Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "சசிகலா"

சசிகலா

0 401
சசிகலா... ஏன் ‘சதி’கலா ஆனார்...? - ‘சசிகலா உளவியல்’

சசிகலாவுக்கு… எதுமாதிரியான உளவியல் தஞ்சாவூர் விளாரில் குடிபுகுந்தவரை இன்று பரப்பன அக்ரஹார சிறைவரை இழுத்துச் சென்றுள்ளது?

“காட்டுமிராண்டித்தனமான அன்பு!”

‘பழிவாங்குவதிலும், காதலிலும் பெண்கள் ஆண்களைவிடக் காட்டுமிராண்டிகள்’ ‘நன்மை தீமையைக் கடந்து’ (Beyond Good and Evil) என்ற நூலில் ஃப்ரெட்ரிக் நீட்ஷே இப்படி எழுதியிருப்பார். எல்லாப் பெண்களும் அப்படியா என்று தெரியவில்லை. ஆனால், சசிகலா விஷயத்தில் இது மிகச் சரியாகப் பொருந்துகிறது. தம்பி, கணவன், குடும்பத்தின் மீதிருந்த காட்டுத்தனமான அன்பு, அவரை அலைக்கழித்திருக்கிறது… தன் சுயத்தைக் கரைத்து திவாகரன், நடராஜன், தினகரன் எல்லாம் சொல்வதுபோல நடக்கவைத்திருக்கிறது. இப்போது, நீதிமன்றத்துக்கும்… சிறைக்குமென நடையாய் நடக்கவும் வைத்துக்கொண்டிருக்கிறது. மீண்டும் ஓர் ஆங்கில இலக்கியத்திலிருந்தே மேற்கோள் காட்டுகிறேன். வாஷிங்டென் எர்விங், ‘ஸ்கெட்ச் புக்’ என்ற நூலில், ‘’ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையும் பாசத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது’’ என்பார். சசிகலாவின் பாசம் விளாரிலும், மன்னார்குடியிலும் கட்டமைக்கப்பட்டிருந்தது. அந்த அன்புதான் உருமாறி  ‘சசி என்டர்பிரைசஸ்’ – ஆக எழுந்து நின்று, இவரை வீதிக்கு இழுத்திருக்கிறது.

சசிகலாவின் உளவியலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் நடராஜனின் உளவியலைப் புரிந்துகொள்ள வேண்டும். நடராஜன் தன் கல்லூரிக் காலத்திலேயே முழுமையாக அரசியலடைந்தவர்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்; இதை எல்லாம் கடந்து, எதையும் பின்னால் இருந்து இயக்கத் தெரிந்தவர்; அப்படி இயக்கவே விரும்புபவர். இப்படியானவரைக் கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்த சசிகலா திருமணம் செய்துகொள்கிறார்.

மாவட்டத் தகவல் தொடர்பாளாராக இருந்த நடராஜன், ஆட்சியர் சந்திரலேகா அறிமுகம்… பின்னாளில், ஜெயலலிதா – நடராஜன் அறிமுகம் ஏற்படக் காரணமாகிறது. இது, சசிகலா – ஜெயலலிதா நட்பாக மாறுகிறது. எல்லாவற்றையும் பின்னால் இருந்தே இயக்க விரும்பிய நடராஜன், ஜெயலலிதாவையும்…. அதன் மூலமாக ஆட்சியையும் பின்னால் இருந்து இயக்கத் தொடங்குகிறார். மெதுவாக, அன்பு… அதிகாரம் என்கிற இடத்துக்கு நகர்கிறது.

“எல்லாவற்றையும் கைப்பற்று!”

கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். கடந்த காலம் முழுவதும் நீங்கள் அடக்கி ஆளப்பட்டிருக்கிறீர்கள். உங்களைத் துச்சம் எனக் கருதி இருக்கிறார்கள். உங்களை யாரும் மதிக்கவில்லை. திடீரென ஒரு நன்னாளில், உங்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது… சர்வ அதிகாரமும் கிடைக்கிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சசிகலாவுக்கு இதுதான் நிகழ்ந்தது.

