Timber by EMSIEN-3 LTD
பொது

0 21
அழிக்க முடியாத உறவு தாய்மாமன் உறவு

அழிக்க முடியாத உறவு ” தாய்மாமன் ”
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால்
உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான்.
பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய்
என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது
அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான்
சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா
வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா
என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் அது தாய்மாமா தான்.

எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே
வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.
உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா,
அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது
தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு
வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித
முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப்
உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை
எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக
மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா
வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..

தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல
கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும்
தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது
குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது
வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும்
தாய்மாமனே முன்னிற்பான்.

தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக
உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு
அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே
போகலாம்.

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை
அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக
தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக
வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால்
என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான்.

எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ
அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.
சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின்
மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான்
கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால்
அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய்
மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை
தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை
கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன்
அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று
அடித்துச் சொல்லலாம்.
ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை
காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும்
அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம்
தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.
குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து
மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன
உண்மை…

நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து
இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு
விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட
நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு
கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த
தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க
அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது
அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம்
தெரிந்தது.

நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம்
நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம்
தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம்
குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க
வேண்டும் என்பது என் ஆவா.

Post expires at 2:11am on Thursday February 23rd, 2017

0 33
வலுக்கட்டாயமாக வெளியேற்றம்.. மெரினாவில் போலீஸ் அதிரடி.

வலுக்கட்டாயமாக வெளியேற்றம்.. மெரினாவில் போலீஸ் அதிரடி.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி உலகம் எங்கும் தமிழர்கள் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இந்தப்போராட்டம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது,

சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டத்தில ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இன்று சட்டப் பேரவை கூடவுள்ளதாலும், குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் போலீசாரின் ஒத்திகை நடக்க உள்ளதாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றும் வேலையில் காவல்துறை இறங்கியுள்ளது.

இன்று அதிகாலை மெரினா கடற்கரையில் இருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர், “அமைதியான முறையில் போராடினீர்கள், அதேமுறையில் கலைந்து செல்லுங்கள்.

போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க போராட்டக்காரர்கள் இதுவரை அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்தீர்கள்” என்று போலீசார் கேட்டுக் கொண்டனர்

மயிலாப்பூர் டிசி இளைஞர்களிடையே இது குறித்த பேசினார். தொடர்ந்து அங்கிருந்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றத் தொடங்கினர்.

ஆனால் அதற்கெல்லாம் போராட்டக் குழுவினர் அசரவில்லை.அங்கிருந்து வெளியேற மறுத்ததுடன் கடற்கரையின் உட்பகுதிக்கு சென்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Post expires at 2:05am on Thursday February 23rd, 2017

0 39
உடனடியாக வெளியேறுங்கள்..போலீஸ் எச்சரிக்கை.

உடனடியாக வெளியேறுங்கள்..போலீஸ் எச்சரிக்கை.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டள்ள தடையே நீக்கக் கோரி மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் உடனடியாக வெளியேறுமாறு சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்களும்,மாணவர்களும் ,பொதுமக்களும் கடந்த கடந்த 17 ஆம் தேதி முதல் சென்னை மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள் என குறிப்பிடப்பட்டள்ளது.

.இந்த போராட்டம் மிகவும் கட்டுப்பாடுடனும்,அமைதியுடனும், பொதுமக்களுக்கும்,போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறுமின்றி நடைபெற்று வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது..

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் சென்னை பெருநகர காவல்துறையினருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கி வந்துள்ளீர்கள்.

தமிழக அரசின் சீரிய முயற்சியால் மக்கள் அனைவரும் விரும்பியபடி ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் மெரினா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும் படி சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக் கொள்கிறது.

