Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "கடகம்"

கடகம்

0 244
கார்த்திகை மாத கடகம் ராசி பலன்கள் (17.11.2014 – 15.12.2014)

கடகம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் உண்டாகும் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் ஷேர்மார்க்கெட் தொழில் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாருடன் நல்லுறவு உண்டாகும் புத்தி கூர்மை அதிகரிக்கும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் பூர்வீக சொத்திலிருந்து பண வரவு உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கடுமையை குறைத்துக் கொள்ளவும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 186
கடகம்

கடகம்

17.8.2016 முதல் 16.9.2016 வரை

எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட நீங்கள், மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணம் கொண்டவர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு உங்களைப் பாடாய்படுத்திய சூரியன் இப்போது ராசியை விட்டு விலகி தனஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பணத்தட்டுப்பாடு ஓரளவு குறையும். 9ம் தேதி முதல் பிரபல யோகாதிபதியான செவ்வாய் பகவான் சனியை விட்டு விலகி 6ம் வீட்டில் அமர்வதால் வீண் விரயங்கள் நீங்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். மனைவிக்கு ஏற்பட்ட கர்ப்பச்சிதைவு நீங்கும்.

குழந்தை  தங்கும். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். ஆனால், சனிபகவான் 5ம் இடத்திலேயே தொடர்வதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். அவர்களின் நட்பு வட்டத்தைக் கண் காணிப்பது நல்லது. 3ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் வி.ஐ.பிகளுடன் கவனமாகப் பழகுங்கள். வரம்பு மீறிப் பேச வேண்டாம். எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் மற்றவர்களை நம்பி எந்தப்  பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.

மாணவ மாணவிகளே!
படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது. சக மாணவர்களின் ஆதரவுகிட்டும்.

கன்னிப் பெண்களே!
மேற்கல்வி நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் அமையும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அரசியல்வாதிகளே!
உங்களுடைய பேச்சிற்கு மரியாதை கூடும். எதிர்க்கட்சியினரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கட்சிக்காரர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில்
இந்த மாதம் லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்து சிக்கல்கள் நீங்கும். துரித உணவகம், பெட்ரோகெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கூடும். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்.

உத்யோகத்தில்
ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களைப் பற்றி குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

கலைத்துறையினரே!
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களுடைய கலைத்திறன் வளரும்.

விவசாயிகளே!
புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். பக்கத்து நிலத்துக்காரருடனான மோதல்கள் குறையும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஆகஸ்ட் 17, 23, 24, 25, 26, செப்டம்பர் 1, 4, 6, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:
ஆகஸ்ட் 18ம் தேதி மதியம் மணி 1.15 முதல் 19, 20ம் தேதி மாலை மணி 5.30 வரை மற்றும் செப்டம்பர் 14ம் தேதி இரவு மணி 9.00 முதல் 15, 16ம் தேதி வரை மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும்.

பரிகாரம்:
சென்னை, திருவொற்றியூரிலுள்ள பட்டினத்தார் சமாதிக்கு சென்று வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

0 328
ஆடி மாத கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பலன்கள்

தாய்ப்பாசம் மிக்க கடக ராசி அன்பர்களே! (அரசின் சலுகை)சுக்கிரன் ஆக. 1ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். தற்போது குரு ராசிக்கு 2ல் இருந்து நன்மை தந்து கொண்டு இருக்கிறார். ஆக. 2ல் குரு 3-ம் இடமான கன்னி ராசிக்கு செல்வதால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனாலும் அவரது பார்வை பலத்தால் இடையூறை உடைத்தெறிவீர்கள்.

புதன் ஜூலை 24 வரை குடும்ப பிரச்னையை ஏற்படுத்தலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். சுக்கிரனால் மாத முற்பகுதியில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.1க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். அதில் நல்ல முடிவும் கிடைக்கும்.

ஆக. 2,3 ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.தொழில், வியாபாரத்தில் மாத முற்பகுதியில் அதிக லாபம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப்பெறுவீர்கள். ஆக.1க்கு பிறகு வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ஜூலை 24 க்குள் சிலர் இடமாற்றத்தைச் சந்திக்க நேரிடலாம். ஆக.1க்கு பிறகு குருவால் பணிச்சுமைக்கு ஆளாகலாம்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.மாணவர்கள் ஆக.1 வரை குருவால் சிறப்பான நிலை காணலாம். அதன் பிறகு சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் விளைச்சல் பெருகும். கால்நடை மூலமும் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவரின் ஆதரவு கிடைக்கும். அக்கம்பக்கத்தினரின் மத்தியில் மதிப்பு உயரும். பிறந்த வீட்டில் இருந்து சசீதனப் பொருட்கள் வரும்.

ஜூலை 20,21ல் ஆடம்பர பொருள் வாங்குவர்.நல்ல நாள்: ஜூலை 18,19,20,21,27,28,29,30, ஆக. 2,3,7,8,14,15,16கவன நாள்: ஜூலை 22,23 சந்திராஷ்டமம்அதிர்ஷ்ட எண்: 4,8

நிறம்: மஞ்சள், வெள்ளைபரிகாரம்: தினமும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்வது நல்லது. ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 1032
மார்கழி மாத ராசி பலன்கள்
அன்புள்ளம் கொண்ட மேஷராசி நன்பர்களே

இந்த மாதம் குரு பகவான் 5ம் இடத்தில் இருந்து டிசம்பர் 20 வரை நற்பலன் தருவர். அதன் பிறகு  சுமாரான பலனே தருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் உற்சாகம் ஏற்படும். பொருள் வசதிகள் பெருகும். சுக்கிரன் டிசம்பர் 26 ம் தேதிக்கு பிறகு விருச்சிகத்திற்கு வந்து நன்மை தருவர்.

சூரியன் புதன் தனுசு ராசியில் இணைவதால் நன்மை தர இயலாது. செவ்வாயால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். எடுத்த கரியம் வெற்றி அடையும். பொருளாதார வளம் அதிகரிக்கும்.

டிசம்பர் 28ந் தேதிக்கு பிறகு சிற்சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலைச்சல் ஏற்ப்படும் மனைவி வகையில் தொல்லை ஏற்ப்படலாம். சூரியன் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பொறுமை தேவை. விருந்து விழா என செலவு கூடும்.

RANDOM POSTS

0 201
சாஸ்திரங்களின் படி, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் நம்மைப் பற்றிய சில ரகசியங்களைக் கூறும். அதில் பிடித்த நிறங்கள் முதல், பழக்கவழக்கங்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வெளிக்காட்டும். குளிக்கும் போது, ஆரம்பத்தில் ஒவ்வொருவரும்...