ஆண் அதிகாரம் அழுத்தமாக இருக்கும் ஒரு பின்னணி. தன் சுயத்தை முன்னிறுத்தும் கல்வியும் இல்லை. இப்படியானவருக்கு இந்திய அளவில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவரின் நிழலாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது… அதிகாரம் கிடைக்கிறது. அதிகாரத்தின் சுவை தித்திப்பாக இருக்கிறது. அதைப் பயன்படுத்த விரும்புகிறார். பின், முழுவதுமாகப் பயன்படுத்தவும் செய்கிறார். அதைப் பயன்படுத்தி அனைத்தையும் கைப்பற்றவும் செய்கிறார்.

அந்த அதிகாரம் பணத்தை கொண்டுவந்து சேர்கிறது. பணம் என்றால் கொஞ்சம் நஞ்சம் அல்ல….. கண்டங்கள் தாண்டி முதலீடு நீளும் அளவுக்குப் பணத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. ‘‘பணம்… பணம்… பணம்…’ என்று பணத்தை குறியாகவைத்தே இந்தச் சதிகாரர்கள் தங்களது வேலைகளைச் செய்துள்ளார்கள்’’  என்று உச்ச நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு பணத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. இப்போது, அவர்கள் சேர்த்த பணம், தன்னைக் காத்துக்கொள்ள இவர் மீது கண்ணுக்குத் தெரியாமல் அதிகாரம் செலுத்துகிறது. அந்த அதிகாரம்தான் இன்று எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது. அ.தி.மு.க உட்பட.

‘‘அன்பும், அதிகாரமும்!’’

சசிகலா, புனிதவதி என்பதற்காக இந்தக் கட்டுரை அல்ல… ஆனால், எவரையும் நாம் தட்டையாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீதிமன்றம் சொன்னதுபோல இவர்கள் சம்பாதிக்கவே ஜெயலலிதா வீட்டில் சதித் திட்டம் போட்டிருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எந்த உளவியல் இவரை, இதை எல்லாம் செய்யத் தூண்டியது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதாவுக்குக் குடும்பம் இல்லை என்றால், சசிகலா கணவருடன் வாழவில்லை… குழந்தை இல்லை. பின், ஏன் சசிகலா…’சதி’ கலா ஆனார்? நிச்சயம், குடும்பத்தின் மீதான காட்டுத்தனமான அன்பும், அதிகாரத்தின் மீதான மோகமும் மட்டும்தான். நடராஜன், திவாகரன், தினகரன்… இது அவருடைய பலப்பட்டியல் அல்ல… இதுவே அவரது பலவீனப் பட்டியல்.  இன்று அவர்கள்,  ’பத்திரமா போயிட்டு வாங்கக்கா…’  என்று வழியனுப்பிவைக்க… சசிகலா சிறை செல்கிறார்.

 

இதை எல்லாம் கடந்து சசிகலாவிடம் இருக்கும் பிரச்னை என்னவென்றால், தன் உளவியல் சிக்கலை இன்னும் அவர் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். அதனால்தான், இப்போதும் தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்துவிட்டு போகிறார். இதுதான் பேராபத்தானது.

ஹூம்… சொல்ல மறந்துவிட்டேன். சசிகலா, இவ்வாறாக நடந்துகொண்டதற்குப் பின்னால் அவருடைய உளவியல் மட்டும் அல்ல… நம் உளவியலும் இருக்கிறது… நம் மத்தியதர வர்க்கத்தின் பொது உளவியல்…  ‘பயம்’.  அதிகாரத்தைக் கேள்விகேட்க பயம்.

