குப்பை தொட்டியில் ஜெயலலிதா: இதுதான் அதிமுகவினரின் விசுவாசமா?

குப்பை தொட்டியில் ஜெயலலிதா: இதுதான் அதிமுகவினரின் விசுவாசமா?

0 263
குப்பை தொட்டியில் ஜெயலலிதா: இதுதான் அதிமுகவினரின் விசுவாசமா?


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில் புதுவருடம் பிறக்கும் போது அவர் புகைப்படம் அச்சடிக்கப்பட்ட காலண்டர்களை அதிமுக கட்சி நிர்வாகிகள் அச்சடிப்பது வழக்கம்.

அச்சடிக்கப்படும் அந்த காலண்டர்கள் கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் வழங்கப்படும்.

அதே போல ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவர் மீண்டும் வீடு திரும்புவார் என நினைத்த அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதா புகைப்படம் போட்ட 2017ம் வருட காலண்டருக்கு ஆர்டர் கொடுத்திருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி அவர் இறந்ததையொட்டி அவசர அவசரமாக காலண்டர்கள் தயாரிக்கும் மையங்களுக்கு போன் செய்த அதிமுகவினர் ஜெயலலிதா முழு புகைப்படம் போட்ட காலண்டர் வேண்டாம்

அதற்கு பதில் சின்னம்மா என “திடீரென” அதிமுக பெரும் தலைகளால் அழைக்கப்படும் சசிகலா படத்தை பெரிதாகவும், ஜெயலலிதா படத்தை சிறிதாகவும் போட்டு காலண்டரை செய்ய வலியுறுத்தினார்கள்.

இதனால் ஏற்கனவே ஜெயலலிதா புகைப்படம் போட்டு தயாரான காலண்டர்கள் தற்போது பல இடங்களில் குப்பை மேடுகளில் கட்டு கட்டாக இருப்பதை காணமுடிகிறது.

Post expires at 8:32am on Thursday February 2nd, 2017