சசிகலா என் பொண்டாட்டிதான்.! எனக்காக சிலுவையும் சுமப்பார்..! நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி.!

சசிகலா என் பொண்டாட்டிதான்.! எனக்காக சிலுவையும் சுமப்பார்..! நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி.!

0 2797
சசிகலா என் பொண்டாட்டிதான்.! எனக்காக சிலுவையும் சுமப்பார்..! நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி.!


என்னுடையஅரசியல் நடவடிக்கைகளில் சசிகலா எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ, அரசியலை விட்டு விலக சொல்லியோ ஒரு போதும் சொல்லவில்லை.

கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல்,  நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில், தன்னுடைய நகைகளை அடகு வைத்து குடும்பத்தை காப்பாற்றியவர் சசிகலா.

ஏசு சிலுவையை தூக்கி, தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல, என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கி சசிகலா.” என உருக்கமாக பேசுகிறார் நாஞ்சில் சம்பத்.

சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச் செயலாளராக ஏற்று கொள்வதில் எந்த தகுதியும் எனக்கு இல்லை.

எனச்சொல்லி கடந்த இருதினங்களாக அரசியலில் பரபரப்பை கிளப்பி வந்த நாஞ்சில் சம்பத், திடீரென இப்படி அந்தர் பல்டி அடிக்கிறாரே என யோசிக்க வேண்டாம்.

தனக்கான சிலுவையை சுமப்பவர் என நாஞ்சில் சம்பத்  உருகுவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அல்ல. அவரது அன்பு மனைவி சசிகலாவைப்பற்றி.

தன் மனைவி சசிகலாவை  பற்றி முதல் முறைாக பத்திரிக்கைக்கு நாஞ்சில் சம்பத் பத்திரிக்கை ஒன்றுக்கு  பேட்டி அளித்தார் அப்போதுதான் இவ்வாறு அவா் கூறினார்.

“1989 ஆகஸ்ட் 17-ம்தேதி எனக்கு அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் திருமணம் நடந்தது.

ஆகஸ்ட் 29-ம் தேதியே நான் காரமடை பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டேன்.

அதைத் தொடர்ந்து 2012 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நான் வீட்டில் இருப்பது போன்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை.

என்னுடைய பருவகாலங்கள் அனைத்தையும் நான் கட்டிலில் செலவழிக்கவில்லை. மேடையில் செலவழித்தேன்.

அன்பும், ஆதரவும் உள்ள கணவனாக நான் இருந்திருக்கிறேன். ஆனால் நம்முடைய சமூக அமைப்பில் ஒரு பெண் எதிர்பார்க்கின்ற எதையும் என் மனைவிக்கு நிறைவாக செய்ய முடியவில்லை என்ற குற்ற மனப்பான்மை எனக்கு உண்டு.

ஆனால் அவள் அதை பொருட்படுத்தியதே இல்லை. சேலம் மத்திய சிறைச்சாலைத் தவிர, தமிழகத்தில் இருக்கிற 7 மத்திய சிறைச்சாலைகளிலும் வாசம் செய்தவன் நான்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டவன். மேடையிலேயே வத்தலக்குண்டில், குளித்தளையில் தாக்கப்பட்டவன். நான் காயம் பட்டு வீட்டுக்குச் செல்லும் போது கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறாளே தவிர, இனிமேல் மேடைக்கு போகக்கூடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை. என்னை நன்கு புரிந்துகொண்டவள் சசிகலா.

என்னுடைய குழந்தைகள் என்னுடைய மகள் மதிவதினி, என் மகன் சரத்பாஸ்கர் அவர்கள் வளருவதை நான் நேரடியாக பார்த்து அனுபவிக்கவில்லை.

என்னுடைய வயதான தாய் தந்தையின் இறுதிக்காலத்தில், அவர்களை அவள் பரிவோடு பார்த்துக் கொண்டது என்னை நெகிழ வைத்தது.

என்னுடைய குடும்பத்தில் ஓரளவு வருவாய் ஈட்டுபவன் நான்தான். அதை என்னுடைய சகோதரர்களுக்கும், ரத்த சொந்தங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறபோது அவள் ஒருநாளும் தடுத்ததில்லை.

என்னுடைய குணமும், இயல்பும் அறிந்து, என்னுடைய குடும்பத் தேரை அவள்தான் இன்னும் இழுத்துச் செல்கிறாள். ஒருநாள் கூட எனக்கு அதுவேண்டும் இதுவேண்டும் என்று கேட்டதில்லை.

கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு இல்லாமல்  நான் வீட்டில் வெறுமனே இருந்த காலகட்டங்களில் தன்னுடைய நகைகளை அடகு வைத்து எங்கள் குடும்பத்தினுடைய தேவைகளை அவள் நிறைவேற்றுவதற்கு முன்வந்தாள்.

எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை அவளிடத்திலே போய் ஒப்படைத்துவிடுவேன். இதுவரை நான் மருந்து கடைக்கோ, மளிகைக்கடைக்கோ, துணிக்கடைக்கோ சென்றதில்லை.

பருப்பு வாங்குவதிலிருந்து பயணச்சீட்டு வாங்குவது வரை எல்லாமே அவள்தான். எல்லா வேலைகளையும் ஏசு சிலுவையை தூக்கி தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல செய்கிறாள். என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கியாக அவள் இருக்கிறாள்.

அரசியல் நடவடிக்கைகளில் எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ எதுவும் சொன்னதில்லை.

அவள் சுட்டுத்தருகிற வரட்டியும், மட்டன் குழம்பும் அவள் வைத்துக் கொடுக்கும் மீன்குழம்பும் அலாதியான சுவையுடையது.

என்னுடைய குடும்பத்தில் அவள் வந்தபிறகு என்னுடைய சுமையையெல்லாம் தூக்கி வைத்துவிட்டேன். எனக்கு பொதுவாழ்வே சுமையாகிப்போனது.

கனமாகவும் இருக்கிறது. இதை இறக்கி வைக்க முடியாமல் திண்டாடுகிறேன். ஆனால் என் குடும்பச் சுமையை அவளே தாங்கிக் கொண்டாள்.

இதன் மூலம் கொடுத்துவைத்தவர்களின் பட்டியலில் நான் இருக்கிறேன். அவர்களுக்காக செலவழிக்கிற வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. என்னுடைய மகளுக்கு மெடிக்கல் சீட்டு கிடைக்காத போது, அவள் சொல்லிதான் ஹோமியோபதி மருத்துவராக்கினோம்.

அவள் தலைக்குள் ஒரு கட்டி வந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

அவளுக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் என்று சொன்னார்கள். அறுவைசிகிச்சசை நடைபெறும் அன்று வைகோ அவர்கள் திருச்சி வழக்கறிஞர் மாநாட்டை நடத்தினார். நாளைக்கு உனக்கு அறுவைசிகிச்சை. வழக்கறிஞர் மாநாடு இருக்கிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றேன்.

‘அறுவைசிகிச்சையை டாக்டர்கள்தானே செய்கிறார்கள். மகளும் மகனும் உடன் இருக்கிறார்கள். நீங்கள் போய்வாருங்கள்.’ என்றாள். அதைக் கூட அவள் தாங்கிக் கொண்டார்.

அவள் துயரப்படுகிற போதெல்லாம் துணையாக நான் இல்லை என்ற கவலை எனக்கு உண்டு.

எங்க கிராமத்தில் எங்க குடும்பம்தான் செல்வாக்குள்ள குடும்பம். அப்பா இருக்கும் போது எல்லோரும் தேடி வருவார்கள். எல்லோரையும் உபசரித்து அனுப்புவதிலே, அவள் ஒருநாள் கூட முகம் சுழித்ததில்லை.” என்கிறார்.

இரண்டு சசிகலாவை பற்றியும் என்ன நினைக்கிறீர்கள் என அவரிடம் கேட்டோம். “இந்த சசிகலா அரசியலில் திணிக்கப்படுகிறவர்.

அந்த சசிகலா என்னுடைய குடும்பத்தை வழிநடத்துபவர். இந்த சசிகலாவை நான் பார்த்ததில்லை. பழகியதில்லை. ஒருநாள் கூட நான் அறிமுகமானதில்லை.

ஆனால் அந்த சசிகலா என்னை மணம்முடித்த நாள்முதலாக கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்கிற ஒரு குலமகளாக இருக்கிறாள்.”  எனச்சொல்லி பேட்டி விகடன் இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார் நாஞ்சில் சம்பத்..

நாஞ்சில் சம்பத்துக்கு ஏணியும் சசிகலாதான், அரசியலை விட்டு வர காரணமானவரும் சசிகலாதான்.

நன்றி விகடன்.

Post expires at 2:46am on Monday February 6th, 2017