Post expires at 1:44pm on Wednesday March 22nd, 2017

0 405
சிறையில் கேட்ட தலையணை!: இலங்கை வரை பேசப்படும் சசிகலா

சிறையில் தனக்கு சசிகலா தலையணை கேட்டதாகவு அது மறுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசியல்வாதி ரஞ்சன் ராமநாயக்க பேசியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, அண்டை நாடான இலங்கையிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

மக்கள் மட்டுமின்றி, அரசில் தலைவர்களும் இது குறித்து குறிப்பிடுகிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியினர் நேற்று கேகாலை நகரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் கலந்துகொண்டு பேசிய அரசியல் பிரமுகர் ரஞ்சன் ராமநாயக்க, சசிகலா கைது குறித்து குறிப்பிட்டார்.

அவர், “சசிகலா கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பின்னர் அவர் தனக்குகூடுதலான தலையணை, போர்வை, ஏ.சி.

போன்ற சொகுசுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு எந்தவிதமான சலுகைகளும் கொடுக்கப்பட வில்லை.

ஆனால் இலங்கையில் நிலைமை வேறாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன் பில சிறையில் அடைக்கப்பட்ட போது தனக்கு கூடுதல் தலையணை வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதுவும் தலைக்கு வைப்பதற்கு அல்ல. தவிர மேலும் பல சொகுசு வசதிகளையும் கேட்டுள்ளார். அதுவும் தரப்படுகிறது.

ஆம். இலங்கையில் கைது செய்யப்படும் அரசியல் வாதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றது சசிகலாவைப் போன்று நடத்தவில்லை. இதுதான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள வித்தியாசம். இந்த நிலை மாற வேண்டும்” என்று அவர் பேசினார்.

Post expires at 2:10am on Monday March 20th, 2017

0 473
பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா வா? பீதியில் சசிகலா...

பெங்களூர் சிறைக்கு நேற்று மாலை 5.45 மணிக்கு சென்ற சசிகலாவிடம் கையெழுத்துப் பெறப் பட்டு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது.

பிறகு அவர் ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 10 அடி அகலம், 12 அடி நீளம் கொண்டதாக அந்த அறை இருந்தது.

அந்த அறையில் கழிவறை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. எனவே சசிகலா வேறு அறை கேட்டுள்ளார்.

நெடுதூரம் பயணம் செய்ததால் சசிகலா சிறையில் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். அவரது ரத்த அழுத்தம் சிறிது அதிகரித்துள்ளது.

நேற்று (15.02.17) இரவு சிறையில் சாதம் மற்றும் சாம்பார் சாப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் கொண்டு வந்த பழங்களை சாப்பிட்டு இருக்கிறார்.

அதன் பின்னர் மாத்திரைகளையும், ஆயுர்வேதிக் டானிக்கையும் குடித்தார்.

நீதிமன்றம் வழங்கிய பல்வேறு ஆவணங்களில் கையொப்பமிட வேண்டி இருப்பதால் எல்லா ஆவணங்களையும் படித்துப்பார்த்து கையொப்பமிடுகிறார். என்று பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சசிகலா பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா என்ற கைதி உள்ளார்..

இந்த சயனைடு மல்லிகா கர்நாடகாவில் உள்ள பெண் கிரிமினல்களில் முக்கியமானவர். கொலை வழக்கில் சிக்கி நீண்ட நாட்களாக பெங்களூர் சிறையில் இருந்து வருகிறார். கடந்த தடவை சசிகலா ஜெயிலுக்கு சென்ற போதும் சயனைடு மல்லிகா அங்குதான் இருந் தார்.

அப்போது ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்கு சயனைடு மல்லிகா மிகவும் ஆசைப்பட்டார். சிறைத் துறை அதிகாரிகளிடம் இதற்காக அவர் அனுமதி கேட்டார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை…

Post expires at 2:10am on Friday March 17th, 2017

0 392
சசிகலா கைதி எண்?

சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா மற்றும் இளவரசி.


