காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்!!

காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்!!

0 497
காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்!!


ஜெயலலிதாவின் வாழ்நாள் முழுவதும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது என கூறப்படுவதுண்டு. அவர் அரசியல் பிரவேசம் எடுத்தப்பின் அவருக்கு நேராக நின்று பேச அமைச்சர்களும் அஞ்சினார்கள்

ஜெயலலிதாவின் வாழ்நாள் முழுவதும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது என கூறப்படுவதுண்டு. அவர் அரசியல் பிரவேசம் எடுத்தப்பின் அவருக்கு நேராக நின்று பேச அமைச்சர்களும் அஞ்சினார்கள்.

அப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு ரசிகர் ஒருவர் காதல் கடிதம் எழுதினார். அதற்கு ஜெயலலிதா எழுதிய பதில் சமயோசிதமானது. அவருடைய புத்திசாலிதனத்தையும் தீர்க்க முடிவையும் அது வெளிப்படுத்தியது.

அதில் நான் உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கிறேன். நான் திருமணம் செய்தால் உங்களை தான் செய்வேன் என்று எழுதியிருந்தார். மேலும் ஒரு தேதியை குறிப்பிட்டு இந்த தேதிக்குள் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ரசிகரின் அந்த கடிதத்திற்கு ஜெயலலிதா எந்த பதிலும் எழுதவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து அந்த தேதி கடந்த பின்னர் அதே ரசிகரிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது.

அதில் மற்றொரு தேதியைக் குறிப்பிட்டிருந்த அந்த ரசிகர், அந்த தேதிக்குள் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் என குறிப்பிட்டிருந்தார்.

இம்முறை ரசிகரின் கடிதத்துக்கு ஜெயலலிதா பதில் கடிதம் எழுதுகிறார். அதில் எனக்கு கணவராக வர விரும்புபவர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுபவராக இருக்க வேண்டும்.

நீங்கள் முந்தைய கடிதத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. உங்களை எப்படி நான் திருமணம் செய்துகொள்ள முடியும்? மன்னிக்கவும். என்று எழுதினார்.

ஜெயலலிதாவின் இந்த பதில் யாரும் எதிர்பாராததாக இருந்தாலும் அவரது சமயோசிதத்தையும் புத்திசாலிதனத்தையும் மட்டுமின்றி அவரது துணிச்சலையும் அடையாளம் காட்டியது. ஜெயலலிதாவின் பதில் கடிதத்திற்கு பிறகு அந்த ரசிகரிடமிருந்த காதல் கடிதங்கள் வரவில்லை. இந்த தகவல் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பகிர்ந்து கொண்டது.

Post expires at 2:30am on Monday February 6th, 2017