அதிகரிக்கும் தனிப்படுக்கை தம்பதிகள் ஆதரிக்கும் பிரபலங்கள்

அதிகரிக்கும் தனிப்படுக்கை தம்பதிகள் ஆதரிக்கும் பிரபலங்கள்

0 143
அதிகரிக்கும் தனிப்படுக்கை தம்பதிகள் ஆதரிக்கும் பிரபலங்கள்


‘கணவரும்- மனைவியும் ஒரே படுக்கைஅறையில் தூங்கினால் பாசம் பெருகும்’ என்று சொல்லப்பட்டு வந்த நிலை மாறி, ‘தினமும் தனித்தனி படுக்கைஅறைகளில் தூங்குங்கள். தேவைப்படும் நேரத்தில் மட்டும் இணைந்துகொள்ளுங்கள். அதுவே தாம்பத்யத்திற்கு ஏற்றது’ என்று சொல்லப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

‘ஆமாம்.. அது சரிதான்..!’ என்று சந்தோஷமாக தலையாட்டுகிறார்கள், தனிப்படுக்கை தம்பதிகள். அதனால் பல தம்பதிகள் தனித்தனி படுக்கையறையில் தூங்கும் வழக்கத்தை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களும் அதை ஆதரிக்கிறார்கள். அபிஷேக்பச்சன், பரா கான், இர்பான் கான் ஆகியோர் தனிப்படுக்கை வழக்கத்தை கடைப்பிடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

சரி.. தனிப்படுக்கை தம்பதிகள் சொல்லும் தாம்பத்ய ரகசியங்களை கேட்போம்!

மும்பையை சேர்ந்த, 30 வயதான ரீட்டா 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர், “தனித்தனி படுக்கை அறையில்தான் தூங்க வேண்டும் என்பதை தீர்மானித்த பிறகுதான் நான் திருமணத்திற்கே சம்மதித்தேன்” என்று வெளிப்படையாகவே சொல்கிறார்.

40 வயதான மருத்துவ தம்பதியும் இதே கருத்தை கூறுகிறார்கள். “நாங்கள் திருமணம் செய்து 10 ஆண்டு களாகியும் தனித்தனி படுக்கை அறைகளையே பயன் படுத்துகிறோம். வழக்கமான எல்லா பணிகளிலும் இணக்கமாக செயல்படுகிறோம். தாம்பத்திய சுகத்திலும் குறையில்லை. எல்லாவற்றையும் தூங்கச் செல்வதற்கு முன்பாக இணக்கமாக செய்து முடித்துவிட்டு தனித் தனியே தூங்கச் சென்றுவிடுவோம். தலையணை பேச்சுகள், தழுவிக் கொள்வது, ஒன்றாக சாப்பிடுவது போன்ற எல்லா சந்தோஷமும் எங்களிடமும் இருக்கத்தான் செய்கிறது” என்கிறார்கள் அவர்கள்.

வரலாற்று ரீதியாகவும் இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. விக்டோரியா மகாராணி காலத்தில் கணவனும் – மனைவியும் தனித்தனி படுக்கையறையில் துயில்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்திருக் கிறது. ராணிகூட தனியறையில் துயில்கொள்ளும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். முகலாயர் காலத்திலும் படுக்கைஅறையை பிரிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அக்பர், பதேபூர் சிக்ரியில் அரண்மனை கட்டியபோது, பெண்களுக்கான பகுதியை கட்டுமானம் செய்யும் பொறுப்பை நிர்வகிக்க ஷெனானா என்ற பெண்ணையே நியமித்திருந்தார். அக்பர் துணைவியரின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்றாலும், தனி படுக்கையறை வழக்கத்தையே கையாண்டிருக்கிறார்.

இப்போதும் நிறைய பேர் இந்த வழக்கத்தை கடைப் பிடிக்கிறார்கள். ராணுவ அதிகாரி ரவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டது) 27-வது திருமணநாளை இந்த வருடம் கொண்டாடினார். அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தனி அறையிலேயே தூக்கம் கொள்கிறார்கள். “ஏதோ மனக்கசப்பிலோ, கட்டுப்பாடு விதித்துக் கொண்டோ இப்படி தனியறையில் நாங்கள் படுக்கவில்லை. சுமுகமாகவே வாழ்கிறோம். தேவையான இடைவெளிவிட்டு சீராக செல்கிறோம்” என்கிறார் கேப்டன்.

பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தும் முகர்ஜி சொல்கிறார், “நான் தினமும் இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கையறைக்குச் சென்றுவிடுவேன். என் மனைவி 11 மணிக்குத்தான் படுக்கைக்கு செல்வார். நான் காலையில் 5 மணிக்கு எழுந்துவிடுவேன். ஆனால் மனைவி எழுவதற்கு சில மணி நேரம் தாமதம் ஆகும். நாங்கள் எங்கள் சவுகரியத்திற்கு ஏற்ற படுக்கை அறை முறையை பின்பற்று கிறோம். அதற்காக எங்களுக்குள் எவ்வித மோதலும் இல்லை” என்கிறார். இவர் இரண்டு குழந்தைகளின் தந்தை.

சராசரியாக 40 வயதைத் தொடும் தம்பதிகள் பெரும்பாலும் தனியறை தூக்கத்தையே விரும்புகிறார்களாம். ஒருவித புரிதலுடன் இதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்களாம். குறிப்பாக பெண்கள் குழந்தைகளின் நலன்கருதியும், ஆண்கள் தங்கள் பணி நிமித்தமாகவும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பழக்கம் மனோரீதியாகவும் சில நல்ல பலன்களைத் தரும் என்று உளவியலாளர்கள் கூறு கிறார்கள். கூடவே “இத்தகைய முடிவு தம்பதிகளுக்கு இடையே இணக்கத்தையும், உற்சாகத்தையும் தரக் கூடியதாக இருக்க வேண்டும். மூன்றாம் நபர் வாழ்க்கையில் நுழையும் வகையான மாற்றத்தை இது ஏற் படுத்திவிடக்கூடாது” என்று எச்சரிக்கைமணியும் அடிக்கிறார்கள்.

தனித்தனி அறையில் கணவன்-மனைவி துயில்கொள்வது, சந்தேகத்தையும், தவறான தொடர்பையும், பிரிவினைகளையும் வளர்க்குமோ என்ற சந்தேகம் பலருக்கு எழும். அதற்கு கேப்டன் ரவி, ஒரு விளக்கம் தருகிறார், “நாம் தூக்கத்தின் இடையே எழுந்து எதையும் பேசப்போவதில்லை. நல்ல நண்பர்கள், உறவு களைக்கூட அடிக்கடி சந்திப்பதில்லை. ஆனால் அவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியும், அன்பும் பெருக்கெடுப்பதில்லையா? அது போன்றதுதான் கணவனும், மனைவியும் தனித்தனி அறைகளில் தூங்குவதும்” என்கிறார் அவர்.

படுக்கையறையில் மட்டுமல்ல குளியல் அறை மற்றும் இதர இடங்களிலும் தங்களுக்கான தனிப்பகுதியை விரும்பும் தம்பதிகளும் இருக்கிறார்கள். சினிமா தயாரிப்பாளர்களான பாஸ்ரிச்சா, பங்கஜ் தாக்கூர் போன்றவர்கள் தங்களுக்கு குளியல் அறையிலும் தனியிடம் அவசியம் வேண்டும் என்பதை உறுதி செய் கிறார்கள். அவர்கள் தனித்தனி ஷவரில்தான் குளிக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அப்படித்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

“நாம் கப்போர்டு, பிளேட், பேனா என்று பலவற்றை தனித்தனியாக வைத்திருக் கும்போது தனி குளியலறை, படுக்கையறை வைத்துக் கொள்வதில் என்ன தவறு..” என்று சொல்லும் அவர்கள், “எங்களுக்குள் எந்த கருத்து மோதலும் இல்லை, ரொமான்சிலும் குறையில்லை, ஒருவர் மற்றவர் அறைக்கு கதவைத் தட்டிவிட்டு செல்லும் அளவுக்கும் எங்களுக்குள் இடைவெளியும் இல்லை” என்கிறார்கள்.

இவர்களைப்போலவே இந்தி திரை நட்சத்திரங்கள் பராகான் – ஷிரிஸ் குந்தர், இர்பான்கான் – சுதபா சிக்தர், அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் ஆகியோர் தனித்தனி படுக்கையறை வழக்கத்தையே பின்பற்றுகிறார்கள். “குழந்தை ஆரத்யா பிறந்த பிறகு நான் தனியறையிலேயே தூங்குகிறேன்” என்று அபிஷேக் பச்சன் வெளிப் படையாகவே கூறி உள்ளார்.

Post expires at 2:49am on Monday February 6th, 2017