Timber by EMSIEN-3 LTD
ஆன்மீகம்

0 900
Debt solving Tuesday
நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.
பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது.
குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும்.  அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும்.
ஆனால் அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுவதாக கூறப்படுகிறது.
எனவே, செவ்வாய், முருக கடவுளுக்கு உகந்தது. செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்

Post expires at 3:30am on Monday May 29th, 2017

0 712
இன்றைய 29.4.17 ராசி பலன்கள்

மேஷம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

மிதுனம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து விலகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

கடகம்

எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

சிம்மம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

கன்னி

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

துலாம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

விருச்சிகம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

தனுசு

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

மகரம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கும்பம்

பழைய சிக்கல்கள் தீரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

மீனம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

Post expires at 2:58am on Monday May 29th, 2017

0 607
இன்றைய 27.4.17 ராசி பலன்கள்
மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

கடகம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

கன்னி

சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

துலாம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

விருச்சிகம்

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

தனுசு

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

மகரம்

நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

கும்பம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மீனம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

Post expires at 4:38am on Saturday May 27th, 2017

0 419
பாபா ராம்தேவ் விபத்தில் மரணமா? வாட்ஸ் அப் வதந்தியால் பரபரப்பு

இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் யோகா பயிற்சி முகாம்களை நடத்தி பிரபலமானவர் பாபா ராம்தேவ். பிரதமர் மோடிக்கே நெருக்கமானவர் என்று கூறப்படும் பாபா ராம்தேவ் இன்று விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் புகைப்படத்துடன் கூடிய ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள், பக்தர்கள், உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் அவர்கள் இந்த செய்தி உண்மையா? என்று சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியுடன் கேள்வி கேட்டு வருகின்ரனர். ஆனால் இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் பாபாவுக்கு எந்த விபத்தும் நேரவில்லை என்றும், வாட்ஸ் அப்பில் பரவி வரும் புகைப்படம் போலியானது என்றும் பாபா தரப்பில் விளக்கம் அளிக்கபப்ட்டுள்ளது.

யோகா, ஆன்மீகம் மட்டுமின்றி, பதஞ்சலி என்ற பெயரில் பல இயற்கையான மூலிகை தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் நிறுவனம் ஒன்றையும் பாபா ராம்தேவ் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post expires at 4:23am on Friday May 26th, 2017

0 757
இன்றைய 26.4.17 ராசி பலன்கள்
மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அசுவனி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ரிஷபம்

திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மிதுனம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

சிம்மம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனகுழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

கன்னி

சந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
துலாம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

விருச்சிகம்

கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

தனுசு

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

மகரம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்கள் இருக்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

கும்பம்

சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உடல் ஆரோக்யம் சீராகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

Post expires at 4:12am on Friday May 26th, 2017

0 686
இன்றைய 24.4.17 ராசி பலன்கள்
மேஷம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ரிஷபம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

மிதுனம்

உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

கடகம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

சிம்மம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

கன்னி

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

விருச்சிகம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

தனுசு

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

மகரம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தல் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மீனம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். புது முதலீடுகளை தவிர்க்கவும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

Post expires at 3:38am on Wednesday May 24th, 2017

0 286
பிறந்த நாள் பலன்கள் 23-04-2017 முதல் 29-04-2017வரை

1 10 19 28 பிறந்தவர்கள்
பணவரவு அதிகரிக்கும்.

ஆன்மிக நாட்டம் மேலோங்கும்.

தம்பதியருக்குள் கருத்து மோதல்கள்
உருவாகும்.

வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

வியாபாரம் சாதகமாக இருக்கும்.

பணிச்சுமை அதிகரிக்கும்.

தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள்.

உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: 24, 26

2 11 20 29 பிறந்தவர்கள்

பணப்புழக்கம் மேம்படும்.

வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

அண்டைவீட்டாருடன் இருந்து வந்த பகைமை நீங்கும்.

முதுகு வலி, மூட்டு வலி வந்து போகும்.

பணி இடத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

சில்லறை வியாபாரம் சிறப்படையும்.

தன்னம்பிக்கை பிறக்கும்.

கைத்தொழில் சிறப்படையும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 27, 29

3 12 21 30 பிறந்தவர்கள்

சுபகாரிய பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

கணவன்–மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.

மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும்.

தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

அலுவலக பணியில் அமைதி நிலவும்.

புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

மனம் அமைதியை நாடும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 25, 28

4 13 22 31 பிறந்தவர்கள்

பணப்பற்றாக்குறை நீங்கும்.

எதிர்பார்த்த காரியம் இனிதே நடந்தேறும்.

உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

பணி இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.

துணையுடன் ஈகோ பிரச்சினை ஏற்படும்.

ஆடை, ஆபரணம் சேரும்.

சில்லறை வியாபாரம் சிறப்படையும்.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 23, 26

5 14 23 பிறந்தவர்கள்

குடும்ப வருமானம் உயரும்.

மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.

வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.

உத்தியோகம் சாதகமாக செல்லும்.

தம்பதியருக்குள் நேசம் மிகும்.

வெளியூர் பயணங்கள் வெற்றி தரும்.

அடிவயிற்றில் வலி வந்து நீங்கும்.

