Timber by EMSIEN-3 LTD
மருத்துவம்

0 332
ஏன் ஆண்கள் உட்கார்ந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என தெரியுமா?

நாம் ஒரு சில தசாப்தங்களுக்கு முன்பு வர உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை தான் பின்பற்றி வந்தோம். ஆனால், நாகரீக வளர்ச்சி, பொது கழிவறை வடிவ மாற்றங்கள் உண்டான பிறகு, நின்று சிறுநீர் கழிப்பது தான் நாகரீகம். உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது அநாகரிகமான செயல் என்பது போல நகர மக்கள் பார்க்க ஆரம்பித்தனர் (என்னையும் உட்பட!)

ஆனால், இப்போது ஆய்வாளர்கள் ஆண்களும் நின்று சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுரைக்கின்றனர். இது ஏன்? இதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்று இனிக் காண்போம்…

ஆண்கள் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிப்பதை விட, உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, பாக்டீரியாக்கள் பரவும் விகிதம் குறைகிறது.

மேலும், நோய் நுண்மங்கள் தொற்று உண்டாகும் விகிதமும் குறையும்.

உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சுகாதாரத்திற்கும் நல்லது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் முறையால், கழிவறை, கழிவுகள் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களது வேலையும் எளிதாகும் என கூறுகிறார்கள்.

உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது, நீங்கள் ஒரே முறையில் சிறுநீர்ப்பையில் நிறைந்திருக்கும் மொத்த சிறுநீரையும் கழித்துவிட முடியும். நின்றுக் கொண்டு சிறுநீர் கழிக்கும் போது இது முடியாது!

குறைந்த சிறுநீர் பாதை நோய் எனப்படும் (lower urinary tract symptoms) உள்ள ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் நல்லது. ஏனெனில், முழுமையாக சிறுநீர் கழிக்க இம்முறை உதவுவதால் இதை சரி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆரோக்கியமாக இருக்கும் ஆண்களுக்கு உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதால் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாது. ஆனால், ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தான் சரி.

Post expires at 3:01am on Monday February 6th, 2017

0 907
மாரடைப்பைத் தடுக்க 1 நிமிடம் போதும்! அருமையான வழி இதோ

நம் இதயத்திற்கு தேவையான சத்துப் பொருட்களை அளிக்கும் இருதயக் குழாய்கள் அல்லது அதன் கிளைகளில் அடைப்புகள் ஏற்படும் போது, மாரடைப்புகள் ஏற்படுகிறது.

இத்தகைய மாரடைப்பு பிரச்சனைகள் மூலம் சிலர் மரணத்தைக் கூட தழுவுகின்றார்கள்.

மாரடைப்பு பிரச்சனையை வெறும் 60 நொடிகளில் குணப்படுத்துவதற்கு, ஜான் கிறிஸ்டோபர் என்ற மூலிகை நிபுணர் ஒருவர் சூப்பரான இயற்கை வழியைக் கண்டுபிடித்துள்ளார்.

தேவையான பொருட்கள்
  • மிளகுத் தூள் – சிறிதளவு
  • மிளகு – 3
  • ஆல்கஹால் – 50%
  • கண்ணாடி பாட்டில் – 1
தயாரிக்கும் முறை

முதலில் கண்ணாடி பாட்டில் மூலம் அதன் கால் பகுதியை மிளகுத் தூளால் நிரப்ப வேண்டும்.

பின் மிளகுடன் சிறிது ஆல்கஹால் ஊற்றி அதை நன்றாக அரைத்து, அதை கண்ணாடி பாட்டிலில் சேர்க்க வேண்டும்.

கண்ணாடி பாட்டிலை முழுவதுமாக மூடி வைத்து, ஒரு நாளைக்கு பலமுறை நன்கு குலுக்க வேண்டும்.

பின் இந்த கண்ணாடி பாட்டிலை 2 வாரம் இருட்டான இடத்தில் வைத்து, அதை வடிகட்டி குடிக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 5-10 துளிகள் கொடுத்து, 5 நிமிடம் கழித்து மீண்டும் 5-10 துளிகள் கொடுக்க வேண்டும்.

இந்த முறையை நோயாளி குணமாகும் வரை செய்ய வேண்டும்.

நோயாளி சுயநினைவை இழந்து விட்டால் இதை, அவர்களின் நாக்கின் அடியில் 1-3 துளிகள் வைக்க வேண்டும்.

இதர நன்மைகள்
  • மிளகு செரிமான அமிலத்தின் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பதால், இது செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
  • மிளகில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் அதிகமாக உள்ளதால், நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிக்கிறது.

Post expires at 9:51am on Thursday February 2nd, 2017

0 507
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? இதற்காக எத்தனையோ எண்ணெய்கள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். கெமிக்கல் கலந்த செயற்கை மருந்துகளின் மூலம் தலைமுடியை வளர்க்க நினைத்தால் முடியுமா? இயற்கை வழியை நாடுங்கள், இதனால் நிச்சயம் தலைமுடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

இதுவரை நாம் பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, முடி நன்கு வளரும் என்று பார்த்தோம். இப்போது இஞ்சியை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி வளரும் என்று பார்ப்போம்.

ஸ்டெப் #1 முதலில் இஞ்சியை சிறிது எடுத்து தோலுரித்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி சாறு எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் அவகேடோ பழ எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, இஞ்சி சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3 பின்பு அத்துடன் 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனால் தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம் பாதிக்கப்பட்ட முடியின் முனைகளை சரிசெய்யும், ஸ்கால்ப்பை சுத்தம் செய்யும் மற்றும் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும்.

ஸ்டெப் #5 அடுத்து தலைமுடியில் உள்ள தேவையற்ற சிக்கை சீப்பு கொண்டு எடுத்துவிட வேண்டும்.

ஸ்டெப் #6 பின் தயாரித்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #7 45 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு, தலைமுடியை அலச வேண்டும்.

ஸ்டெப் #8 இறுதியில் துணியால் தலையில் உள்ள அதிகப்படியான நீரை எடுக்க வேண்டும். முக்கியமாக அப்படி செய்யும் போது துணியால் தலைமுடியைத் தேய்க்கக் கூடாது. அது தலைமுடியில் வெடிப்பை உண்டாக்கும்.

Post expires at 10:06am on Tuesday January 31st, 2017

0 137
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்
தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது. தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது.

 
* உங்கள் தலையில் ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர் தொற்றுக்கள் வளர்ச்சி மற்றும் பொடுகு இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சையை சேர்த்து பயன்படுத்தவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஈஸ்டை கொன்று பொடுகைப் போக்கி தலைமுடியை பளபளப்பாக்கும்.
 
* ஒரு பஞ்சு உருண்டையை எண்ணெயில் முக்கி உங்கள் ஸ்கால்பில் நன்கு தாராளமாக தடவவும். ஸ்கால்ப் நன்கு எண்ணெயில் நனைந்தவுடன் எண்ணெயை உள்ளங்கையில் எடுத்து உங்கள் கூந்தலின் நுனி வரை தடவவும்.
 
* தலையை சுழற்சியாக உங்களின் விரல் நுனிகளின் மென்மையான முனைகளைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து எண்ணெய் ஸ்கால்பின் உள்செல்லுமாறு தேய்க்கவும். உங்கள் கூந்தலை இறுக்கமில்லாமல் கட்டி ஒரு ஷவர் கேப் (தொப்பி) கொண்டு மூடவும். இந்த மாஸ்கை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
 
* பின்னர் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும். தலையில் உள்ள அதிக ஈரத்தை மென்மையாக தண்ணீரை உறிஞ்ச கூடிய டவலை கொண்டு துடைத்து, முடியை கட்டவும். பின்னர் தானாக முடி காயுமாறு விடவும். நல்ல பலன்களுக்கு இந்த தேங்காய் எண்ணெய் மாஸ்கை வாரம் ஒரு முறை செய்வது பலனை தரும்.

