முதல்வராக பதவி ஏற்பதை தள்ளி போட்டார் சசி! அதிகாரத்தை கைமாற்ற அதிரடி திட்டம்!

முதல்வராக பதவி ஏற்பதை தள்ளி போட்டார் சசி! அதிகாரத்தை கைமாற்ற அதிரடி திட்டம்!

0 640
முதல்வராக பதவி ஏற்பதை தள்ளி போட்டார் சசி! அதிகாரத்தை கைமாற்ற அதிரடி திட்டம்!


தமிழக முதல்வா் ஜெயலலிதா இறந்த பின்பு அவரது பொது செயலாளா் பதவிக்கு சசிகலாதான் வரவேண்டும் என்று அனைத்து சீனியா்கள் கோரிக்கை வைத்தனா்.

இதனை தொடா்ந்து சசிகலா குடும்பத்தினா் அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினரை சந்தித்து ஆதவும் திரட்டினா்.

பொதுக்குழுவில் சின்னம்மாதான், இனி அம்மா என்கிற முடிவு எடுத்து அவரை பொதுச் செயலாளராக தோ்வு செய்தனா்.

சில தினங்களில் அவா் அமைதியான முறையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில்  பொதுச் செயலாளராக பதவியும் ஏற்றார்.

மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்தும் வருகிறார். ஜல்லிகட்டு பிரச்சனையில் திமுக செயல்தலைவா் ஸ்டாலின்  விடுத்த அறிக்கைக்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் அவா் முதல்வராக பதவி ஏற்கும் எண்ணம் தற்சமயம் இல்லை என்று கூறப்படுகிறது.

முதல்வர் பதவி மீது சசிகலாவுக்கு ஒரு கண் இருக்கிறது. இதற்காக, பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து இறங்குமாறு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயக்குமார், தம்பிதுரை மூலம் நெருக்கடி கொடுத்தார்.

ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கிற ஆள் நான் இல்லை என்பது போல, பன்னீர்செல்வம், தன்னிச்சையாக முதல்வர் பதவியில் தொடர்கிறார்; வேகமாக செயல்படுகிறார்.

சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு,விரைவில் வெளியாகப் போகும் தகவல் வந்து, சசிகலாவை டென்ஷன் ஆக்கி உள்ளது.

குதூகலமாக இருந்த போயஸ் தோட்டம், சில நாட்களாக அமைதியாகி உள்ளது.  தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால், கனவுகள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்று, சசிகலா தரப்பினர் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனால், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து பதவி இறங்கச் சொல்வது உள்ளிட்ட பலவேறு பணிகளையும், தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தீர்ப்பால் முதல்வர் கனவு கலைந்தால், டி.டி.வி.தினகரனிடம் அனைத்து அதிகாரங்களையும் தரலாம் என சசிகலா எண்ணியுள்ளார்.

இப்போதே போயஸ் கார்டனில் அனைத்து அதிகாரங்களுடன் தினகரன் வலம் வருகிறார். கட்சியை வழி நடத்தும் பொறுப்பையும் தினகரனிடமே தரலாம் எனவும் சசிகலா எண்ணுகிறார். இவ்வாறு கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post expires at 4:28pm on Sunday February 5th, 2017