சசிகலா கைதி எண்… 10711..
இளவரசி கைதி எண்.. 10712..

வீட்டு சாப்பாடு மற்ற வசதிகளை செய்து தர சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்..

போலீஸ் தடியடி…
சிறை வாசலில் கல்வீச்சு நடந்ததில் சசிகலா மற்றும் காவல்துறை வாகனங்களின் கண்ணாடி உடைந்தது.
கர்நாடக போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்

Post expires at 6:38pm on Wednesday March 15th, 2017

'தற்கொலை செய்து கொள்வேன்'.... சசிகலா

ஆட்சி அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எழுதியதாக கடிதம் தயாரித்து பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஐடி விங் சார்பில் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஆளுநருக்கு எழுதிய கடிதம் போல் போலி கடிதம் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ் அப் , வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் உயிரை மாய்த்து கொள்வேன் அதற்கு நீங்கள் தான் காரணம் எனபது போன்ற அவதூறு வரிகள் இருந்தன.

இது குறித்த மறுப்பை நேற்று நேரடியாக செய்தியாளர்களிடம் சசிகலா மறுத்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சார்பில் அதன் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் , சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

புகாரில் எங்களது கழக பொதுச்செயலாளர் சின்னம்மா பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது கையொப்பம் இட்டு ஆளுநருக்கு கடிதம் எழுதுவது போல் போலியான கடிதத்தை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கினை சீர்குலைக்கும் விதத்தில் இது போன்ற போலி கடிதத்தினை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. போலி கடிதத்தை எழுதியவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Post expires at 6:02am on Monday March 13th, 2017

0 65
கவர்னரை குறை சொன்ன சசிகலா

‘கவர்னர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவு படுத்தும் நடவடிக்கையோ என சந்தேகிக்க தோன்றுகிறது’ என சசிகலா குறை கூறியுள்ளார்.கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எம்.எல்.ஏ.,க்கள் எல்லோரையும் சந்தித்தேன். அவர்கள் மன உறுதியுடன் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களை சந்தித்த திருப்தி கிடைத்தது.இன்று (பிப்.,11) வரை பொறுமை காத்தோம். நாளை முதல் எங்கள் போராட்டம் வேறு விதமாக இருக்கும். கவர்னர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையோ என சந்தேகிக்க தோன்றுகிறது.

Post expires at 6:23pm on Saturday March 11th, 2017

0 71
ஓரளவுக்குதான் பொறுமையாக இருக்க முடியும்.. பொங்கி எழுகிறார் சசிகலா

அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா முதல்வர் பதவியை கைப்பற்ற தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை தனியார் ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளார்.

ஆனால் சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் ஒவ்வொருவராக பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று கூட அமைச்சர் பாண்டியராஜன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் போயஸ் இல்லத்தில் சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது,
பிரித்தாள முயல்பவர்கள் தோற்று போவார்கள். ஜெயலலிதா பல சோதனைகளை சந்தித்தார். தற்போது நாமும் அது போன்ற சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு  எனக்கு உள்ளது.

சில புல்லுருவிகளை ஜெ.ஆன்மா அடையாம் காட்டி உள்ளது. அதிமுக என்ற எக்கு கோட்டையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஓரளவுக்குதான் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்.

Post expires at 5:58pm on Saturday March 11th, 2017

0 1037
பதவிக்கு இடைஞ்சலா?: ஜெ., மோதிரத்தை கழட்டிய சசிகலா

ஜெயலலிதா இறந்த பின், அவர் வகித்த அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவி, முதல்வர் பதவி என இரண்டையும் அடைய வேண்டும் என்பதற்காக, சசிகலா, தன்னை ஜெயலலிதாவாகவே மாற்றும் முயற்சியில் இறங்கினார்.இதற்காக, புடவை, ஜாக்கெட், நெற்றிப் பொட்டு என எல்லாவற்றையும் மாற்றிய, சசிகலா, போயஸ் தோட்டத்தில், ஜெயலலிதா அறை மட்டுமல்லாது, அவர் பயன்படுத்திய செருப்பு, கார், நாற்காலி என எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார். ஜெயலலிதா பயன்படுத்திய வைர மோதிரங்களையும் பயன்படுத்தினார்.

