சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பேத்தி கடத்தல்!

சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பேத்தி கடத்தல்!

0 122
சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பேத்தி கடத்தல்!


அரும்பாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பேத்தியும் தொழில் அதிபரின் மனைவியுமான ஹாசினி என்ற ஒன்றரை வயது குழந்தையை வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் பியூலா கடத்தி சென்றுள்ளார். இதனை கண்ட குழந்தையின் தாய் போலீசில் புகார் அளித்தார்.

இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை கண்டுபிடிக்க சென்னை நகரம் முழுவதும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஓட்டேரியில் சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் நடந்து சென்றுள்ளார்.

இதனை பார்த்த போலீசார் பெண்ணிடம் விசாரித்தபோது பணத்திற்காக கடத்தியதை பியூலா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Post expires at 4:17pm on Sunday February 5th, 2017