Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "தேர்தல் ஆணையம்"

தேர்தல் ஆணையம்

0 101
போதும்டா சாமி.. எங்களால் முடியல.. இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்...!

ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே நகரில் வரும் ஏப்ரல் 12 ம் தேதி இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இரண்டாக பிளவுபட்ட அ.தி.மு.க., இரு அணிகளாக வேட்பாளரை நிறுத்தியிருந்தார். எதிர்கட்சிகளில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் இந்த இடைத்தேர்தலில் பண மழை பொழிய துவங்கியது. அதிமுக வின் இரு பிரிவும் கட்சியை கைப்பற்றுவதற்காக ஆர்.கே நகரில் தினந்தோறும் அடிதடியில் ஈடுபட்டனர்.
தினகரன் ஆட்கள் ஒரு ஓட்டுக்கு ரூ.4000 வரை விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறை திடீரென சோதனை நடத்தி, பல ஆவனங்களை கைப்பற்றியது. அந்த ஆவனங்களில் வாகளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து தகவல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, டில்லியில் நடந்த விரிவான ஆலோசனைக்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Post expires at 2:39am on Wednesday May 10th, 2017

0 140
ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் வைத்த ஆப்பு. யார் ஜெயிப்பார்கள் என முன்கூட்டியே சொல்ல தடை..

தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியிலோ, பிற ஊடகங்களிலோ முன் கூட்டியே அறிவிக்கக்கூடாது என ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களில் அண்மையில் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தலின்போது ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் செய்திதாள், தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.
வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக் கணிப்போ, ஆய்வோ நடத்தக் கூடாது என்று மத்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

ஆனால், முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும்போதே, சில தொலைக்காட்சிகளில் முடிவுகள் குறித்து, ஜோதிடர்களை வைத்து கணிப்புகளை வெளியிட்டன.
இது குறித்து, தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்த, புகார்களை விசாரித்த தேர்தல் கமிஷன், ஜோதிடர்கள் தேர்தல் முடிவுகளை முன் கூட்டியே கணிப்பதற்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தேர்தலின்போது, கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்கு புறம்பானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படி வெளியிடும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் ஜோதிடாகன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post expires at 4:32am on Monday May 1st, 2017

RANDOM POSTS

0 203
சாஸ்திரங்களின் படி, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் நம்மைப் பற்றிய சில ரகசியங்களைக் கூறும். அதில் பிடித்த நிறங்கள் முதல், பழக்கவழக்கங்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வெளிக்காட்டும். குளிக்கும் போது, ஆரம்பத்தில் ஒவ்வொருவரும்...