புத்தாண்டு பிரார்த்தனையை தவறவிட்ட எலிசபெத் மகாராணி!

புத்தாண்டு பிரார்த்தனையை தவறவிட்ட எலிசபெத் மகாராணி!

0 131
புத்தாண்டு பிரார்த்தனையை தவறவிட்ட எலிசபெத் மகாராணி!


கடுமையான சளித் தொல்லையால் அவதிப்பட்டுவரும் இரண்டாம் எலிசபெத் மகாராணி கிறிஸ்துமஸ் பிரார்த்தனையை போன்று புத்தாண்டு பிரார்த்தனையையும் தவறவிட்டுள்ளார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக கடந்த வாரம் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் அவர் கலந்துகொள்ளவில்லை.

புத்தாண்டு பிரார்த்தனையில் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், புத்தாண்டை ஒட்டி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் எலிசபெத் மகாராணி கலந்துகொள்ளவில்லை.

அவர் சார்பாக அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் இளவரசர் பிலிப் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு ஆராதனைகளில் கலந்து கொண்டுள்ளார்.

கடுமையான சளித் தொல்லையால் அவதிப்படுவதால் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார் 90 வயதாகும் இரண்டாம் எலிசபெத் மகாராணி.

இதனிடையே எலிசபெத் மகாராணி உடல்நலம் தேறி வருவதாகவும், சில நாட்கள் ஓய்வு தேவை என்பதால் புத்தாண்டு பிரார்த்தனையில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று இளவரசி ஆன் தெரிவித்துள்ளார்.

இளவரசி ஆன் தமது கணவர் திமொத்தி லாரன்ஸுடன் புத்தாண்டு பிரார்த்தனையில் கலந்து கோண்டிருந்தார். மட்டுமின்றி இளவரசர் எட்வர்ட் தமது மகளுடன் கலந்து கொண்டார்.

 

Post expires at 1:58am on Thursday February 2nd, 2017