 

Post expires at 1:26pm on Sunday January 29th, 2017

0 149
தினம் ஒரு கைப்பிடி 'வால்நட்' போதும் - இளைஞர்களின் மனநிலை மேம்படும்: புதிய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்

தினமும் ஒரு கைப்பிடி வால்நட் (அக்ரூட்) சாப்பிட்டால், இளை ஞர்களின் மனது மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களுடைய மனநிலை மேம்படும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யாளர் பீட்டர் பிரிபிஸ், வால்நட் பற்றி ஆய்வு செய்துள்ளார். இது குறித்து பீட்டர் கூறியதாவது:

வால்நட்டில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதுபற்றி இதற்கு முன்னர் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடலில் தேவையில்லாத கொழுப் புகளை கரைக்கவும், இருதய நோய், நீரிழிவு நோயை தடுக்கவும் வால்நட் மிகவும் பயன்படுகிறது என்று அந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டன.

இப்போது நாங்கள் மேற் கொண்ட ஆய்வு வேறு வகை யானது. வால்நட்டால் மனித அறிவாற்றல், மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தோம். அதற்காக 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட 64 மாணவ, மாணவிகளை தேர்வு செய்தோம்.

அதன்படி தினமும் ஒரு கைப்பிடி அளவுள்ள வால்நட்டை 8 வாரங்களுக்கு அவர்களை சாப்பிட செய்து ஆய்வு செய்தோம். அதன்பிறகு அவர்களுடைய மனநிலை மேம்படுவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக வால்நட் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கக் கூடிய அளவுக்கு மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய மனநிலையும் (மூட்) மகிழ்ச்சியாக மாறி உள்ளது. உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆய்வில் பங்கெடுத்த வர்களை தினமும் 3 துண்டு என 16 வாரங்களுக்கு (சிலைஸ்) வாழைப்பழ பிரட் சாப்பிட சொன்னோம். இதில் 8 வாரங் கள் வாழைப்பழ பிரட்டுடன் வால் நட்டும், 8 வாரங்கள் வால்நட் இல்லாமல் வாழைப்பழ பிரட்டும் சாப்பிட்டனர். இதுபோல் சில மாற்றங்களை செய்து ஒவ்வொரு 8 வார முடிவிலும் மாணவர்களின் மனநிலையை அளவிட்டோம்.

பின்னர் அவர்கள் ஒவ் வொருவரிடமும் சில கேள்விகள் கேட்டு ஆய்வு செய்தோம். பதற்றம், மன அழுத்தம், கோபம், சோர்வு, சுறுசுறுப்பு, குழப்பம் ஆகிய மனநிலைகள் குறித்து ஆய்வு செய் தோம். கேள்விகளுக்கு அளிக் கப்பட்ட பதிலின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் வால்நட் சாப்பிட்ட இளைஞர்களின் மன நிலை, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது. அதேவேளையில் இளம் பெண்களின் மனநிலையில் எந்த முன்னேற்றத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. அது ஏன் என் றும் எங்களுக்கு தெரிய வில்லை.

இவ்வாறு பீட்டர் கூறியுள்ளார்.

வால்நட்டில் ஆல்பா லினோ லெனிக் ஆசிட், விட்டமின் இ, மெலடோனின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் என தெரியவந்துள்ளது.

Post expires at 6:03am on Friday January 27th, 2017

0 85
பனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்!
பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.
இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.
இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும்.

சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.

அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.

Post expires at 4:28am on Tuesday January 24th, 2017

0 106
மருத்துவத்திற்கு உதவும் சில்லி புட்டி!

சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது, ‘சில்லி புட்டி.’ களிமண் போன்ற தன்மை உடைய இதை, விரும்பிய வடிவத்தில் வார்த்தெடுக்கவும், வடிக்கவும் முடியும். இதை மருத்துவ உலகிலும் பயன்படுத்த முடியும் என்கிறார், இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் யங்.பாலிமர் வகையை சேர்ந்த சில்லி புட்டியுடன், உலகின் மிக வலுவான பொருளாகக் கருதப்படும், ‘கிராபீன்’ சேர்த்து, ‘ஜி புட்டி’ என்ற ஒரு பொருளை ராபர்ட் உருவாக்கியிருக்கிறார். ஜி புட்டியும் களிமண் தன்மை உடையது என்றாலும், அது, அழுத்தம் மற்றும் மின் சக்தி மாற்றங்களை, மிக நுட்பமாக உணரும் தன்மை இருப்பதை ராபர்ட் கண்டறிந்துள்ளார். ‘கம்போசிஸ்ட் எனப்படும் கலவைப் பொருட்கள் பலவற்றை, விட மிகவும் நுட்பமான உணர்வான் தன்மை ஜி புட்டிக்கு இருப்பதால், இது மருத்துவத் துறையில் நோயாளிகளின் உடல் நலனை அறியும் கருவிகளுக்கு உணர்வான்களாக பயன்படுத்த முடியும்’ என, ராபர்ட் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Post expires at 10:20am on Monday January 23rd, 2017

0 79
உயிர்காக்கும் 'பிசியோதெரபி' சிகிச்சைகள்

சமீப காலமாக பிசியோதெரபி சிகிச்சை முறைகள் (இயன்முறை மருத்துவம்) உலக அளவில் பிரசித்தி பெற்று வருகிறது. குறிப்பாக ‘நுரையீரல் மற்றும் சுவாச பிசியோதெரபி’ பிரிவில் பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மனித உடலின் சுவாச பாதைகளில் உள்ள கோழை போன்ற கழிவுகள், நுரையீரல் நீர் சேர்க்கை, நுரையீரல் பகுதிகளில் உள்ள அடைப்பு போன்றவற்றினை அகற்றி சீரான சுவாசத்தை ஏற்படுத்தக் கூடிய, மிக முக்கிய சிகிச்சை முறையே நுரையீரல் மற்றும் சுவாச பிசியோதெரபி என அழைக்கப்படுகிறது.

அனைத்துக்கும் தீர்வு : ஆரம்ப காலத்தில் இயன்முறை மருத்துவமானது, உடலின் இயக்கத்திற்கான மேலோட்டமான சில பயிற்சி முறைகளை கொண்டிருந்தது. தற்போதைய நவீன மருத்துவ வளர்ச்சியில், பிசியோதெரபி மருத்துவத்துறையின் வளர்ச்சியும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண வலிகளுக்கான சிகிச்சை முறைகள் தொடங்கி, அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் வரை, சிகிச்சை முறைகளை கொண்டுள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தை முதல் நோயினால் முடக்கப்பட்ட முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் பிசியோதெரபியில் உள்ளன.

விபத்துகால அவசர சிகிச்சைகள், குழந்தைகளுக்கான தீவிர மூச்சுத்திணறல், மூச்சிரைப்பு பிரச்னைகளில் நுரையீரலை காத்து உயிர் காக்கும் சிகிச்சை முறைகளாக பிசியோதெரபி உள்ளது. ஏறத்தாழ அனைத்து அறுவைச் சிகிச்சைகளுக்கு முன்பும், பின்பும் நுரையீரலை பாதுகாத்து அதன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக சுவாச பிசியோதெரபி அளிக்கப்படுகின்றது.

நுரையீரலின் முக்கியத்துவம் : உடல் உறுப்புகளில் இருதயம், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகளுடன் நுரையீரல் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் நெஞ்சுக்கூட்டின் சுருங்கி விரியும் தன்மை வேறுபடுகிறது. இருதய நெஞ்சுக் கூட்டினை சுற்றியுள்ள சதைகளின் வலிமையை பொருத்தே, சுருங்கி விரியும் தன்மை இருக்கும். மூச்சை இழுத்து வெளியே விடும் இடைவெளியில் ஆக்ஸிஜன் அதிகளவு நுரையீரலில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் ஆக்ஸிஜனே ரத்தத்தில் கலந்து உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டத்தை தருகிறது. நுரையீரல் நுண்ணிய அறைகளால் நிரம்பப்பட்டது. அந்த அறைகளில்தான் ஆக்ஸிஜன் கலந்த காற்று நிரம்பும். அதில் சளியோ அல்லது திரவங்களோ சூழ்ந்து கொண்டால் அவற்றில் காற்று நிரம்புவதில் சிரமங்கள் உண்டாகும். நாளடைவில் கிருமி தொற்று உருவாகும்.