மேலும் எவ்வாறு அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினீர்களோ அதே முறையில் காவல்துறையினருடன் ஒத்துழைத்து கலைந்து செல்லும்படி உங்களை கேட்டுக் கொள்கிறோம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Post expires at 2:02am on Thursday February 23rd, 2017

0 39
மெரினா: போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் போலீசார்

சென்னை : மெரினாவிலிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் மெரினாவில் பதற்றம் நிலவி வருகிறது.தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி கடந்த 7 நாட்களாக இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்திற்கான இலக்கு எட்டப்பட்டுள்ளதால், அமைதியான முறையில் கலைந்து செல்லும்படி போலீசார் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்க மறுத்த இளைஞர்கள், தங்களுக்கு தற்காலிக தீர்வு தங்களுக்கு வேண்டாம் என்றும் நிரந்தர தீர்வு தான் வேண்டும் எனவும் கூறி போராட்டத்தை கைவிட மறுத்தனர்.இதனையடுத்து மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள்- மாணவர்களின் பிரதிநிதிகளிடம் கூடுதல் ஆணையர் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் முடிவிலும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததையடுத்து, மெரினாவிலிருந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.வாகனங்களுக்கு அனுமதியில்லை:சென்னை கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. காமராஜர் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பப்பட்டுள்ளன.சேலம் காவல்துறை அறிவிப்பு:சேலம் காவல் ஆணையர் சஞ்சய்குமார் மாணவர்களிடையே பேசியதாவது: மாணவர் போராட்டத்தில் சில சில விஷமிகள் புகுந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க கூடாது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. சட்ட விரோத செயல்களிலிருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும். அறவழிப் போராட்டத்துக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிலையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் போராடி வந்த போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

Post expires at 1:54am on Thursday February 23rd, 2017

0 371
குடி... கும்மாளம்... கூத்து. 'பீட்டா'வின் யோக்கியதை இது...!!

ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், பீட்டாவுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நடிகை திரிஷா. தற்போது உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு தமிழகமே பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்கள் கமல், ரஜினி, சிம்பு,விஜய் இயக்குநர்கள் பாரதிராஜா,அமீர்,ராம்,கவுதமன் இளையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பின் மீது பொது மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டத் தொடங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரிஷா.

நடித்து வரும் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை அருகே நடைபெற்று வந்தது.

பீட்டா ஆதரவு நடிகை திரிஷா நடித்துக் கொண்டிருப்பமை அறிந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், அவருக்கு எதிராக முழக்கமிட்டதோடு ஓட ஓட விரட்டியடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்னைப்பற்றி கேவலமான முறையில் சித்தரிப்பதுதான் தமிழர் கலாச்சாரமா என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் பீட்டா அமைப்புக்கு தொடர்ந்த ஆதரவு அளிக்கப்போவதாக திமிராக பதில் அளித்திருந்தார்,

திரிஷாவின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழர் கலாச்சாரம் குறித்து பேசுவதற்கு திரிஷாவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது என கேள்வி எழுப்பினர்.

வார இறுதி நாட்களில் குடியும்,கூத்தும் என போதையில் முழுகும் திரிஷா தமிழ் கலாச்சாரம் குறித்து பேசலாமா என கேட்கும் பொது மக்களுக்கு என்ன பதில் சொல்லபோகிறார்.

பீட்டாவின் சிஇஓ பூர்வா ஜோஷிபூரா கையில் மது கோப்பையும் வாயில் சிகாரும் வைத்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை எற்படுதியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு திரிஷாவும் அவரது நண்பர்களும் நட்சத்திர விடுதி ஒன்றில் குடித்துவிட்டு கும்மாளமிடும் காட்சி வெளியானது. அந்த கூட்டத்தில் நடிகர் விஷாலும் குடித்து விட்டு ஆட்டம் போடுகின்றனர்.

குடி,கும்மாளம் என பொழுதைக் கழிக்கும் விஷால், திரிஷா போன்றோர்கள் தமிழர்கள் கலாச்சாரம் குறித்து பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Post expires at 2:34am on Wednesday February 22nd, 2017

0 113
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய அலங்காநல்லூர் பொது மக்கள். இன்று ஜல்லிக்கட்டு நடக்குமா?

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய அலங்காநல்லூர் பொது மக்கள். இன்று ஜல்லிக்கட்டு நடக்குமா?

உச்ச நீதிமன்ற விதித்த தடை காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாவில்லை. இதனால் கொதித்தெழுந்த இளைஞர்களும், மாணவர்களும் கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் இந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இவர்களின் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருவதால், அதன் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பித்தது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அதில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார்.

இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்தார்.அதன்படி இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஓபிஎஸ் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு நடப்பது உறுதியானதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் நிரந்தர சட்டம் பிறப்பிக்கப்படும் வரை, வாடிவாசலை விட்டு விலக மாட்டோம் என்றும், ஜல்லிக்கட்டை நடத்த விட மாட்டோம் என அலங்காநல்லூர் பொதுமக்கள், இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

உள்ளூர் மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் யாரும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அலங்காநல்லூர் வாடிவாசலை விட்டு, விலகாமல் மக்கள் அங்கேயே கூடியுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எந்நேரத்திலும் போலீஸ் தடியடி நடத்தியோ, கைது செய்தோ கூட்டத்தைக் கலைக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

சென்னை மெரினா, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வஉசி மைதானம், திருப்பூர்,ஈரோடு சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் இதற்கு நிரந்தர தீர்வாகாது எனவும் நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று தமிழக அரசும், நடத்தவிடக்கூடாது என்று மாணவர்களும் பிடிவாதமாக இருப்பதால் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

.

Post expires at 2:07am on Wednesday February 22nd, 2017

0 63
அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட்..!

கடந்த 2016 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட்களின் பட்டியலில் 123456 முதலிடம் பிடித்துள்ளது.

இணையதள ஹேக்கிங் நடவடிக்கைகளை தடுக்க பலர் பல்வேறு கடவுச்சொற்களை கணினிகளிலும், மொபைலிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிகமான பயனர்கள் பயன்படுத்திய கடவுச்சொல் 123456 என்பது கீப்பர் செக்யூரிட்டி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கீப்பர் செக்யூரிட்டி நிறுவனம் உலகின் டாப் 10 இடங்களில் உள்ள கடவுச் சொற்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அதில் முதலிடத்தில் ‘123456’ இடம்பெற்றுள்ளது.
மேலும் கீ போர்ட்களில் காணப்படும் வரிசை ‘qwerty’என்பதையும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிய வந்துள்ளது .

Post expires at 5:26pm on Tuesday February 21st, 2017

0 326
வைரலாகும் ஏறுதழுவுதல் விழா அழைப்பு

ஏறுதழுவுதல் விழா என்ற பெயரில் கடந்த 1968ம் ஆண்டு அச்சிடப்பட்ட அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஏறுதழுவுதல் விழா என்ற தலைப்பில் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 1968ம் ஆண்டு அச்சடித்த அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்கள் வைரலாகப் பரவி வருகிறது.

Post expires at 5:22pm on Tuesday February 21st, 2017

0 44
தடைகளைக் கடந்துவந்த ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு, 2006-ம் ஆண்டு முதலே பல்வேறு தடைகளை கடந்து வந்துள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.

2006 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டப்பிரிவு 22-ன் கீழ், காளைகளையும் சேர்த்து மத்திய காங்கிரஸ் அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில், 2014ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதியன்று, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்தது. இதையடுத்து, தமிழக அரசு 2014 ஆம் ஆண்டு மே மாதம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் 16.11.2016 அன்று தள்ளுபடி செய்தது. இதனிடையே, கடந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஜல்லிக்கட்டு நடத்த காப்புரிமை தந்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. ‌ஒரு சில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, அதே ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி தடை விதிக்கப்‌பட்‌டது.

இவ்விரு காரணங்களால், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது தமிழக அரசே அவசரச் சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த‌ப்பட உ‌ள்ளது.

Post expires at 5:15pm on Tuesday February 21st, 2017

0 246
வாடி வாசலை யாரை கேட்டு தயார் செய்தீர்கள்: பொதுமக்கள் ஆவேசம்..!

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை இன்று ஆளுநர் வித்தியாசகர ராவ் அறிவித்தார், இந்த அறிவிப்பை மதுரையில் உள்ள பொதுமக்கள் யாரும் ஏற்றுகொள்ளவில்லை.

இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பல லட்சம்பேர் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.

ஆனால் இன்று அவசர சட்டம் பிறப்பித்தபிறகு கிராம மக்களிடம் கேட்காமல் போலீசார் வாடி வாசலை தயார் செய்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாளை கண்டிப்பாக வாடிவாசல் திறக்கப்படமாட்டாது காளைகளை நாங்கள் கொண்டு வந்தால்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post expires at 1:13pm on Tuesday February 21st, 2017

SOCIAL

LATEST REVIEWS

0 21
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில்...