Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "சந்திரன்"

சந்திரன்

0 903
இன்றைய 4.3.17 ராசி பலன்கள்
மேஷம்
காலை 7.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நிதானித்து செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ரிஷபம்

காலை 7.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் வந்துப் போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

மிதுனம்

வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

கடகம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

சிம்மம்

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

கன்னி

காலை 7.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

துலாம்

காலை 7.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கோபத்தால் இழப்புகள் ஏற்படும். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

விருச்சிகம்

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

தனுசு

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
மகரம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கும்பம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

மீனம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

Post expires at 1:37am on Tuesday April 4th, 2017

0 852
இன்றைய 1.3.17 ராசி பலன்கள்
மேஷம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதம் வந்துப் போகும்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ரிஷபம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மிதுனம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

கடகம்

உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சிம்மம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கன்னி

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

தனுசு

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

மகரம்

பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்த உயரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

கும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

மீனம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

Post expires at 1:43am on Saturday April 1st, 2017

RANDOM POSTS

0 508
மேஷம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 9...