தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

0 507
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?


உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? இதற்காக எத்தனையோ எண்ணெய்கள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். கெமிக்கல் கலந்த செயற்கை மருந்துகளின் மூலம் தலைமுடியை வளர்க்க நினைத்தால் முடியுமா? இயற்கை வழியை நாடுங்கள், இதனால் நிச்சயம் தலைமுடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

இதுவரை நாம் பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, முடி நன்கு வளரும் என்று பார்த்தோம். இப்போது இஞ்சியை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி வளரும் என்று பார்ப்போம்.

ஸ்டெப் #1 முதலில் இஞ்சியை சிறிது எடுத்து தோலுரித்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி சாறு எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் அவகேடோ பழ எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, இஞ்சி சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3 பின்பு அத்துடன் 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனால் தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம் பாதிக்கப்பட்ட முடியின் முனைகளை சரிசெய்யும், ஸ்கால்ப்பை சுத்தம் செய்யும் மற்றும் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும்.

ஸ்டெப் #5 அடுத்து தலைமுடியில் உள்ள தேவையற்ற சிக்கை சீப்பு கொண்டு எடுத்துவிட வேண்டும்.

ஸ்டெப் #6 பின் தயாரித்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #7 45 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு, தலைமுடியை அலச வேண்டும்.

ஸ்டெப் #8 இறுதியில் துணியால் தலையில் உள்ள அதிகப்படியான நீரை எடுக்க வேண்டும். முக்கியமாக அப்படி செய்யும் போது துணியால் தலைமுடியைத் தேய்க்கக் கூடாது. அது தலைமுடியில் வெடிப்பை உண்டாக்கும்.

Post expires at 10:06am on Tuesday January 31st, 2017