இந்தியாவில் 2016-ன் நிகழ்வுகள் 2017-இல் எப்படி தாக்கம் ஏற்படுத்தும் தெரியுமா..?

இந்தியாவில் 2016-ன் நிகழ்வுகள் 2017-இல் எப்படி தாக்கம் ஏற்படுத்தும் தெரியுமா..?

0 140
இந்தியாவில் 2016-ன் நிகழ்வுகள் 2017-இல் எப்படி தாக்கம் ஏற்படுத்தும் தெரியுமா..?


2016-ம் ஆண்டு இன்னும் ஏழு நாட்களில் முடிவுக்கு வருகின்றது. உலகில் எது மாறுகின்றதோ இல்லையோ காலம், நேரம், ஆண்டு அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும்.

2017-ம் ஆண்டிற்காக 2016 வர்த்தகத்தில் பலவற்றை விட்டுச் சென்றுள்ளது. அதில் சிலவற்றை என்னென்ன அவை 2017-ம் ஆண்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இங்குப் பார்ப்போம்.

2016-ம் ஆண்டு அரசு எடுத்த மிகப்பெரிய முயற்சியான கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருதற்கான முயற்சியாகக் கூறப்படும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திட்டத்தை அறிவித்தது.

அதற்கு மாற்றாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது. ஆனால் நவம்பர் 2016 ஆரம்பித்த இதற்கான பணிகளால் இன்று வரை ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டில் மக்கள் சிக்கித் தவித்துவருகின்றனர்.

2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பு ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு முழுமையாகக் குறைக்கப்படும் என்று கூறும் மத்திய அரசு இன்னொரு பக்கம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்து வலியுறுத்தி வருகின்றது.

கள்ள பணத்தில் ஆரம்பித்த செல்லா ரூபாய் நோட்டு பிரச்சனை இன்று கருப்பு பணத்தைத் தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்தனை என்ற முழக்கங்களுடன் பயணித்து வருகின்றது.

2017-ம் ஆண்டு இந்தியா எந்த அளவிற்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஆதிக்கம் செலுத்த போகின்றது, இதற்கு அரசு தங்களது நிர்வாகம் மற்றும் நிறுவனங்களை டிஜிட்டல் முறையில் எப்படி மாற்றப் போகின்றது, கிராமப் புற மக்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர், அரசு பணமில்லா பரிவர்த்தனைக்காகக் கிராம மக்களுக்கு அளிக்க உள்ள பயிற்சி எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது வரை பல தாக்கங்கள் ஏற்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் ஜிஎஸ்டி குறித்து இன்னும் சில உடன்படிக்கைகள் ஏற்றுக்கொள்ள படாடஹ் நிலையில் 2017 ஏப்ரல் மாதத்திற்குள் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்குக் கொண்டு வரும் என்று அறிவித்தது.

ஜிஎஸ்டி என்பது ஒரு நாடு ஒரே வரி என்பதற்கான முதல் படியாக பார்க்கப்பட்டு வருகின்றது. ரூபாய் நோட்டுகள் சிக்கல் மற்றும் இன்னும் ஜிஎஸ்டி-க்கான விதிகள் பொன்றவை இன்னும் முடிவு செய்யப்படாததால் செப்டம்பர் வரை கால தாமதம் ஆகலாம் என்றும் கூறப்பட்டுவருகின்றது.

இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இந்த நிறுவனத்தைப் போன்று எதிர்ப்புகளைச் சந்தித்த நிறுவனங்கள் என்று வேறு ஏதும் இருக்காது. வெல்க்கம் ஆஃபர் என்ற பெயரில் சோதனை அலைவரிசையை வைத்துக்கொண்டு டிசம்பர் 2016 வரை இலவசமாக இணையம் மற்றும் அழைப்புகளைச் செய்துகொள்ளலாம் என்று அறிவித்த இந்த நிறுவனம் ஆஃபரை மார்ச் 2017 வரை அதிகரித்து அறிவித்துள்ளது.

இதனால் 2017-ம் ஆண்டு இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகருக்கும் என்று எதிர்பார்க்கிறது. 2017-ம் ஆண்டு இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்குப் பெறும் போட்டியாக இந்த நிறுவனம் இருக்கும் என்று கூறினால் அது மிகை அல்ல.

அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் இருந்து இயங்கும் நிறுவனங்களுக்கு 35 சதவீதமாக இருந்த கார்ப்ரேட் வரியை 15 சதவீதமாகக் குறைத்துள்ளதால் இந்தியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் இங்குத் தனது நிறுவனங்களின் கிளைகளை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதனால் இந்தியாவில் பெறும் அளவில் வேலைத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரம் இந்தியாவில் ஏற்படுத்தப் பட இருக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு அமெரிக்க அரசு இணைந்து செயல்படு ஒத்துழைப்பு தந்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் உள்ள சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதால் இந்திய நிறுவனங்களுக்கு நல்ல சாதகமான முடிவாக உள்ளதாகவும், இந்திய அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும் என்றும் கூறப்படுகின்றது.

Post expires at 9:58am on Tuesday January 31st, 2017