ராசி இல்லாத மோதிரம்: முதல்வராக பதவி ஏற்பது தள்ளிப் போகிறது என்றதும், வைர மோதிரம் தான் ராசியில்லையோ என சந்தேகம் கொண்ட சசிகலா, தன்னுடைய ஆஸ்தான ஜோதிடரை அழைத்து, மோதிரம் ஏதும் பிரச்னையா என்று கேட்டுள்ளார்.ஜோதிடரும், வைர மோதிரம்தான் பிரச்னையே.

அதில்தான் தோஷம் உள்ளது என்று சொல்ல, ஜெயலலிதா அணிந்த வைர மோதிரத்தை சசிகலா தூக்கி எறிந்துள்ளார். முன்னதாக, கையில் இருந்து கழட்டுவதற்கு முன்பாக முறையான பூஜைகள் நடத்த வேண்டும் என்றும், ஜோதிடர் சொல்ல, அதற்கேற்ப, போயஸ் தோட்டத்தில், 10ம் தேதி மதியம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கையில் போடப்பட்டிருந்த வைர மோதிரத்தை சசிகலா கழட்டி விட்டதாக, போயஸ் வட்டாரங்கல் கூறுகின்றன.அதற்கு பதிலாக வேறு மோதிரத்தை அணியலாம் என்றும், ஜோதிடர் அறிவுரை கூறியுள்ளதால், புது மோதிரம் அணிவது குறித்து, சசிகலா யோசித்து வருகிறார் என்றும், போயஸ் தோட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post expires at 2:04pm on Saturday March 11th, 2017

0 167
முதலமைச்சராக பதவியேற்க சசிகலாவுக்கு தடையா? உச்சநீதிமன்றம் இன்று முடிவு.!

முதலமைச்சராக பதவியேற்க சசிகலாவுக்கு தடையா? உச்சநீதிமன்றம் இன்று முடிவு.!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்களும், குழப்பங்களும் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே டிசம்பர் மாதம் சசிகலா அதிமுக வின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ க்கள் சசிகலாவை அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

இதனையடுத்து ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.தொடர்ந்து சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான பல்வேறு நடைமுறைகள் தொடங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழக நுற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பு ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வெளியிடும் வரை சசிகலா முதலமைச்சராக பதவியேற்கக் கூடாது எனவும், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தடை விதிக்கக் கோரியும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கு இன்று பிற்பகலில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் முக்கிய தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post expires at 2:23am on Friday March 10th, 2017

0 510
ஏன் நீங்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை – சசிகலா பதில்

முதல் முறையாக சசிகலா தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். 70 நாட்கள் ஏன் யாரையுமே பார்க்க அனுமதிக்கவில்லை ? . ஜெயலலிதா தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என குற்றச்சாட்டு உள்ளதே ? ஜெயலிதாவை யார் தான் பார்த்தது உள்ளிட்ட கேள்விகளை செய்தியாளர் கேட்கின்றார்.

அதற்கு சசிகலா பதில் அளிக்கும் போது அழுகின்றார். நான் அம்மாவை எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டேன் தெரியுமா ? வீட்டு வேலைக்காரர்களிடம் கேட்டு பாருங்கள் என சசிகலா கூறியது செய்தியாளர் கேட்டதற்கும் அவரின் பதிலிற்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது.

மேலும் பன்னீர் செல்வம் என்னை சந்தேகப்பட்டது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது என சசிகலா தெரிவித்துள்ளார்.

Post expires at 3:28pm on Thursday March 9th, 2017

RANDOM POSTS

0 654
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1...