நுரையீரலின் செயல்பாடுகள் : பாதிக்கப்படும். இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். நுரையீரலில் மேல்பாகம், நடு பாகம் மற்றும் அடிபாகம் என்று இருக்கும். எக்ஸ்ரே, ஸ்டெதஸ்கோப் மூலம் நுரையீரலில் எந்த பகுதியில் சளி அதிகம் சேர்ந்துள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப பிசியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை முறைகளை திட்டமிடுவார்கள்.

சிகிச்சை முறைகள் : ‘வென்டிலேட்டர்’ சிகிச்சையில் உள்ளவர்கள், மூச்சு இரைப்பு உள்ளவர்கள் என பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சுப்பகுதி, பின்முதுகு, கைகளின் அடிப்பகுதிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் தங்களது சிகிச்சை முறையை பயன்படுத்தி, நுரையீரலில் தேங்கியுள்ள தேவையில்லாத நீர் மற்றும் சளியை வெளியேற்றுவார்கள். இருமக்கூடிய அளவுக்கு நோயாளிகள் விழிப்புணர்வுடன் இருந்தால், ‘காப் பெசிலிடேஷன்’ என்ற முறையை பயன்படுத்தி இருமச் சொல்லி சளியை வெளியேற்றுவார்கள்.

இரும இயலாதவர்களுக்கு “சக் ஷன் தெரபி” என்ற முறையை பயன்படுத்தி தொண்டை பகுதியில் குழாயை செலுத்தி சளியை உறிஞ்சி வெளியே எடுப்பார்கள். குறைந்தது 20–30 நிமிடங்கள் வரை இதனை செய்வார்கள். ஒருநாளைக்கு மூன்று முதல் நான்கு முறை செய்யப்படும். இது ஒவ்வொரு நோயாளியின் தன்மைக்கேற்ப வேறுபடும்.நுரையீரலில் எந்த பகுதியில் சளி சேர்ந்துள்ளதோ அதற்கேற்ப நோயாளிகளை “பொஸிஷனிங்” செய்து, புவிஈர்ப்பு விசையின் உதவியுடன் சளியை வெளியேற்றுவார்கள்.

இம்முறை நுரையீரலில் தேங்கியுள்ள சளி மற்றும் கெட்ட திரவங்களை வெளியேற்றி மேற்கொண்டு சளி சேராமல் தடுக்கும்.கருவிகள் உதவியுடன் கருவிகளின் உதவியோடு செயற்கை சுவாசம் அளிக்கப்படும் நோயாளிகள், இயற்கையாக சுவாசிக்க இச்சிகிச்சை முறை பயன்படும். நுரையீரல் உட்பட மொத்த சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை சீர்படுத்த, இச்சிகிச்சை முறை அவசியம்.

இச்சிகிச்சை முறையின் முக்கிய நோக்கம், பாதிக்கப்பட்டவர்களை நோயின் பிடியிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஆகும். இதனால், மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய நாட்கள் குறையும். இயல்பாக சுவாசிக்கும் தன்மை மீட்கப்படும். சிகிச்சைக்கு பின் நுரையீரல் அதிகளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ள துவங்கும். மேலும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவான சூழலை உருவாக்கும். திடமான, சமநிலை கொண்ட உடல்நிலை உணர்வினை பாதிக்கப்பட்டவர்களிடம் உருவாக்கி மன பலத்தை அதிகரிக்கும்.

