உயிராய் நேசித்த ரசிகனுக்காக சமந்தா செய்த ஒரு காரியம்..! 2கோடி இழந்தார்..ஐயோ..!

உயிராய் நேசித்த ரசிகனுக்காக சமந்தா செய்த ஒரு காரியம்..! 2கோடி இழந்தார்..ஐயோ..!

0 1572
உயிராய் நேசித்த ரசிகனுக்காக சமந்தா செய்த ஒரு காரியம்..! 2கோடி இழந்தார்..ஐயோ..!


‘நான் ஈ’ படம் வந்து பட்டையைக் கிளப்பியபோது சந்தாவின் புகழ் எங்கேயோ போனது. அந்தப் படத்தில் மிகவும் அழகாக இருப்பார் சமந்தா.

சொக்கிப் போனார்கள் இந்திய ரசிகர்கள்.பாகுபலி இயக்குனரின் படம் அது. அந்தப் படம் தான் சீனிவாச ராவுக்கு முதல் சமந்தா படம். அதற்கு முன்பு சமந்தா படம் அவர் பார்த்ததே இல்லை.

ஆந்திராவின் வோங்கல் பகுதியில் வசிப்பவர். மென்பொருள் பணியாளர்.நான் ஈ படத்திற்கு பின்   சமந்த படம் தேடி தேடித் பார்க்க ஆரம்பித்தார்.

கட்டினால் சமந்தா போலவே ஒரு பெண்ணைப்  பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.அவர்  வீட்டில் நொந்து விட்டனர்.

கல்யாண புரோக்கரிடம் சமந்தா முகத்தோற்றம் உள்ள பெண்ணை தேடச்சொல்லி அனுப்பினார்கள். புரோக்கர் நொந்து நூலாகி தேட ஆரம்பித்தார்.

சமந்தா பிறந்த நாளுக்கு சீனிவாச ராவ் கேக் வெட்டிக் கொண்டாடுவார். அதை ஏதாவது ஒரு ஹோட்டலில் பார்ட்டி     வைப்பார்.

இப்படி பைத்தியமாக இருப்பது மீடியா நண்பர்கள் மூலமாக பத்திரிகைகளில் செய்தியாக வந்து பரபரப்பானது.

ஒருநாள் வயிறு வலி.. என்று மருத்துவமனை சென்றார். உடல் பரிசோதனையின் முடிவில் இறைப்பை கேன்சர் என்று தெரிந்தது.

ஆடிப் போனார் சீனிவாசராவ். குடும்பமே நொறுங்கிப் போனது. வீட்டில் முடங்கிப் போனார். எப்போதும் சமந்தா  படங்கள் பார்த்தபடி பொழுதைப் போக்கினார்.

கல்யாணம் வேண்டாம் என்று கூறியவர், சாவதற்கு முன்பு சமந்தா திருமணத்தைப்  பார்க்க வேண்டும் என்று கூற ஆரம்பித்தார்.

இந்த விஷயம் சமந்தாவிற்கு சொல்லப் பட துடித்துப் போனார். உடனடியாக ஹைதராபாத் பி ஆர்.ஓ மூலமாக  வரச்சொல்லி அனுப்பினார்.

சீனிவாசராவுக்கு அவ்வளவு வலி துன்பத்திலும் தனது கனவுக் கன்னியைப் பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சி.

குடும்பத்தோடு கிளம்பினர். ஏர்ப்போர்ட்டுக்கு கார் வந்தது. ஆடிப் போனார்கள். பெரிய ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தங்க வைக்கப் பட்டனர்.

மாலையில் வந்தார் அந்த கனவு தேவதை.முடியெல்லாம் கொட்டி உருக்குலைந்து  போய் இருந்தார் சீனிவாசராவ்.

கண்கள் கலங்கிப் போனார் சமந்தா. கேக் வந்தது அவர் முன்பு கேக் வெட்டி சீனிவாச ராவிற்கு ஊட்டி விட்டார் சமந்தா.

கதறி அழுது விட்டார் சீனிவாசராவ். அடுத்த நாள் ஷூட்டிங் அழைத்துப் போனார்கள்.அங்கும் சீனிவாச ராவிற்கு ஏக மரியாதை.

மூன்றாம் நாள் அவர்களை வழி அனுப்பி வைத்தார் சமந்தா. அடுத்த ஆறு மாதங்களில் சீனிவாச ராவ் இறந்து போனார்.

தகவல் தெரிந்த சமந்தா கேரவன் வேனில்  போய் அமர்ந்து கொண்டார். இரண்டு மணி நேரங்கள் கழித்தே வெளியே வந்தார் என்கிறார்கள்.

அந்தப் படம் முடிந்தும் தனது ரசிகர் நினைவாக கேன்சர் நோயாளிகளுக்கு உதவ, தனது தலை முடியை கொடுத்து விட்டார்.

ஒரு படமே கையை விட்டுப் போனது என்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலையே பட வில்லை அந்த மனிதம் நிறைந்த தேவதை.!

Post expires at 11:09am on Wednesday February 1st, 2017