ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் பதில்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் பதில்

0 212
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் பதில்


ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர் கே நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவில்லை.

தமிழக முதல்வரும், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவுமாக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறந்தார். எனவே அந்த சட்டசபை தொகுதி காலியானதாக சட்டசபை செயலாளரால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி பேட்டியளித்தார். அப்போது ஆர்.கே.நகர் தேர்தல் தேதி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால், தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். 5 மாநில சட்டமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் சேர்த்து நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Post expires at 2:10am on Tuesday February 7th, 2017