ஆலோசனை பெறுங்கள் : நுரையீரல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளின் நுரையீரல் பலவீனமாக காணப்படும். அதற்கு, அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தும் மயக்க மருந்தே காரணம். இதனை சரி செய்ய பிசியோதெரபி சிகிச்சை முறைகள் சிறந்தது. நெஞ்சுக்கூட்டின் சுருங்கி விரியும் தன்மையை, ஒழுங்காக உடற்பயிற்சிகள் மூலம் பராமரித்து வரவேண்டும். இதுபற்றி பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். முழுநேர விளையாட்டு வீரர்களுக்கு நுரையீரல் செயல்திறன் நன்றாக இருக்கும். அதுவே உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு செயல்திறன் போதிய அளவுக்கு இருக்காது.

35 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டிற்கு ஒருமுறையேனும் பிசியோதெரபிஸ்ட்டை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவர்கள், உங்கள் நெஞ்சுப்பகுதியை சுற்றியுள்ள சதைப் பகுதிகளின் செயல்பாட்டை சோதித்து, அதில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகளை பரிந்துரைப்பார்கள். 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை இயன்முறை மருத்துவரை சந்திப்பது நல்லது.

0 178
கண்பார்வை கோளாரை கண்ணாடிகள் சரிசெய்யாது
கண்பார்வை கோளாரை கண்ணாடிகள் சரிசெய்யாது

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் யங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான அறிகறிகள் கண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் உள்ளது. எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

0 225
கால்சியம் மாத்திரைகள் சாப்பிட்டால் உண்டாகும் பின்விளைவு!!

இப்போது அடிக்கடி விளம்பரங்களில் காண்பீர்கள் 30 வயதிற்கு பின் கால்சியம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று.

எந்த மருத்துவரும் தேவையேயில்லாமல் கால்சியம் போன்ற சத்து மாத்திரைகளை பரிந்துரைக்க மாட்டார்கள். காரணம் கால்சியம் சத்து நாம் சாப்பிடும் அன்றாட உணவுகளில் இருந்தாலே போதுமானது. அதை தவிர்த்து கால்சியம் மருந்துகள் சாப்பிடுவது நல்லதல்ல.

கால்சியம் பாஸ்பரஸ் போன்ற நுண் சத்துக்கள் பல உறுப்புகலின் செயல்பாடுகளில் முக்கியபங்கு வகிக்கின்றன. குறிப்பாக நரம்புகளில், செல்களில் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய தேவை.

60 வயதிற்கு பிறகு வரும் ஆஸ்டியோஃபியரோஸிஸ் போன்ற எலும்பு தெய்மானம் நோய்களுக்கு காரணம் கால்சியம் அளவு குறைவதால்தான்.

ஆனால் அவற்றிற்காக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் டெமென்ஷியா என்னும் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஸ்வீடனிலுள்ள கோதன்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் பெண்கள் சாப்பிடும் கால்சியம் மாத்திரைக்கும் மன அழுத்தத்திற்கு என்ன தொடர்பு என ஆராய்ச்சி செய்தனர்.

இந்த ஆராய்ச்சிக்காக 700 வயதான பெண்களை ஈடுபடுத்தினர். அவர்களின் மூளையையும் ஸ்கேன் செய்து ஆய்வு படுத்தினார்கள். பொதுவாக ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு மன பிறழ்வு வரும் வாய்ப்பு அதிகம் என்று சொல்வார்கள். இந்த ஆராய்ச்சியின் ஏற்கனவே ஸ்ட்ரோக் வந்த பெண்கள், கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஏழு மடங்கு டெமென்ஷியா எனப்படும் மனப் பிறழ்விற்கு தள்ளப்படுவார்கள்.

ஆனால் ஸ்ட்ரோக் வராமல் இருந்தவர்களுக்கு டிமென்ஷியா வரும் வாய்ப்பு குறைவு என ஆறுதல் அளித்தனர். ஆனால் அவையும் பக்க விளைவுகளை தருபவையே. ஆகவே பெண்கள் கால்சியம் மாத்திரைகளை சாப்பிடும் முன் அதன் தேவையை உறுதி படுத்தியபின்தான் சாப்பிட வேண்டும் என தலைமை ஆராய்ச்சியாளர் கேர்ன் கூறுகிறார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

SOCIAL

LATEST REVIEWS

0 21
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில்...