? என்றால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இவர் இதுவரை தமிழ் சினிமாவில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்களுக்கான சம்பளப் பணத்தை காசோலைகளாகத்தான் வாங்கியுள்ளார். அப்படி வாங்கியுள்ள காசோலைகளில் பெரும்பாலானவை இவரது வங்கி கணக்கில் பணத்தை கொண்டுவந்து சேர்க்கவில்லை. மாறாக, அவரது வீட்டு அலமாரியில் காகிதங்களாகவே படிந்துபோயுள்ளன.

மஞ்சள் காமாலை நோய் முற்றியநிலையில் முத்துக்குமாரின் மருத்துவச் செலவுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டதாம். அந்த சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்து கொண்டிருந்தபோதுதான், நா.முத்துக்குமாரை மரணம் ஆட்கொண்டு விட்டது.

இவர் வீட்டு அலமாரியில் காகிதங்களாக படிந்து போயிருக்கும் காசேலைகளின் மொத்த பணமதிப்பு ரூ.70 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த காசோலைகள் எல்லாம் பணமாக மாறியிருந்தால் இன்று நாம் ஒரு மகா கவிஞனை இழந்திருக்க மாட்டோம் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

நா.முத்துக்குமாரை தங்களின் தேவைக்கு பயன்படுத்திக் கொண்ட பல தயாரிப்பாளர்கள், அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை முறையாக கொடுக்க தவறியதை நாம் என்னவென்று சொல்வது. இனிமேலாவது அவருக்கு சேரவேண்டிய பணத்தை தயாரிப்பாளர்கள் திருப்பி கொடுக்க முன்வர வேண்டும்.

நா.முத்துக்குமாரின் உயிரை காப்பாற்ற உதவாத அந்தப்பணம், அவர் உயிராக நேசித்த அவரது குடும்பத்தாரையாவது இனி காப்பாற்றட்டும்.

RANDOM POSTS

0 203
சாஸ்திரங்களின் படி, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் நம்மைப் பற்றிய சில ரகசியங்களைக் கூறும். அதில் பிடித்த நிறங்கள் முதல், பழக்கவழக்கங்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வெளிக்காட்டும். குளிக்கும் போது, ஆரம்பத்தில் ஒவ்வொருவரும்...