Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "நயன்தாரா"

நயன்தாரா

0 450
அவருக்கு லிப்ஸ்,இவருக்கு டாட்டூ, இப்போ விக்கிக்கு?

நயன்தாரா சிம்புவுடன் லவ்வில் இருந்தபோது, அவருடன் நடித்துக்கொண்டு இருந்த வல்லவன் படத்திற்காக, தன் உதட்டை சிம்பு கடிப்பது மாதிரி ஒரு போஸ்டர் எடுக்க அனுமதித்தார். அது தான் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர். காதல் மயக்கத்தில், காதலனுக்காக நயன் செய்தது இது.

அடுத்து, சிம்புவுடன் பிரேக் அப் ஆகி, பிரபுதேவாவுடன் லவ் ஆனார். அந்த காதல் மயக்கத்தில் தன் சம்பாத்தியத்தை கொடுத்தது ஒருபுறம், தன் கையில் பிரபு என்று பச்சை குத்தி கொண்டார்.

அது அவருக்கு செஞ்சாச்சு. இது இவருக்கு செஞ்சாச்சு. இப்போ காதலில் உள்ள விக்னேஷ் சிவனுக்கு என்ன செய்வது?

ஹாலிவுட் பாணிக்கு மாறிவிட்டார். ஹாலிவுட் நடிகைகள் தான் தன் காதலன் பெயரின் முதல் எழுத்தை கம்மலாக போட்டுகொள்ளுவது வழக்கம். ஆளை மாற்றும்போது கம்மலை கழட்டி விடலாம் பாருங்க.அதான்…

முதன் முதலாக, தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா தன் காதலின் பெயரின் வி என்ற முதல் எழுத்தை கம்மலாக போட்டு உள்ளார்.

 

Post expires at 2:52am on Monday February 6th, 2017

0 178
நடிகைகள் பணத்துக்காக ஆடை களைவார்களா?- சுராஜ் மீது நயன்தாரா காட்டம்

‘கத்தி சண்டை’ படத்தை விளம்பரப்படுத்தும் பேட்டியில் நடிகைகளின் உடைகள் குறித்து இயக்குநர் சுராஜின் சர்ச்சையான கருத்துகளுக்கு நயன்தாரா காட்டமாக பதில் தெரிவித்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கத்தி சண்டை’. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. மேலும், வசூலிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

‘கத்தி சண்டை’ படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அப்படத்தின் இயக்குநர் சுராஜ் அளித்துள்ள பேட்டியில், “நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத் தான் ரசிகர்கள் விரும்புவார்கள். நடிக்க வேண்டும் என்றால் அதுக்கு தனியாகதான் படம் பண்ண வேண்டும். கிளாமராக செய்பவர்கள்தான் இன்று பெரிய நாயகியாக இருக்கிறார்கள்.

பசங்க படம் பார்க்கும் போது சந்தோஷமடைய வேண்டும். ஆடை வடிவமைப்பாளர் எல்லாம் முட்டி வரை மூடி உடை எடுத்து வருவார். இதெல்லாம் கட் பண்ணிடுடா, ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குறாங்க, நடிக்க சொல்லுடா என்று சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுராஜ்.

இக்கருத்துகளுக்கு அவரை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் சுராஜ் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுராஜின் கருத்துகளுக்கு நடிகை நயன்தாரா, “திரைத்துறையைச் சேர்ந்த ஒரு பொறுப்புள்ள நபர் எப்படி இவ்வாறான கீழ்த்தரமான, மலிவான கருத்தை தெரிவிக்க முடியும்? நடிகைகளுக்கு எதிராக தரக்குறைவாக பேச சுராஜ் யார்? பணம் கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நடிகைகள் ஆடைகளைக் களைந்து விடுவதாக அவர் நினைக்கிறாரா? நடிகைகளை ஆடை களைபவர்கள் என்பதாக மட்டுமே அவர் பார்க்கிறாரா? அவர் தன் குடும்பத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி இவ்வாறு தைரியமாக கூறிவிட முடியுமா என்ன?

‘பிங்க்’, ‘தங்கல்’ போன்ற திரைப்படங்கள் பெண்கள் அதிகாரத்தையும், பெண்களுக்கான மரியாதையையும் பேசும் காலகட்டத்தில் இந்த சுராஜ் எந்த காலத்தைச் சேர்ந்தவர்? நடிகைகள் கவர்ச்சி உடைகளை அவர்களுக்கு சவுகரியமாக இருக்கும் போதும் கதைக்குத் தேவைப்பட்டால் மட்டுமே அணிந்து கொள்கின்றனர். நடிகைகளை கவர்ச்சிப் பொம்மைகளாக பார்க்கவே பணம் செலவழித்து திரைப்படத்திற்கு வருவதாக அவர் எந்த ரசிகர்களை மனதில் கொண்டு கூறுகிறார்?

ஆடைகளைக் களையவே பெண்கள் பணம் பெற்றுக்கொண்டு நடிக்கின்றனர் என்ற கருத்துகளை கூறுவதன் மூலம் சினிமாவில் இதுதான் நடக்கிறது என்பதாக இளைஞர்கள் நினைக்குமாறு சுராஜ் தவறாக வழிநடத்துகிறார்.

