புத்தாண்டு கொண்டாட்டம்: மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய பாசக்கார தந்தை

புத்தாண்டு கொண்டாட்டம்: மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய பாசக்கார தந்தை

0 511
புத்தாண்டு கொண்டாட்டம்: மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய பாசக்கார தந்தை


பிரேசில் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தந்தை ஒருவர் ஆத்திரத்தில் தமது மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் காம்பினாஸ் நகரில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் குடியிருந்து வரும் 41 வயதான இசமார பில்லர் என்பவர் தமது கணவர் சிட்னே ராமிஸ்(46) என்பவரை பிரிந்து தமது மகனுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் மகனை தமக்கு விட்டுத்தருமாறு சிட்னே பலமுறை தமது முன்னாள் மனைவியிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார். ஆனால் எக்காரணம் கொண்டும் மகனை விட்டுத்தர முடியாது என இசமாரா உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று இசமாரவின் இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது துப்பாக்கியுடன் நுழைந்த சிட்னே அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் இசமரா மற்றும் அவர் மகன் உள்ளிட்ட 12 பேர் சம்பவயிடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி திடிக்க உயிரிழந்துள்ளனர்.

தொடர் துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வானவேடிக்கை என முதலில் கருதியுள்ளனர். பின்னரே அது துப்பாக்கி சத்தம் எனவும், சம்பவம் நடந்த குடியிருப்பு நோக்கி விரைந்தும் உள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து வந்த பொலிசார் காயமடைந்து உயிருக்கு போராடிய 15 நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களை உடல்களை மீட்டு உடற்கூறு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்தின்போது 2 பேர் அங்கிருந்து தப்பி குளியல் அறைக்குள் புகுந்து உயிர் தப்பியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தப்படுவதன் முன்னர் பதிவு செய்த ஓடியோ பதிவு ஒன்றை தமது மகனது காரின் உள்ளே வைத்துள்ளார். அதில் நடக்கவிருக்கும் சம்பவத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளார் அந்த பாசக்கார தந்தை.

Post expires at 1:52am on Thursday February 2nd, 2017