ஒரு கோடி உறுப்பினர்கள்! 32 மாவட்டங்கள்! பிப்ரவரி 24, தீபா அரசியல் பிரவேசம்!

ஒரு கோடி உறுப்பினர்கள்! 32 மாவட்டங்கள்! பிப்ரவரி 24, தீபா அரசியல் பிரவேசம்!

0 423
ஒரு கோடி உறுப்பினர்கள்! 32 மாவட்டங்கள்! பிப்ரவரி 24, தீபா அரசியல் பிரவேசம்!


சசிகலாவை முதலமைச்சர் ஆக்குவதற்காக பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அவரை வீழ்த்த சிலர் தீபாவை ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் ” எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை” என்ற அமைப்பை உருவாக்கி சேலத்தில் உறுப்பினர்களை சேர்த்து வந்தார்.

இந்நிலையில் இந்த அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் 21 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.

ராமச்சந்திரன் மாநில ஒறுங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இதுவரை 24 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்து, ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி தீபாவை சந்தித்து தலைமை ஏற்க அழைப்பு விடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அமைப்பின் புதிய கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.

Post expires at 2:24am on Monday February 6th, 2017