நானும் வர்த்தக சினிமாவில் கவர்ச்சியாக நடித்துள்ளேன் ஆனால் சில ‘கீழ்நிலை ரசிகர்களை’ திருப்திப் படுத்துவதற்காக எனது இயக்குநர் அவ்வாறு நடிக்குமாறு கூறவில்லை மாறாக அது எனது தெரிவாக இருந்தால் மட்டுமே அவ்வாறு நடிப்போம். நடிகைகள் என்றால் ‘இப்படித்தான்’ என்று நினைக்க யாருக்கும் உரிமை கிடையாது” என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா.

Post expires at 5:47am on Friday January 27th, 2017

மீண்டும் திருமண கனவில் மிதக்கும் நயன்தாரா

நயன்தாராவின் காதல் வாழ்க்கையில் அடுத்தடுத்து சோகங்களே நிகழ்ந்தன. அவரது முதல் காதல் சிம்புவுடன் மலர்ந்தது. இருவரும் ‘வல்லவன்’ படத்தில் நடித்தபோது நெருக்கமாகி ஜோடியாக சுற்றி திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டனர். ஆனால் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன்பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது என்று இருந்த அவர் மனதை பிரபுதேவா கலைத்தார்.

விஜய்-நயன்தாராவை ஜோடியாக வைத்து ‘வில்லு’ படத்தை பிரபுதேவா இயக்கியபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த காதல் பல மாதங்கள் நீடித்தது. பட விழாக்கள் விருந்து நிகழ்ச்சிகளில் மற்றவர்களின் முணுமுணுப்புகள் பற்றி கவலைப்படாமல் ஜோடியாக கலந்துகொண்டார்கள். மனைவி, குழந்தையுடன் வாழும் பிரபுதேவாவின் குடும்பத்துக்கு நயன்தாரா துரோகம் செய்வதாக விமர்சனங்கள் கிளம்பின.

பிரபுதேவாவின் மனைவியும் தனது கணவரை விட்டு விடும்படி கண்ணீர் விட்டு கெஞ்சினார். அதனை இருவரும் பொருட்படுத்தவில்லை. நயன்தாராவை மணப்பதற்காக பிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் காதலின் வலிமையை உணர்த்த கிறிஸ்தவ மதத்தில் இந்து மதத்துக்கு மாறினார். இருவரும் திருமணத்தை ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடிப்பது, திருமண நகைகள், துணிமணிகள் எடுப்பது என்ற திட்டமிடலில் இருந்தபோது அவர்கள் காதல் எதிர்பாராமல் முறிந்து போனது.

இருவரும் காரணம் சொல்லாமலேயே பிரிந்து விட்டனர். அதன்பிறகு இனிமேல் தனக்கு காதலே இல்லை என்ற முடிவில் இருந்த நயன்தாரா வாழ்க்கையில் மூன்றாவது காதலராக டைரக்டர் விக்னேஷ் சிவன் நுழைந்து இருக்கிறார். இருவருக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் துளிர்த்ததாக கூறப்பட்டது. தற்போது அவர்கள் ஜோடியாக சுற்றி காதலை வளர்த்து வருகிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுகின்றனர். ஓணம் பண்டிகையை கேரளாவுக்கு சென்று கொண்டாடினார்கள். இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டு பிறகு அது மறுக்கப்பட்டது.

விக்னேஷ் சிவன் தாடியுடன் பிரபுதேவாவைப்போல் இருப்பதாலேயே நயன்தாராவை கவர்ந்து இருக்கிறார் என்று பட உலகில் பேச்சு உள்ளது. இந்த காதலும் முறிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதில் நயன்தாரா கவனமாக இருக்கிறார். விக்னேஷ் சிவன் குடும்பத்தினரை தனது வீட்டுக்கு அழைத்து சமீபத்தில் விருந்து கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்போது நயன்தாராவின் அன்பான உபசரிப்பில் அனைவரும் ஈர்க்கப்பட்டு அவர்தான் தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரவேண்டும் என்று முடிவு எடுத்தார்களாம்.

நயன்தாரா மார்க்கெட் தற்போது உச்ச நிலையில் இருக்கிறது. ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக திருமணம் இருக்காது என்று தெரிகிறது. ஆனாலும் விக்னேஷ் சிவனை மணக்க வேண்டும் என்ற திருமண கனவில் உறுதியாக இருக்கிறார். அடுத்த வருடம் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்  Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 179

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் என்ற நிலை வந்துவிட்டது, ஆனால், சமீபத்தில் வந்த திருநாள் பெரிதும் ரசிகர்களை கவரவில்லை.

இப்படத்தில் ஒரு சிறுவன் இவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி, இதை பலரும் கண்டித்து இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த காட்சியில் நடித்த சிறுவனின் தாய், இதை பேஸ்புக் பக்கத்தில் பெருமையாக பகிர்ந்துள்ளார், அதை ஷேர் செய்து பல ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

0 105
டோரா'வான நயன்தாரா

அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் நயன்தாரா. இதில் முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், ஹரிஷ் உத்தமனும் நடித்து வருகின்றனர். இப்படத்தினை இயக்குனர் சற்குனம் முதல் பிரதி அடிப்படையில் ஹிதே ஜபக் அவர்களுக்கு தயாரித்து வருகிறார். தினேஷ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்க்கு விவேக் – மெர்வின் இசையமைத்து வருகின்றனர். இது வரை தலைப்பை முடிவு செய்யாமிலிருந்த படக்குழுவினர் தற்போது இப்படத்திற்க்கு ‘டோரா’ என தலைப்பை வைத்துள்ளனர். இந்த தகவலை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

RANDOM POSTS

0 68
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி...