Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "நாள் பலன்கள்"

நாள் பலன்கள்

0 694
இன்றைய 6.2.17 ராசி பலன்கள்
மேஷம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். முகப்பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவனர்களின் ஆதரவுக் கிட்டும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் வந்துப் போகும். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

கடகம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

சிம்மம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

கன்னி

கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

துலாம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

விருச்சிகம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

தனுசு

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

மகரம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

கும்பம்

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மீனம்

திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

Post expires at 11:55pm on Sunday March 5th, 2017

0 454
இன்றைய 2.2.17 ராசி பலன்கள்
மேஷம்
திட்டமிட்டவை தாமதமாக முடியும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். இரவு 8.40 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ரிஷபம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடனைப் பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

மிதுனம்

எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

கடகம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

சிம்மம்

இரவு 8.40 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

கன்னி

குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புது நட்பு மலரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். இரவு 8.40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

துலாம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

விருச்சிகம்

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

தனுசு

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

மகரம்

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கெரளவம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

கும்பம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அழகு, இளமைக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

மீனம்

இரவு 8.40 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். தடைப்பட்ட வேலைகளை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

Post expires at 1:51am on Thursday March 2nd, 2017

0 522
இன்றைய 1.2.17 ராசி பலன்கள்
மேஷம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ரிஷபம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப் பச்சை
மிதுனம்
உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
கடகம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்

சிம்மம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்

கன்னி

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

துலாம்

கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

விருச்சிகம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

தனுசு

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மகரம்

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

Post expires at 1:47am on Wednesday March 1st, 2017

RANDOM POSTS

0 649
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1...