மருத்துவத்திற்கு உதவும் சில்லி புட்டி!

மருத்துவத்திற்கு உதவும் சில்லி புட்டி!

0 106
மருத்துவத்திற்கு உதவும் சில்லி புட்டி!


சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது, ‘சில்லி புட்டி.’ களிமண் போன்ற தன்மை உடைய இதை, விரும்பிய வடிவத்தில் வார்த்தெடுக்கவும், வடிக்கவும் முடியும். இதை மருத்துவ உலகிலும் பயன்படுத்த முடியும் என்கிறார், இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் யங்.பாலிமர் வகையை சேர்ந்த சில்லி புட்டியுடன், உலகின் மிக வலுவான பொருளாகக் கருதப்படும், ‘கிராபீன்’ சேர்த்து, ‘ஜி புட்டி’ என்ற ஒரு பொருளை ராபர்ட் உருவாக்கியிருக்கிறார். ஜி புட்டியும் களிமண் தன்மை உடையது என்றாலும், அது, அழுத்தம் மற்றும் மின் சக்தி மாற்றங்களை, மிக நுட்பமாக உணரும் தன்மை இருப்பதை ராபர்ட் கண்டறிந்துள்ளார். ‘கம்போசிஸ்ட் எனப்படும் கலவைப் பொருட்கள் பலவற்றை, விட மிகவும் நுட்பமான உணர்வான் தன்மை ஜி புட்டிக்கு இருப்பதால், இது மருத்துவத் துறையில் நோயாளிகளின் உடல் நலனை அறியும் கருவிகளுக்கு உணர்வான்களாக பயன்படுத்த முடியும்’ என, ராபர்ட் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Post expires at 10:20am on Monday January 23rd, 2017