Timber by EMSIEN-3
EMSIEN-3
LTD
சினிமா

0 182
மாவீரன் கிட்டு கதை விமர்சனம்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன், நாகி நீடு, ஃபெரேரா ஒளிப்பதிவு: ஏஆர் சூர்யா இசை : டி இமான் வசனம் – பாடல்கள்: யுகபாரதி மக்கள் தொடர்பு: ஜான்சன் தயாரிப்பு: ஐஸ்வர் சந்திரசாமி, தாய் சரவணன், ராஜீவன் எழுத்து – இயக்கம்: சுசீந்திரன்

நூறாண்டு தமிழ் சினிமாவில் இப்போதுதான் பொது வழியில் தலித்தின் பிணம் ஏன் போகக் கூடாது? உனக்குச் சமமா நான் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தா தப்பா? விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதில் சாதிக்கு என்ன வேலையிருக்கிறது? என்ற கேள்விகளுடன் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.

மாவீரன் கிட்டு கதை மிக இயல்பானது… அன்றும் இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது, நிகழ்வுகளாக… செய்திகளாக. பள்ளி செல்ல பல மைல் தூரம் நடந்து போக வேண்டிய, பிணத்தை எடுத்துச் செல்லக் கூட பொது வழி மறுக்கப்பட்ட சமூகம் வாழும் கிராமத்தில் பிறந்த கிருஷ்ணகுமார் என்கிற கிட்டு, மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்.

ஐஏஎஸ் படித்து கலெக்டராகி தான் சார்ந்த சமூகத்தின் மீதான தளைகளை உடைக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கனவுகளுடன் கல்லூரி சென்று வருபவன் மீது ஆதிக்க சாதியினருக்கு அடங்காத ஆத்திரம். எப்படியாவது அவனை முடக்கிப்போட சதித் திட்டம் தீட்டுகிறார்கள்.

சாதித் திமிர் பிடித்த ஒரு போலீஸ்காரன் மூலம் ஒரு கொலை வழக்கில் அபாண்டமாக சிக்க வைக்கிறார்கள். அதிலிருந்து கிட்டு மீண்டானா? அவனது சமூகத்துக்கான உரிமைகளை பெற்றுத் தந்தானா என்பதற்கு திரையில் விளக்கம் தெரிந்து கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் மக்களுக்கான முதல் பத்துப் படங்களுக்கான பட்டியலில் இடம் பெறும் தகுதி நிச்சயம் இந்த மாவீரன் கிட்டுவுக்கு உண்டு.

எண்பதுகளின் பின்னணி… படம் நெடுக மனசுக்கு ரொம்ப நெருக்கமான, நெகிழ்வான காட்சிகள்.. எம்ஜிஆர் மறைவுச் செய்தி அறிந்ததும் கல்லூரிக்கு விடுமுறை. பஸ் இல்லாததால் மாணவர்கள் நடந்தே காட்டு வழியில் செல்கிறார்கள். ஒரு மாணவியை திடீரென்று நாகம் கொத்திவிடுகிறது. அவள் உயர்சாதிப் பெண். கூட வரும் மாணவர்களில் பலர் தாழ்த்தப்பட்டவர்கள்.

அவர்கள்தான் உதவிக்கு வருகிறார்கள். ஆனால் அவளைத் தொட்டுத் தூக்க முடியாது. சாதிக் கட்டு அப்படி. அந்தப் பெண்ணோ கதறுகிறாள்.. ‘பரவால்ல என்னைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போங்க’ என்கிறாள். மாணவர்கள் கரம் கோர்க்கிறார்கள். அங்கே ‘உயிரெல்லாம் ஒண்ணு…’ என யுகபாரதியின் வரிகள் உரக்க ஒலிக்க, பார்க்கும் நமக்கு கை கால்கள் சிலிர்க்கின்றன. Ads by ZINC அடுத்த காட்சியில், ‘அதெப்படிடா அவளை நீ தொட்டுத் தூக்கலாம்..’ என நாயகன் கன்னத்தில் அறைகிறான் சாதித் திமிர் பிடித்தவன்.

சாதியத்தின் நியாயமற்ற கொடிய தர்க்கத்தை அங்கே தவிர்க்க நினைக்கும் நாயகன், ‘தப்புதான்.. மன்னிச்சிடுங்க’ என விலகிப் போகிறான். சினிமாவை மீறிய யதார்த்தக் காட்சி அது. பார்த்திபனின் பாத்திரம் அத்தனை நிறைவு. இவரைப் போன்ற சின்ராசு அண்ணன்களின் போராட்டங்கள்தான் பல இளைஞர்களை சாதியத்தின் அழுத்தத்தை மீறி சாதிக்க வைத்தன. கதையின் இன்னொரு நாயகன் வசனகர்த்தாக களமிறங்கியிருக்கும் கவிஞர் யுகபாரதி.

பெரிய பிரச்சாரமெல்லாம் இல்லாமல், ஆனால் கேட்கும்போதே மனதைத் தைக்கிற, தகிக்க வைக்கிற வசனங்கள். “காலங்காலமா அடிவாங்கிட்டிருந்தவன், திமிறி திருப்பி அடிச்சான்னா திமிருங்கிறாங்க”.. இது ஒரு சாம்பிள். கிட்டு பாத்திரத்துக்கு மிகக் கச்சிதமான தேர்வு விஷ்ணு விஷால். நேர்வகிடு எடுத்த அடர்த்தியான கிராப், பாக்யராஜ் ஸ்டைல் கண்ணாடியுடன் அப்படியே அந்த கிராமத்து மாணவராக மாறியிருக்கிறார். சற்றும் சினிமாத்தனம் இல்லாமல், கல்லூரியில் படிக்கும் கிராமத்து மாணவியாக வந்து மனதில் பதிகிறார் ஸ்ரீதிவ்யா.

ஆதிக்க சாதித் திமிர் பிடித்தவர்களாக வரும் நாகி நீடு, குறிப்பாக வெறியேற்றும் அந்த இன்ஸ்பெக்டர் செல்வராஜாக வரும் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் மிகக் கச்சிதமான பங்களிப்பைத் தந்துள்ளனர். சூரிக்கு இந்தப் படத்தில் காமெடி வேடமில்லை. அவரும் ஒரு சீரியஸ் பாத்திரம். பார்த்திபனை விட்டு விலக அவர் சொல்லும் காரணத்தில் நேர்மை. ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் ஃபெரைரா இன்னொரு அற்புதமான பாத்திரம். இப்படிப்பட்ட நடுநிலை நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சூரியாவின் ஒளிப்பதிவில் அத்தனை யதார்த்தம்.. நேர்த்தி. குறிப்பாக கொடைக்கானலின் அழகுகளை அப்படியே அள்ளிக் குடித்திருக்கிறது. டி இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இனிமை.

படத்தின் பெரிய குறை… இடைவேளைக்குப் பிந்தைய இரு பாடல் காட்சிகளும், நாயகனின் முடிவும். இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இனி சாதி கவுரவத்தில் பிறக்கும் பரிதாபம் தேவையில்லை. ‘இவனும் நமக்கு இணையான மனுசன்டா… அவன் உரிமையைத்தானே கேட்கிறான்… இதில் நமக்கு என்ன நஷ்டம்?” என்ற நியாயம் புரிய வேண்டும். அந்த உணர்வை எதிர்த் தரப்புக்கு ஏற்படுத்தும் விதமான படைப்புகள்தான் வேண்டும். அதைத்தான் பா ரஞ்சித் செய்து கொண்டிருக்கிறார். சுசீந்திரன் போன்ற படைப்பாளிகள் அதை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்ல வேண்டும். சாதிகளற்ற சமூகம் சாத்தியமா தெரியவில்லை… ஆனால் எல்லா சாதியும் சமம் என்ற நிலையை சாத்தியப்படுத்த முடியும். திரையிலும் சமூகத்திலும் நிறைய சின்ராசுகள் உருவாக வேண்டும். கிட்டுகள் நின்று வாழ்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றி சாதிக்க வேண்டும்‍!

0 110
அடுத்த டி.ஆர்.,

கடந்த, 1980களில், கோலிவுட்டில் சகலகலா வல்லவனாக வலம் வந்தவர், டி.ராஜேந்தர். நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என, அனைத்து வேலைகளையும் இவர் மட்டுமே செய்து, அனைவரையும் ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்தார்.

இப்போது, பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும், டி.ஆர்., போல், சகலகலா வல்லவனாக அவதாரம் எடுத்துள்ளார். மீசையை முறுக்கு என்ற படத்தில், ஹீரோவாக அறிமுகமாவதுடன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் ஆகிய வேலைகளையும், அவரே கவனிக்கிறார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம்  Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.

0 123
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
இந்திய அரசு சார்பில் அடுத்த மாதம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 250 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 தமிழ்படங்கள். அவற்றில் ஒன்று மாதவன்-ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ .

மற்ற இரண்டு படங்களும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்தவை. அதில் ஒன்று பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘பசங்க-2’ மற்றொன்று சூர்யா 3 வேடங்களில் நடித்த ‘24’. தனது தயாரிப்பில் நடிப்பில் திரைக்கு வந்த 2 படங்கள் கோவா சர்வதேச படவிழாவில் திரையிட தேர்வு ஆகி இருப்பதால் மகிழ்ந்து போன சூர்யா, இந்த விழாவில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.

சூர்யா தற்போது ‘சிங்கம்’ படத்தின் மூன்றாவது பாகமாக உருவாகி வரும் ‘எஸ் 3’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 119
என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாகத் தெரியும்: ஷாருக்கான்

இந்திப்பட உலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். இப்போது ‘ரயீஸ்’, ‘டிஜயர் ஜிந்தகி’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். பெண்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக அவ்வப்போது ‘கிசு கிசு’க்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தன்னைப்பற்றி எழும் கிசு கிசுக்களுக்கு நடிகர் ஷாரூக்கான் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் ஒரு நடிகன். சுமார் 20 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறேன். உலகின் மிக அழகான பெண்களுடன் நடித்திருக்கிறேன். நான் வெளிநாட்டிலும், என்னுடன் நடிக்கும் நடிகைகளுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டதாக வதந்திகளை பரப்பினார்கள்.

இது போன்ற செய்திகள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. என் மனைவி கவுரியையும் பாதிக்காது. என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாக தெரியும். நான் என்னுடைய வேலையை தவிர வேறு எதையும் கவனிக்க எனக்கு நேரம் இல்லை என்பதை என் மனைவி அறிவார்.

எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தால், அது எங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கும். எனவே கிசுகிசுக்களைப் பற்றி நான் கவலைப்படவேண்டியதில்லை” என்றார்.

0 145
ரஜினியின் 2.0 மூலம் இந்திய சினிமாவை உலகுக்கு காட்டுவோம்: லைக்கா

‘எந்திரன்’ படத்தின் வெற்றியை அடுத்து அதன் 2-வது படமாக ‘2.0’ படம் தயாராகி வருகிறது. ரஜினியுடன் அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் முதல் போஸ்டர் அடுத்த மாதம் 20-ந்தேதி வெளியிடப்படுகிறது. ‘2.0’ படப்பிடிப்பு 75 சதவீத முடிந்து விட்டது. இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள செய்தியில்,’‘இந்திய சினிமா என்னவென்று உலகுக்கு காட்டும் நேரம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு மாதம்தான். ‘2.0’ படம் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியும், கில்லாடியும் இந்திய சினிமா என்ன என்று உலகுக்கு காட்டுவோம். அதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது’ என்று கூறியுள்ளார்.

‘2.0’ படத்தின் முதல் போஸ்டர் வெளியாகும் அதே தினத்தில் டீசரும் வெளியாகவுள்ளதாகவும், அதைத்தான் லைக்கா நிறுவனம் இப்படி வெளிப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 109
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. நாயகனாக நாக சைதன்யாவும், நாயகியாக சுருதிஹாசனும் நடித்திருந்த இப்படத்தை இயக்குனர் சந்துமொன்டேட்டி இயக்கினார்.

படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் சமந்தா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்ததாகவும் சுருதியால் அந்த வாய்ப்பை அவர் இழந்ததாகவும் தெலுங்கு படவுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் சந்து மொன்டேட்டி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “பிரேமம்’ படத்தை தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்தவுடன் மலர் டீச்சர் பாத்திரத்துக்கு பிரபல நாயகி ஒருவர் வேண்டும் என்று சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்தோம். சிந்து கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என்றும் யோசித்தோம்.

பின்னர், ஏற்கனவே ஒரு ஸ்டார் நாயகியை ஒப்பந்தம் செய்ததால் சமந்தாவை நடிக்க அழைக்கவில்லை. சிந்து கதாபாத்திரத்துக்கு மலையாளத்தில் நடித்த மடோனாதான் சரியாக இருப்பார் என்று தோன்றியது. எனவே தெலுங்கிலும் அவரையே அந்த வேடத்தில் நடிக்க வைத்தோம்” என்றார்.இப்படத்தின் நாயகன் நாகசைதன்யாவும், சமந்தாவும் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 95
ரெமோ படத்துக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை சூளைமேட்டை சேர்ந்த வரதராஜன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை கடந்த 7-ந்தேதி பார்ப்பதற்கு சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் ஒன்றில் டிக்கெட் முன் பதிவு செய்தேன். அப்போது என்னிடம் ரூ.120 வசூலிக்கப் பட்டது. இந்த டிக்கெட் வாங்கிய பின்னர்தான், இந்த படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை வழங்கி யிருப்பது எனக்கு தெரிய வந்தது.

தமிழ் மொழியையும், தமிழ் சினிமாவையும் ஊக்குவிக்க பல சலுகைகளை தமிழக அரசு கடந்த 2005-2007ம் ஆண்டுகளில் அறிவித்தது.அதன்படி, தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு முழுமை யான வரி விலக்கை தமிழக அரசு அளித்தது.

ஆனால், ‘ரெமோ’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தையே இல்லை. இது ஒரு லத்தீன் வார்த்தையாகும். தமிழக வணிகவரித்துறையின் முதன்மை செயலாளராக இருக்கும் சந்திரமவுலிதான், அதே துறையின் கூடுதல் தலைமை செயலாளராகவும் உள்ளார். இரு பதவிகளையும் அவரே வகிப்பதால், ‘ரெமோ’ என்ற வார்த்தை தமிழ் இல்லை என்று நன்கு தெரிந்து இருந்தும் இந்த திரைப்படத்துக்கு வரிச்சலுகையை வழங்கியுள்ளார். அவர் தன் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார்.

இதனால், வரியாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பெரும்தொகையை அரசுக்கு செல்லாமல், இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு செல்கிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

எனவே, ‘ரெமோ’ படத்துக்கு வரிச்சலுகை வழங்கி தமிழக வணிகவரித்துறை முதன்மை செயலாளர் கடந்த 6-ந்தேதி பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவக்கு வரிவான பதில் மனுவை தமிழக வணிக வரித்துறை முதன்மை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை நவம்பர் 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

0 84
விஷாலைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் வடிவேலு

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு விஷாலின் ‘கத்தி சண்டை’ படத்தின் மூலமாக மீண்டும் காமெடிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். நாயகனாக நடித்து வந்த வடிவேலு மீண்டும் காமெடி நடிகராக நடிக்க முடிவு செய்ததை அறிந்தவுடன் ஏராளமான இயக்குனர்கள் தங்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஜி.வி.பிரகாஷின் புதிய படமொன்றில் நடிக்க வடிவேலு சம்மதம் சொல்லியிருக்கிறார். இதனை உறுதி செய்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்  “வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து ராம்பாலாவின் அடுத்த படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தில் நடிப்பதற்காக பெரிய தொகை ஒன்றை வடிவேலுவுக்கு சம்பளமாக பேசியிருப்பதாகவும், தீபாவளிக்குப் பின் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 97
விஜய் சேதுபதியைவிட அதிக படங்களில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பார் -பாண்டிராஜ்

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக கீர்த்தி கர்பண்டா நடித்திருக்கும் படம் ‘புரூஸ்லி’. இயக்குனர் பாண்டிராஜ் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். பி.வி.‌ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் இயக்குனர் பாண்டிராஜ் பேசும் போது “என்னுடைய உதவியாளர்கள் இயக்குனர்களாக மாறி வருவது சந்தோ‌ஷம். ஒரு இயக்குனருக்கு இதைவிட வேறு பெருமை வேண்டியதில்லை. இந்த படத்தின் இயக்குனர் தனது பெயருக்கு பின்னால் போட்டியிருப்பது அவரது குருவான எனது பெயர் என்று நினைக் கிறார்கள். அது தவறு. அவரது பெயருடன் இருப்பது அவரது தந்தை பெயர்.

ஜி.வி.பிரகாஷ் படத்துக்குப் படம் தன்னை மெருகேற்றிக் கொண்டு வருகிறார். நிறைய படங்களில் நடிக்கிறார். இப்போது வேண்டுமானால் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்திருக்கலாம். அவருக்கு சவால் விடும் வகையில் அடுத்த ஆண்டு ஜி.வி.பிரகாஷ் இதைவிட அதிகமான படங்களில் நடிப்பார். மாதம் ஒரு படம் வெளியாகும். இவர் கடுமையான உழைப்பாளி. இவருடைய வளர்ச்சி பெருமை அளிப்பதாக இருக்கிறது” என்றார்.

பாண்டிராஜின் ‘கேடி பில்லா கில்லாடி ரெங்கா’ படத்தின் 2-வது பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 87
சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. முதன்முறையாக சிம்பு மூன்று தோற்றங்களில் நடித்து வரும் இப்படத்தில் மதுர மைக்கேல் கதாபாத்திரத்தைத் தொடர்ந்து அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக், டீசர் இவற்றுடன் ‘ட்ரெண்ட் சாங்’ எனத் தொடங்கும் ஒற்றைப்பாடல் ஒன்றையும் வெளியிடப் போவதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டிரெய்லரை வெளியிடப் போவதாகவும் இது தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா- சிம்பு கூட்டணியில் வெளியான ‘லூசு பெண்ணே’, எவன்டி உன்ன பெத்தான்’ பாடல்கள் ஹிட்டடித்ததால் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் ‘ட்ரெண்ட் சாங்’ பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SOCIAL

LATEST REVIEWS

0 504
மேஷம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 9...