திருப்பதி ‘லட்டு’ உருவான கதை

திருப்பதி ‘லட்டு’ உருவான கதை

0 511
திருப்பதி ‘லட்டு’ உருவான கதை


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1445-ம் ஆண்டு ‘சுசியம்’ என்ற பிரசாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதே, 1455-ம் ஆண்டு ‘அப்பம்’ அறிமுகமானது. 1460-ம் ஆண்டு ‘வடை’ பிரசாதமாக வழங்கப்பட்டது.
1468-ம் ஆண்டு அதிரசமும், 1547-ம் ஆண்டு மனோகரபடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
1803-ம் ஆண்டு முதல் ‘பூந்தி’ பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது.
இதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக பூந்தியை லட்டுவாக மாற்றி 1840-ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்டுக்கு சேர்க்கும் மூலப்பொருட்களின் அளவை ‘திட்டம்’ என்ற பெயரில் கணக்கிட்டு சேர்க்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டு, 1950-ம் ஆண்டு அதனை அறிமுகப்படுத்தியது.
2001-ம் ஆண்டு இதில் சில மாற்றங்களை கொண்டு வந்து அதனை இப்போது வரை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி 5100 லட்டுகள் தயாரிக்க 165 கிலோ பசுநெய், 180 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 30 கிலோ முந்திரி, 14 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கற்கண்டு, 4 கிலோ ஏலம் ஆகியவை சேர்க்கப்படுகிறது.
மொத்தம் 803 கிலோ மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டு லட்டு தயாரிக்கப்படுகிறது.

Post expires at 1:53am on Thursday February 9th, 2017