உணவு வி‌ஷயத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: 26, 28

6 15 24 பிறந்தவர்கள்

சுபச்செலவுகள் ஏற்படும்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும்.

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.

சோர்வும், களைப்பும் மாறி மாறி வரும்.

ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

அலுவலக பணியில் அமைதி நிலவும்.

கூட்டு வியாபாரம் சுமுகமாக இருக்கும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 23, 25

7 16 25 பிறந்தவர்கள்

வியாபாரம் சாதகமாக இருக்கும்.

அரசு காரியங்கள் தாமதமாகும்.

விருந்தினர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

பண நெருக்கடியை சமாளிப்பீர்கள்.

அலுவலக பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

தம்பதியருக்குள் அன்னியோன்யம் மிகும்.

அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும்.

உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 26, 29

8 17 26 பிறந்தவர்கள்

நட்பு வட்டம் விரிவடையும்.

மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும்.

அதிரடியாக சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

தேவைக்கு பணம் வந்து கொண்டிருக்கும்.

பழைய பாக்கி வசூலாகும்.

வேலைச்சுமை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: 23, 27
9 18 27 பிறந்தவர்கள்
புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

மனைவி வழியில் ஆதாயம் உண்டு.

வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.

சமூக அந்தஸ்து உயரும்.

அலுவலக பணியில் நிம்மதி தோன்றும்.

பண வரவு திருப்தி தரும்.

கூடாப்பழக்க வழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரம் சிறக்கும்.

தான, தர்மங்கள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 25, 29

Post expires at 2:13am on Tuesday May 23rd, 2017

0 602
இன்றைய 23.4.17 ராசி பலன்கள்
மேஷம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ரிஷபம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்

மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

கடகம்

மாலை 5.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சொந்த&பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

சிம்மம்

கணவன் – மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். மாலை 5.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

துலாம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

விருச்சிகம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
மகரம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் நன்மையும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்

மாலை 5.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில வற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

மீனம்

எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். மாலை 5.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

Post expires at 1:40am on Tuesday May 23rd, 2017

0 891
இன்றைய 22.4.17 ராசி பலன்கள்
மேஷம்
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ரிஷபம்

எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

மிதுனம்

கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

கடகம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.
அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

சிம்மம்

மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

கன்னி

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதரி ஒத்துழைப்பார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

துலாம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

விருச்சிகம்

மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

மகரம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வராது என்றிருந்த பணம் வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

கும்பம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

மீனம்

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம்.
அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

Post expires at 6:28pm on Sunday May 21st, 2017

0 820
மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டுமா? இதுதான் அந்த 4 அறிகுறிகள்

மனித  வாழ்க்கையில் பிறப்பு என்ற ஒன்று நிகழ்ந்துவிட்டால் இறப்பு என்பது நிச்சயம். ஆனால் பிறக்கும் நேரத்தை கூட மனிதனால் விஞ்ஞானத்தின் உதவியுடன் கணித்துவிடலாம். இறப்பை யாராலும் கணிக்க முடியாது. அடுத்த நிமிடமே மரணம் நேரலாம் அல்லது நூறு வருடங்கள் கழித்தும் நேரலாம்.
இந்நிலையில் உயிர்களை பிரித்து எடுத்து செல்லும் எமதர்மனை நண்பனாக்கி கொண்டால் இறப்பின் நேரத்தை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்த அமிர்தா என்பவர் எமதர்மனை நோக்கி தவமிருந்தார். இந்த தவத்தின் பயனாக அமிர்தாவின் முன் தோன்றிய எமன், அமிர்தாவின் விருப்பப்படியே இறப்பை முன்கூட்டியே அறியும் வகையில் நான்கு அறிகுறிகளை தெரிவிப்பதாக வாக்கு கொடுத்தார்.

எமனின் நான்கு அறிகுறிகள் எப்போது வரும் என்று காத்திருந்த அமிர்தாவுக்கு ஒரு அறிகுறியும் தெரியவில்லை. தலைமுடி நரைத்து, பற்கள் விழுந்து, கண் பார்வை மங்கி, கைகால்களும் செயல் இழந்தன. பின்னர் ஒருநாள் அமிர்தா இறந்து போனார்.

எமலோகத்தில் அமிர்தா, எமதர்மனிடம் கொடுத்த வாக்கை ஏன் காப்பாற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். அப்போது எமன் கூறியபோது நான் தந்த முதல் அறிகுறி அமிர்தாவின் தலைமுடி நரைத்தது, இரண்டாவது அறிகுறி பற்கள் கொட்டியது, மூன்றாவது அறிகுறி கண் பார்வை இழந்தது, நான்காவது அறிகுறி கை, கால்கள் செயலிழந்தது என்று கூறினார். எனவே மரணம் வருவதற்காக அறிகுறி இந்த நான்கு மட்டுமே என எமதர்மன் விளக்கினார்.

Post expires at 6:24pm on Sunday May 21st, 2017

SOCIAL

LATEST REVIEWS

0 199
சாஸ்திரங்களின் படி, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் நம்மைப் பற்றிய சில ரகசியங்களைக் கூறும். அதில் பிடித்த நிறங்கள் முதல், பழக்கவழக்கங்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வெளிக்காட்டும். குளிக்கும் போது, ஆரம்பத்தில் ஒவ்வொருவரும்...