Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "தலைமுடி"

தலைமுடி

0 503
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? இதற்காக எத்தனையோ எண்ணெய்கள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். கெமிக்கல் கலந்த செயற்கை மருந்துகளின் மூலம் தலைமுடியை வளர்க்க நினைத்தால் முடியுமா? இயற்கை வழியை நாடுங்கள், இதனால் நிச்சயம் தலைமுடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

இதுவரை நாம் பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, முடி நன்கு வளரும் என்று பார்த்தோம். இப்போது இஞ்சியை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி வளரும் என்று பார்ப்போம்.

ஸ்டெப் #1 முதலில் இஞ்சியை சிறிது எடுத்து தோலுரித்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி சாறு எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் அவகேடோ பழ எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, இஞ்சி சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3 பின்பு அத்துடன் 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனால் தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம் பாதிக்கப்பட்ட முடியின் முனைகளை சரிசெய்யும், ஸ்கால்ப்பை சுத்தம் செய்யும் மற்றும் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும்.

ஸ்டெப் #5 அடுத்து தலைமுடியில் உள்ள தேவையற்ற சிக்கை சீப்பு கொண்டு எடுத்துவிட வேண்டும்.

ஸ்டெப் #6 பின் தயாரித்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #7 45 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு, தலைமுடியை அலச வேண்டும்.

ஸ்டெப் #8 இறுதியில் துணியால் தலையில் உள்ள அதிகப்படியான நீரை எடுக்க வேண்டும். முக்கியமாக அப்படி செய்யும் போது துணியால் தலைமுடியைத் தேய்க்கக் கூடாது. அது தலைமுடியில் வெடிப்பை உண்டாக்கும்.

Post expires at 10:06am on Tuesday January 31st, 2017

0 519
மரத்தில் கட்டிவைத்து பெண்ணின் தலைமுடியை அறுத்த கிராம மக்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பல்வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணை, அக்கிராம மக்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர்.

Ajmer நகரில் உள்ள அம்பேத்கர் கான்சி என்ற கிராமத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இப்பெண்மணி அக்கிராமத்தை சேர்ந்த பல்வேறு ஆண்களுடன் உறவில் ஈடுபட்டு வருவதை கவனித்து வந்த பக்கத்துவீட்டார், இதுகுறித்து பஞ்சாயத்தில் புகார் தெரிவித்தனர்.

இப்பெண்ணின் செயலால் அக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், இப்பெண்ணை அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அதன்பின்னர் இப்பெண்ணின் தலைமுடியை அறுத்து, அக்கிராம மக்கள் நையப்புடைத்துள்ளனர், அக்கிராம ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் சேர்ந்து இப்பெண்ணை அடித்து உதைத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அப்பெண்ணை மீட்டுள்ளனர், ஆனால் அக்கிராம மக்கள் இப்பெண்ணை மரத்தில் இருந்து அவிழ்த்துவிடக்கூடாது என பொலிசாருடன் சண்டையிட்டுள்ளனர்.

இதற்கிடையே இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது பொலிசார் FIR பதிவு செய்துள்ளனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 172

தலைமுடி உதிர்வதை எப்படி தடுப்பது என்று வழிகளைத் தேடிக் கொண்டிருப்பவரா? உங்கள் தலைமுடி உதிர்வதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? நிபுணர்கள், தலைமுடி உதிர்வதற்கு மன அழுத்தம், கர்ப்பம், இறுதி மாதவிடாய், எடை குறைவு போன்றவற்றால் தான் தலைமுடி உதிர்வதாக கூறுகின்றனர்.

ஏனெனில் இந்நேரங்களில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால், தலைமுடி உதிர்கிறது. மேலும் பலர் தங்கள் தலைமுடி உதிர்வதை நிறுத்த நிறைய தலைமுடி பராமரிப்புப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதோடு, சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள்.

இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு புதிய ட்ரிக்ஸைப் பின்பற்றினால், உங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

Source: tamil.boldsky.com

நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் pH அளவு நடுநிலையாக இருக்க வேண்டும். அதிலும் பேபி ஷாம்புவைப் பயன்படுத்துவது என்பது சிறந்தது. பேபி ஷாம்புவில் கெமிக்கல்கள் குறைவாக இருப்பதால், தலைமுடிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அதோடு அப்படி பயன்படுத்தும் ஷாம்புவுடன் ஒரு மூன்று பொருட்களையும் சேர்த்துக் கொண்டால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

ஷாம்புவுடன் முதலில் சேர்க்க வேண்டியது ரோஸ்மேரி எண்ணெயைத் தான். இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு வலிமை அளிக்கும்.

இரண்டாவதாக சேர்க்க வேண்டிய பொருள் எலுமிச்சை எண்ணெய். இந்த எண்ணெய் ஒரு சிறந்த ஆன்டி-செப்டிக் மற்றும் ஸ்கால்ப்பிற்கு புத்துணர்ச்சி வழங்கக்கூடியது.

மூன்றாவதாக ஷாம்புவுடன் சேர்க்க வேண்டியது வைட்டமின் ஈ கேப்ஸ்யூல். இது மருந்து கடைகளில் கிடைக்கும். வைட்டமின் ஈ தலைமுடி உதிர்வதை எதிர்த்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

முதலில் ஷாம்புவுடன், 10 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய், 10 துளிகள் எலுமிச்சை எண்ணெய் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலினுள் உள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த நேச்சுரல் ஷாம்புவை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். முக்கியமாக இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவைப் பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது நின்று, அதன் வளர்ச்சி மேம்பட்டிருப்பதை நன்கு காணலாம்.

RANDOM POSTS

0 68
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி...